சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 56:
 
==கோயிலும், அதன் பகுதிகளும்==
கோயிலின் தென்பகுதியில் சங்கரலிங்கப் பெருமான் சந்நிதி அமைந்துள்ளது. வட பகுதியில் [[கோமதி அம்மன்|கோமதி அம்பிகை]] சந்நிதி அமைந்துள்ளது. இவ்விரண்டு சந்நிதிகளுக்கும் தனித்தனிக் கருப்பக் கிரகம், அர்த்த மண்டபம், அந்தராள மண்டபம், மணி மண்டபம், மா மண்டபம், பரிவார மண்டபம், சுற்று மண்டபங்கள் இருக்கின்றன. தென் பகுதியில் உள்ள சங்கரலிங்கப் பெருமான் சந்நிதியில் கொடிமரம், பலிபீடம், உத்திராட்சத் தொட்டில் ( மேல் நோக்கிப் பார்த்தல் வேண்டும் ) ) தாண்டி உள்ளே செல்ல முகப்பில் அதிகார நந்தியும் சுயஜா தேவியும் அமைந்திருக்கின்றன. கீழப் பிரகாரம் வலதுபுறத் தூணில் இக்கோயிலைக் கட்டிய [[உக்கிர பாண்டியன்|உக்கிர பாண்டிய]] அரசன் உருவச் சிலையும் இடதுபுறத் தூணில் உமாபதி சிவமும் நின்று வணங்கும் கோலத்தில் தோற்றமளிக்கின்றனர். தெற்குப் பிரகாரத்தில் சைவ சமய குரவர், [[மாணிக்க வாசகர்]], [[திருநாவுக்கரசர்]], [[திருஞான சம்பந்தர்]], [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தி]] ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். இதனைத் தொடர்ந்து [[திருத்தொண்டர் புராணம்|திருத்தொண்டர்]] புராணமியற்றிய [[சேக்கிழார்]] சுவாமிகள், மகா விஷ்ணு, அறுபத்து மூன்று நாயன்மார்கள், சுரதேவர், காந்தாரி, பிரம்ம சக்தி, ஈச சக்தி, குமார சக்தி, விஷ்ணு சக்தி, வரஹா சக்தி, இந்திர சக்தி, சாமுண்டி சக்தி எழுந்தருளியுள்ளனர். அடுத்து சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி இருக்கின்றார். வடக்குப் பிரகாரம் தென்பக்கம் ஒரு புற்றில் வன்மீகநாதர் இருக்கின்றார். சண்டிகேஸ்வரர் சந்நிதியும் இங்கே உள்ளது. வடபக்கம் சனி பகவான், காசி விசுவநாதர், பைரவர், துர்கா தேவியைக் காணலாம். கீழ்ப் பிரகாரத்தில் சந்திர சூரியர்கள் உள்ளனர்.
 
சங்கரலிங்கப்பெருமானின் மற்றொரு சிறப்பு. ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் 21, 22, 23 தேதிகளில் சூரிய ஒளி மானுடர்கள் சென்று தரிசனம் செய்யும் வாசல்கள் வழியாகவே நீள வாக்கில் சென்று, லிங்கத்தின் வலப்புறமாக விழத்துவங்கி சிறிது சிறிதாக நகர்ந்து சிவலிங்கத் திருமேனி முழுவதும் வியாபிக்கும். சிலசமயம் நான்கு நாட்கள் கூட விழும். இது போன்ற கோயில்கள் தமிழ் நாட்டில் சில உள்ளன. நான்கு நாட்கள் சூரியக் கதிர்கள் தவறாமல் விழும் களக்காடு கோவிலை உதாரணமாகக் கூறலாம்.
 
 
சங்கரனார் கோயில் ஓர் அழகிய கோயில். மகா மண்டபத்தைச் சுர்றி பல திருவுருவங்கள் நான்கு பக்கங்களிலும் செதுக்கப்பட்டிருக்கின்றன. உருவங்கள் சிறிதெனினும் சிற்பச் செறிவு பாராட்டத்தக்கது. அவையாவன : துவாரபாலகர், யோக நரசிம்மம், கார்த்த வீரியன், தசகண்ட இராவணன், ஹிரண்ய சம்ஹார மூர்த்தி, கணபதி, வீணா காளி, பத்திரகாளி, மாறியாடும் பெருமாள், அகோர வீரபத்திரர், நடராஜர், துவாரபாலகர் 2, ரிஷபாரூடர், உபதேச தஷ்ணமூர்த்தி, ருத்ர மூர்த்தி, ஐம்முகப் பிரம்மா, ஸிம்ஹவாஹன கணபதி, ஸ்ரீ இராமர், மன்மதன், வெங்கடாசலபதி, செண்பக வில்வவாரகி, சங்கரநாராயணர், சந்திர சேகரர், துவார பாலகர் 2 , உக்கிரபாண்டிய அரசர், ஸிம்ஹாசனேஸ்வரி, மஹாவிஷ்ணு, பாலசுப்பிரமணியர், துர்க்காதேவி, ஸ்ஹண்முகர், மகிஷாசுர மர்த்தினி, கபாலி, கால பைரவர், ஊர்த்துவ தாண்டவர், தில்லைக்காளி, கஜசம்ஹார மூர்த்தி, தக்ஷசம்ஹார மூர்த்தி, உச்சிட்ட கணபதி, ராமர், லட்சுமணர், பரமேஸ்வரர், மயூராரூடர், மஹா விஷ்ணு, வீரபத்திரர், பைரவர், த்ரிவிக்கிரமர், வாமனாவதாரம், ஹம்சாரூடர், துவாரபாலகர். மேலும், இம்மதிலைச் சுற்றி தென்பக்கம் தக்ஷிணாமூர்த்தி, மேல்பக்கம் நரஸிம்மமூர்த்தி, வடபக்கம் பிரம்மாவும் எழுந்தருளியுள்ளார்கள்,
 
திருக்கோயில் கர்ப்பக்கிரஹத்தில் சங்கரலிங்கப் பெருமான் சிறிய உருவமாயெழுந்தருளியிருக்கிறார். கூடவே மனோன்மணி தேவியும் வீற்றிருக்கின்றாள். மண்டபத்தில் தெற்கு பார்க்க நடராஜ மூர்த்தி ஊன நடனமும், ஞான நடனமும் செய்தருள்கின்ரார்.சிவகாமியம்மையாரும் தாளம் போடுகின்றனர். காரைக்காலம்மையார் கூடவே இத்த்ருக்கூட்டத்தைக் கண்டு ஆனந்தத்தில் மூழ்கி பாடிக்கொண்டிருக்கின்றாள்.,
 
==ஆடித் தபசு==