முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

368 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
 
#''உட்காவும் நரம்புகள்'' (Afferent nerves) அல்லது ''உணர்வு நரம்புகள்'' (Sensory nerves) அல்லது ''வாங்கி நரம்புகள்'' (Receptor nerves): இவையே உணர்வு [[உடல் உறுப்புக்கள்|உறுப்புக்களில்]] இருக்கும் உணர்வு நரம்பணுக்களிலிருந்து (Sensory neurons) கணத்தாக்கங்களை [[மைய நரம்பு மண்டலம்|மைய நரம்புத் தொகுதி]]யை நோக்கிக் கடத்தும் நரம்புகள் ஆகும். எடுத்துக் காட்டாக உணர்வு உறுப்பான [[தோல்|தோலில்]] இருந்து தொடுதல் என்னும் உணர்வுக்கான கணத்தாக்கத்தை மைய நரம்புத் தொகுதிக்குக் கடத்தும்.
#''வெளிக்காவும் நரம்புகள்'' (Efferent nerves): இவையே மைய நரம்புத் தொகுதியிலிருந்து சமிக்ஞைகளை செயற்படு உறுப்புகளில் இருக்கும் இயக்க நரம்பணுக்களுக்குக் (motor neurons) கடத்தும் நரம்புகள். எடுத்துக் காட்டாக மைய நரம்புத் தொகுதியிலிருந்து ஒரு செயலுக்கான சமிக்ஞையை [[தசை]], [[சுரப்பி]] போன்ற உடல் உறுப்புக்களுக்கு காவிச் செல்லும்.
#''கலப்பு நரம்புகள்'' (Mixed nerves): இவை உட்காவு நரம்பிழைகள், வெளிக்காவு நரம்பிழைகள் ஆகிய இரண்டையும் ஒன்றாகக் கொண்டிருக்கும்.
23,419

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1542769" இருந்து மீள்விக்கப்பட்டது