இயற்கைத் துணைக்கோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
 
புவியின் துணைக்கோள் சந்திரன் ஆகும்.நிலா (நிலவு, அம்புலி, திங்கள், மதி, சந்திரன் என்று பலவாறு கூறப்படும்) (இலத்தீன்: luna) எனப்படுவது பூமிக்கான ஒரேயொரு இயற்கைத் துணைக்கோளும் சூரியக் குடும்பத்திலுள்ள ஐந்தாவது பெரிய துணைக்கோளும் ஆகும். இரவிலே குளிர்வாக ஒளிதரும் இக்கோளத்தை வானிலே காணலாம். இது பூமியின் ஒரே இயற்கையான துணைக்கோள். இது பூமியைச் சுற்றி வர சராசரி 29.32 நாட்கள் ஆகின்றது. இந்த நிலா பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவருவதாகக் கண்டு பிடித்துள்ளார்கள். பூமிக்கும் நிலாவுக்கும் சராசரி தொலைவு 384,403கி.மீ.
 
புவியின் ஈர்ப்பைக் காட்டிலும் நிலவின் ஈர்ப்பு ஆறுமடங்கு குறைவு. பூமியில் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால் புவியில் ஒரு பொருளின் விடுபடு வேகம் (escape speed) அதிகம்; மேலும் புவிப்பரப்பு வெப்பநிலையும் அதிகம் இல்லை. இவ்விரு காரணங்களால் காற்று மூலக்கூறுகள் புவியின் ஈர்ப்பை விட்டு விடுபட முடியாது. சுருங்கக்கூறின், பூமியின் ஈர்ப்பு விசை வளி மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/இயற்கைத்_துணைக்கோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது