நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
பண்டய காலத்தில் நேரத்தை கணக்கிடுவதற்காக நாட்காட்டி உருவாக்கப்பட்டது.நாட்காட்டியை வைத்து ஆண்டுக்கு இத்தனை நாட்கள் என்றும் கணித்தார்கள்.பின்னர் நாட்களுக்கு குறைவான காலத்தை கணக்கிடுவதற்காக சூரியகடிகாரங்கள் உருவாக்கப்பட்டன.சூரிய கடிகாரங்களில் சூரியனின் திசையை பொருத்து நிழல் விழும்,அதை வைத்து நேரத்தை கணக்கிட்டனர்.அதனினும் குறைவான நேரத்தை அளக்க நீர் கடிகாரம்,மணல் கடிகாரம் போன்றவற்றை கண்டுபிடித்தனர்.
 
எகிப்தியர்கள் கி.மு 500 க்கு முன்பே T போன்ற வடிவம் உடைய கருவியை நேரம் அள்க்க பயன்படுத்தினர். T போன்ற வடிவம் உள்ள வளைவு சூரியன் உதிக்கும் திசையில் அமைந்து இருக்கும்.இதில் விழும் நிழலை வைத்து நேரத்தை அளவிட்டார்கள்.இக்கருவியே பின் நாளில் சூரிய கடிகாரமாக பரினாமம் பெற்றது.
 
==நாட்காட்டி வரலாறு==
பழைய கற்காலத்திலிருந்தே நாட்காட்டிகள்(காலண்டர்) பயன்படுத்தப்பட்டது என தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.உலகில் உள்ள அனைத்து கலாச்சார மக்களும் நாட்காட்டி பயன்படுத்தியுள்ளனர்.நாட்காட்டி பயன்படுத்துவது ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது.சந்திர நாட்காட்டியே பழைய நாட்காட்டியாக கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.சந்திர நாட்காட்டியில் சிலர் 12 மதங்களையும்(354),சிலர் 13 மாதங்களையும்(384) ஒரு
வருடமாக பின்பற்றி வந்துள்ளனர்.ஜுலியஸ் சீசர் கி.மு.நாற்பத்து ஐந்தில் முதன் முதலாக சூரிய நாட்காட்டியை பயன்படுத்தியுள்ளார்.ஆனால் அதை பலர் ஏற்க மறுத்தனர்.பின் போப் கிரிகோரி xiii என்பவர் 1582-இல் சீசரின் நாட்காட்டியில் சில மாற்றங்கள் செய்தார்.அக்காலாண்டர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.அதுவே கிரிகோரியன் நாட்காட்டி என்றும் ஆங்கில நாட்காட்டி என்றும் அழைக்கப்படுகின்றது.தற்போது உலகின் பல நாடுகளில் இந்த நாட்காட்டியே கடைபிடிக்கப்படுகின்றது.
 
==அலகு==
"https://ta.wikipedia.org/wiki/நேரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது