இலங்கையின் மாகாண சபைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
 
==வரலாறு==
1987 சூலை 29 இல் கையெழுத்திடப்பட்ட [[இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987|இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின்]] படி அதே ஆண்டு நவம்பர் 14 இல் [[இலங்கை நாடாளுமன்றம்]] தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது.<ref>{{cite web|url=http://www.priu.gov.lk/ProvCouncils/ProvicialCouncils.html|title=Introduction|work=Official Website of the Government of Sri Lanka|publisher=இலங்கை அரசு}}</ref> 1988 பெப்ரவரி 3 இல் ஒன்பது மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. இந்த ஒன்பது மாகாணசபைகளில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு]] மற்றும் [[வட மாகாணம், இலங்கை|வடக்கு]] மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. இவ்விணைப்பு நிரந்தர இணைப்பாக இருப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் 1988 திசம்பர் 31 இற்குள் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.<ref name=tn>{{cite web|url=http://www.tamilnation.co/conflictresolution/tamileelam/87peaceaccord.htm|title=Indo Sri Lanka Agreement, 1987|publisher=TamilNation}}</ref> 1988 செப்டம்பர் 2 இல் இரு மாகாணங்களும் [[வடக்கு கிழக்கு மாகாண சபை]] என்ற பெயரில் இணைக்கப்பட்டன.<ref name="lnp"/>
===நோக்கம்===
மாகாண சபைகள் அமைக்கப்பதற்கான நோக்கம் என்னவென இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் முகவுரையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
# இலங்கையின் இறைமையையும், தன்னாதிக்கத்தையும் ஒற்றை ஆட்சியையும் பாதுகாப்பதற்காகவும்,
# இலங்கையில் பல்லின மக்கள் [[சிங்களவர்]], [[இலங்கைத் தமிழர்|தமிழர்]], [[இலங்கைச் சோனகர்|முசுலிம்கள்]], [[பரங்கியர்]] வாழும் நாடாதலாலும், பல மொழி பேசும் ஒரு நாடாக ஏற்றுக் கொள்வதாலும்,
# பல்லின மக்கள் வாழ்வதால் அவ்வவ் இனத்திற்கு வெவ்வேறான மொழி, கலாசாரம், என்பன உண்டு என்பதை அங்கீகரிப்பதாலும்,
# தமிழ் மொழி பேசுபவர்கள் இலங்கையின் ஏனைய மக்களுடன் ஒன்றாகக் கலந்து வசிப்பதுடன், வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையாக வசிப்பதால் அவ்வடக்கு கிழக்கு அவர்களது பூர்வீக பூமி என ஏற்றுக் கொள்வதாலும்,
# இலங்கை சுதந்திரமும், இறைமையும் தன்னாஅதிக்கமும் கொண்ட ஒற்றையாட்சி என்பதாலும், அவற்றைப் பாதுகாக்க வேண்டியிருப்பதாலும்,
மாகாண சபைகள் அமைப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
 
இந்த ஒன்பது மாகாணசபைகளில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு]] மற்றும் [[வட மாகாணம், இலங்கை|வடக்கு]] மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. இவ்விணைப்பு நிரந்தர இணைப்பாக இருப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் 1988 திசம்பர் 31 இற்குள் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.<ref name=tn>{{cite web|url=http://www.tamilnation.co/conflictresolution/tamileelam/87peaceaccord.htm|title=Indo Sri Lanka Agreement, 1987|publisher=TamilNation}}</ref> 1988 செப்டம்பர் 2 இல் இரு மாகாணங்களும் [[வடக்கு கிழக்கு மாகாண சபை]] என்ற பெயரில் இணைக்கப்பட்டன.<ref name="lnp"/>
 
===வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிப்பு===
வட-கிழக்கு இணைப்புத் தொடர்பான பொது வாக்கெடுப்பு எப்போதும் இடம்பெறவில்லை. ஒவ்வோர் ஆண்டும் அரசுத் தலைவர்களால் தற்காலிக இணைப்பாக நீடிக்கப்பட்டு வந்தது.<ref>{{cite news|url=http://www.hindu.com/thehindu/2003/11/14/stories/2003111411881500.htm|title=Sri Lanka's North-East to remain united for another year|last=V.S. Sambandan |date=14 November 2003|publisher=[[த இந்து]]|accessdate=10 அக்டோபர் 2009}}</ref> இலங்கைத் தேசியவாதிகளால் இந்த இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வந்தது. 2006 சூலை 14 இல் [[மக்கள் விடுதலை முன்னணி]] கிழக்கு மாகாணத்துக்கெனத் தனியே மாகாணசபை நிறுவ வேண்டும் என இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.<ref name=lnp>{{cite news|url=http://www.lankanewspapers.com/news/2006/10/8947.html|title=North-East merger illegal: SC |date=17 அக்டோபர் 2006|publisher=LankaNewspapers.com}}</ref> இவ்வழக்கு விசாரணையை அடுத்து அன்றைய அரசுத்தலைவர் [[ஜே. ஆர். ஜெயவர்தனா|ஜெயவர்தனா]]வினால் அறிவிக்கப்பட்ட இணைப்பு சட்டவிரோதமானது எனக் கூறி அதனை செல்லுபடியற்றதாக்குவதாக 2006 அக்டோபர் 16 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.<ref name=lnp/> இதனை அடுத்து 2007 சனவரி 1 இல் வடகிழக்கு மாகாணசபை [[வட மாகாண சபை]], [[கிழக்கு மாகாண சபை]] என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையின்_மாகாண_சபைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது