நெய்வேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO, நெய்வேலி வரலாறு பக்கத்தை நெய்வேலி என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
வரிசை 27:
நெய்வேலியின் வரலாறு நெய்வேலி தமிழ் நாடு மாநிலம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் அமைந்த்துள்ள தொழில் நகரமாகும்.இந்த நகரம்
வடலூரிலிருந்து சுமார் 8 கி.மீ தூரத்திலும் பண்ருட்டியிலிருந்து சுமார் 18 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.நிலவியல் அமைப்புபடி 11.30 வடக்கு அட்சத்திலும் 79.29 கிழக்கு தீர்க்கத்திலும் இடம் பெற்றுள்ளது. சென்னை கும்பகோணம் 45 C தேசிய நெடுஞ்சாலைக்கு மேற்கிலும் கடலூர் சேலம் நெடுஞ்சாலைக்கு வடக்கிலும் அமைந்துள்ளது.
1. 1935 க்கு முன் நெய்வேலி.
2.வெளியேற்றப்பட்ட கிராமங்கள்.
3. நெய்வேலி நகர அமைப்பு
4 .நகர நிர்வாகம்
4.1 குடி நீர்
4.2 சுகாதாரம்
4.3 நூலகம்
44. கல்வி நிலையங்கள
5.நிவாக அலுவலகம்
6.சுரங்கம்
7.அனல் மின் நிலையங்கள்
8.கோவில்கள்
 
1.=== 1935 க்கு முன் நெய்வேலி.===
தற்பொழுது நெய்வேலி நகரம் உள்ள இடத்திலிருந்து சுமார் 7 கி.மீ தூரம் தெற்கில்தான் உண்மையான நெய்வேலி கிராமம் இருந்தது.அங்கு வாழ்ந்த ஜம்புலிங்க முதலியார் என்பவர் 1935 ல் தன் நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டினார். கிணற்றிலிருந்து கருமையான பொருள் வெளிப்பட்டது.அதை அரசுக்கு அனுப்பி வைத்தார்.அரசு அதனை ஆய்விற்கு அனுப்பியது. முடிவு ப்ழுப்பு நிலக்கரி என முடிவு கிடைத்தது. அரசு நெய்வேலியை சுற்றிலும் உள்ள இடங்களில் ஆய்வு செய்து நிலத்தடியில் ஏராளமான நிலக்கரி படிவங்கள் இருப்பதை உறுதி செய்தது.மத்திய அரசு 1956 ல் நிலக்கரியைத் தோண்டி எடுத்து மின்சாரம் தயாரிக்க என்.எல்.சி நிறுவன அமைப்பை ஏற்படுத்தியது. இது ஒரு பொதுத்துறை நிறுவன்மாகும். நெய்வேலி கிராமத்
தில் முதன் முதலில் பழுப்பு நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டதால் நிறுவனத்திற்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என பெயர் சூட்டியது.
 
2.=== வெளியேற்றப்பட்ட கிராமங்கள். ===
நிலக்கரி வெட்டி எடுக்கவும் என்.எல்.சி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டவும் அலுவலகங்கள் கட்டவும் கீழ்க்கண்ட கிராமங்கள் வெளியேற்றப்பட்டன. 1.வெள்ளையங்குப்பம் 2.பெருமாத்தூர் 3.வேலுடையான் பட்டு 4.கூரைபேட்டை 5.வெண்ணெய்குழி 6.தாண்டவங்குப்பம் 7.நெய் வேலி 8.கெங்கைகொண்டான் 9.பாப்பனம்பட்டு 10.வேப்பங்குறிச்சி 11.தெற்கு வெள்ளூர் 12.வடக்கு வெள்ளூர் 13.மூலக்குப்பம் 14.காரக் குப்பம் 15.ஆதண்டார்கொல்லை 16.மந்தாரக்குப்பம் 17.சாணாரப்பேட்டை 18.அத்திபட்டு, 19.வினை சமுட்டிக்குப்பம், 20.தெற்கு மேலூர் 21.இளவரசன் பட்டு,விளாங்குளம்,
 
வெளியேற்றப்பட்ட கிராம மக்களுக்கு விருத்தாசலத்திற்கு வட்க்கில் உள்ள விஜயமா நகரம் என்ற ஊரில் மனைகள் வழங்கப்பட்டன..
 
3.=== நெய்வேலி நகர அமைப்பு. ===
நெய்வேலி நகரம் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டது. நெய்வேலி 32 வட்டங்களாகப்(Block) பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு வட்டம் என்பது 1 கி.மீ க்கு 1.கி.மீ என பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு வட்டம் ஒரு சதுர கிலோ மீட்டர் அளவுள்ளது. ஒவ்வொரு வட்டத்தைச் சுற்றிலும் இரட்டைச் சாலைகள் போடபட்டுள்ளது. முதல் வட்டத்தில் என்.எல்.சி நிர்வாக அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. இரண்டாவது வட்டம் முதல் முப்பதாவது
வட்டம் வரை மக்கள் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.வீடுகள் தனித்தனியாகவும் தோட்ட வசதியுடன் கட்டப்பட்டுள்ளன.மின் வசதி,குடி நீர் வசதி,கழிப்பறை வசதி ஆகியவை நல்ல முறையில் செய்து கொடுத்துள்ளனர்.மற்ற வட்டங்களில் அனல் மின் நிலையங்கள் ட்டப்பட்டுள்ளது.வட்டம்-21, மற்றும் வட்டம்-30 ஆகிய இடங்களில் நெய்வேலியில் கூலி வேலை செய்வோர், சிறு வியாபாரிகள்,ஒப்பந்த தொழிலாளிகள் போன்றோர் தற்காலிக
குடியிருப்புகளில் வசிக்கின்றனர்.
 
4.=== நகர நிர்வாகம் ===
நகர நிர்வாக அலுவலகம் வட்டம் 10 ல் உள்ளது. மின் வசதியைக் கவனிக்க, நீர் வசதியைப் பராமரிக்க, கட்டிடங்களைப் பராமரிக்க, சாலைகளைப்போடவும் பராமரிக்க, நகர பேருந்துகளை ஊட்டுதல் மற்றும் பராமரித்தல்,தெரு விளக்குகளைப் போட்டு பராமரித்தல்,சாலை மற்றும் அலுவலகங்களின் சுகாதாரத்தைப்பாதுகாத்தல், நூலகங்களை பராமரித்தல்,நகர நிர்வாகத்தில் பணியாற்றுவோருக்கு ஊதியம் வழங்குதல் ஆகிய
பணிகளைச் செய்ய அங்கு தனித்தனி அலுவகங்கள் உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/நெய்வேலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது