லுட்விக் விட்கென்ஸ்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 66:
வார்த்தைகளை நாம் பயன்படுத்துகையில் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். ஒரு துறையில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை இன்னுமொரு துறையிலும் பயன்படுத்துகிறோம். இதனால் பகுப்பாய்வு என்பது மட்டும் மேற்குறித்த விடயங்களைத் தீர்மானிப்பதில்லையென விட்கென்ஸ்டைன் கருதினார். ஒரு பிரச்சினைக்கு மெய்யியல் ரீதியான தீர்வு என்பது ஒரு நோய்க்குச் செய்யும் பரிகாரம் போன்றதாகும். மொழிகளில் ஏற்படும் பிரச்சினைகள், அவை மனித சிந்தனையில் ஏற்படுத்தும் தாக்கம், வார்த்தைப் பிரயோகங்கள் பற்றி பிந்திய விட்கென்ஸ்டைன் குறிப்பிடுகிறார். மொழி, மொழியின் அலங்காரத்தினால் எமது அறிவில் ஏற்படும் வசீகரத்தன்மைக்கு எதிராக நடத்தப்படும் யுத்தமே மெய்யியல் எனக் குறிப்பிட்டார். நேரம், இடம், மனம் போன்ற வார்த்தைகளை சாதாரண மக்களும் உபயோகிக்கின்றனர். மெய்யியலாளர்களும் உபயோகிக்கின்றனர். வார்த்தைகளை, சொற்களை எமது பேச்சிலும், எழுத்திலும் உபகரணங்களாகப் பயன்படுத்துகின்றோம். அதாவது இவை எமது பேச்சுக்களில் கருவிகளாகக் கையாளப்படுகின்றன. ஒரு கருவியைக் கொண்டு பல இயந்திரங்களை அமைப்பது போன்றதே இதுவாகுமென்றும், மொழியின் பலவகையான செயற்பாடுகளையும் ஆராய்ந்து பார்த்தால் அவை மொழி விளையாட்டுக்கள் என்றும் பிந்திய விட்கென்ஸ்டைன் குறிப்பிடுகின்றார்.
 
அளவையியல் ரீதியான பகுத்தறிவுக் கோட்பாடு ஏற்கப்படக்கூடியதாயினும் மற்றொரு புறத்தில் அங்கு தீர்மானிக்க முடியாத முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்த நிலை மெய்யியலாளர்களுக்கு மகிழ்ச்சியற்றதொன்றாகும். " Tractatus இல் நான் கூறிய மொழியின் அளவையியல் கட்டமைப்பில் மாற்றம் செய்யப்படாவிட்டால் அது தொடர்பாக நான் சொல்ல நினைத்து பூர்த்தியாகாது. அது மனவேதனையைத் தருகிறது. ஒரு விடயத்தை ஆரம்பிப்பவன் தன்னுடைய முயற்சியில் எப்பிரச்சினைகளையும் எதிர்கொள்ளவில்லையென்றால் அவனுடைய முயற்சி திருப்தியற்றதாகும். மக்கள் புதிர்களில் நம்பிக்கை வைத்துள்ளனர். புதிர்கள் இல்லையென்றால் அவர்கள் ஆச்சரியத்தை அடைகின்றனர். அர்த்தமற்ற பிரச்சினைகளைக் கடந்து செல்ல வழிகாட்டுவதே என்னுடைய நோக்கமாகும். மெய்யியல் விசாரணைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் தாம் அறிந்துள்ளது சிறிதளவே என்பதை உணர்வர் ". இது சோக்கிரட்டீசின் கருத்தை ஒத்ததாகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/லுட்விக்_விட்கென்ஸ்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது