தந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 3:
'''தந்தி''' ''(Telegraph)'' எனப்படுவது ஓரிடத்திலிருந்து தொலைவில் உள்ள வேறோர் இடத்திற்கு விரைந்து செய்தியனுப்பப் பயன்படுத்தப்படும் கருவி ஆகும். இதில் செய்திகளை அனுப்ப எந்தவொரு பொருளும் எடுத்துச் செல்லப்படுவதில்லை. முன்னதாக கொடிகளை அசைத்தோ தீப்பந்தங்கள் மூலமாகவோ அனுப்பப்படுவது ஒருவகை தந்தியே ஆகும்; ஆனால் புறாக்கள் மூலமாக தூது விடுதல், அவை மடல்களைத் தாங்கிச் செல்வதால், தந்திமுறை இல்லை.
 
இதில் சங்கேத முறையில் அனுப்பப்படும் செய்தியைப் பெற அனுப்புநரும் பெறுநரும் இந்த குறிமுறையை அறிந்திருக்க வேண்டும். இந்தக் குறிமுறை அமைப்பு அனுப்பப்படும் [[ஊடகம்|ஊடகத்தைப்]] பொறுத்து அமையும். புகை குறிப்பலைகள், எதிரொளிக்கப்பட்ட ஒளிகள், தீப்பந்தங்கள்/கொடிகள் மூலம் துவக்க காலத்தில் செய்திகள் அனுப்பப் பட்டு வந்தன. 19வது19ஆம் நூற்றாண்டில் [[மின்சாரம்]] கண்டறியப்பட்ட பின்னர் இந்தக் குறிப்பலைகளை [[மின்சாரத் தந்தி]] மூலம் அனுப்ப முடிந்தது. 1900களின் துவக்கத்தில் [[வானொலி]] கண்டுபிடிப்பு [[வானொலித் தந்தி]]யையும் பிற கம்பியில்லாத் தந்தி முறைகளையும் கொணர்ந்தது. [[இணையம்]] வந்த பிறகு குறியீடுகள் மறைந்திருக்க இயற்கை மொழியிலேயே இடைமுகம் கொண்ட [[மின்னஞ்சல்]]கள் , [[குறுஞ் செய்திகள்]], [[உடனடி செய்தி]]கள் வந்த பிறகு வழமையான தந்திப் பயன்பாடு குறைந்துள்ளது.
 
மின்சாரத் தந்தியில் கருவிகள் மின்காந்த சக்தியின் துணைகொண்டு இயக்கப்படுகின்றன. இக்கருவியை 1837 ஆம் ஆண்டு [[ஐக்கிய அமெரிக்கா]]வைச் சேர்ந்த [[சாமுவெல் மோர்சு]] என்பவர் கண்டுபிடித்தார். அதனாலேயே இக்கருவியும் அவர் பெயராலேயே 'மோர்சு தந்தி' என அழைக்கப்படுகிறது. தந்திச் செய்தியை அனுப்புவதற்கும் மறு முனையில் பெறுவதற்கும் தனித்தனியே இரு முனைகளில் கருவிகள் உண்டு. தந்திச் செய்தி 'மோர்சு சாவி' எனப்படும் கருவி மூலம் ஒரு முனையிலிருந்து அனுப்பப்படுகிறது. மறுமுனையில் அச்செய்தி 'மோர்சு ஒலிப்பான்' எனும் கருவி மூலம் பெறப்படுகிறது.
வரிசை 72:
 
==உசாத்துணை==
*[[மணவை முஸ்தபா]], 'இளையர் அறிவியல் களஞ்சியம்' மணவை பதிப்பகம் வெளியீடு. 1995
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது