லுட்விக் விட்கென்ஸ்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 57:
Tractatus இல் ஒரு எடுப்பு அதன் அர்த்தத்தைத் தீர்மானிக்காத வரை அது எடுப்பல்ல என்றும், இதனால் மயக்கம், ஐயப்பாடு, உறுதியற்ற தன்மை என்பவற்றை எடுப்புக்கள் கொண்டிருக்கலாகாது என்றும் குறிப்பிடுகிறார். இக்கருத்தை மறுத்த பிந்திய விட்கென்ஸ்டைன் " ஆரம்பத்தில் நான் மொழியை குறுகியதாக ஆராய்ந்துள்ளேன் " என்றார். இவ்வாறான தெளிவற்ற, உறுதியற்ற வசனங்கள் பொது உடன்பாட்டிற்கு வருவதற்கும், தொடர்பு கொள்வதற்கும் தடையல்ல என்று கூறியவர், அதற்காக கடிகார உதாரணத்தை எடுத்துக் காட்டுகின்றார்.
 
ஒரு கடிகாரம் பரிபூரண நேரத்தைக் காட்டவில்லையாயின் அது நல்ல கடிகாரமல்ல. ஆனால் நேரத்தை மிக நுணுக்கமாக அளவிடும் அவசியம் எமது கடிகாரங்களுக்கு இல்லை. நாம் உபயோகிக்கும் கடிகாரங்கள் எமது தேவைகளுக்குப் போதுமானவையாக உள்ளன, ஆனால் ஒரு ஓட்டப்பந்தயத்தில் வெற்றி, தோல்விகளை நிர்ணயிக்க நேரம் மிக நுட்பமாக அளவிடப்பட வேண்டியது அவசியமாகும். எனவே தேவையைப் பொறுத்தே நேரம் பற்றிய கருத்து அமைந்துள்ளது.. தேவையைப் பொறுத்தே மொழிப்பாவனையும் இடம்பெற வேண்டுமென தனது முந்திய சிந்தனைக்கு மாறாக பிந்திய விட்கென்ஸ்டைன் குறிப்பிடுகிறார். " உலகிலேயே அணுவளவும் பிந்திச் செல்லாத முழுமுதல் நுட்பமான நேரத்தைப் பற்றி நமது அன்றாட வாழ்க்கையில் நாம் சிந்திக்கத் தேவையில்லை ".
 
எடுப்புக்கள் பற்றிய கருத்தில் முந்திய, பிந்திய நிலைகளில் விட்கென்ஸ்டைன் ஒன்றுபட்டாலும், எடுப்புக்கள் பற்றிய தன்னுடைய முந்திய முழுமையான பகுப்பாய்வு எனும் கருத்திலிருந்து விடுபடுகின்றார். ஆகவே Philosophical Investigations பகுப்பாய்வு மெய்யியலை ஒரு புதிய மையத்தை நோக்கி நகர்த்தியது எனக் குறிப்பிடலாம்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/லுட்விக்_விட்கென்ஸ்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது