நரம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
====இணைக்கப்படும் இடத்தையொட்டி====
''நரம்புகள் அவை மைய நரம்புத் தொகுதியில் இணைக்கப்படும் இடத்தின் அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.''
#1. முண்ணான் நரம்புகள் (Spinal nerves)
இவை [[முள்ளந்தண்டு நிரல்|முள்ளந்தண்டு நிரலூடாக]], [[முண்ணாண்|முண்ணாணுடன்]] இணைக்கப்படும். இவை தலைக்குக் கீழாக இருக்கும் உடல் உறுப்புக்களுடன் தொடர்புடையனவாக இருக்கும். ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய எண்களால் இவை பெயரிடப்படுள்ளன. எந்த முள்ளந்தண்டு எலும்பினூடாக முண்ணாணுடன் இணைக்கப்படுகின்றதோ, அந்தப் பெயரினால் அடையாளப்படுத்தப்படுகின்றன. 31 வலது-இடது சோடி நரம்புகள் இவ்வகையைச் சார்ந்தவை. இவற்றில் 8 சோடி கழுத்து முண்ணாண் நரம்புகளும் (C1-C8), 12 சோடி நெஞ்சு முண்ணான் நரம்புகளும் (T1-T12), 5 சோடி நாரி முண்ணாண் நரம்புகளும் (L1-L5), 5 சோடி திரு முண்ணாண் நரம்புகளும் (S1-S5), 1 சோடி குயிலலகு முண்ணான் நரம்புகளும் அடங்கும். இந் நரம்புகள் யாவும் [[புற நரம்பு மண்டலம்|புற நரம்புத் தொகுதி]]யைச் சார்ந்ததாக இருக்கும்.
#2. மண்டை நரம்புகள் (Cranial nerves)
இவை [[தலை]]யிலிருக்கும் பகுதிகளுடன் தொடர்புடையனவாக இருப்பதுடன் [[மூளை]]யுடன், முக்கியமாக மூளைத் தண்டுப் பகுதியுடன் இணைந்திருக்கும். 12 சோடி நரம்புகள் உரோம எண்களால் அடையாளப்படுத்தப்படும். அத்துடன் மேலதிகமாக 0 என்ற எண்ணால் அடையாளப்படுத்தப்படும் ஒரு சோடி நரம்புகளும் இருக்கின்றன. 0 உள்ளிட்டம் முதல் மூன்று சோடி நரம்புகளும் பெருமுளைப் பகுதியிலிருந்தும், ஏனைய 10 சோடி நரம்புகளும் மூளைத் தண்டுப் பகுதியிலிருந்தும் வெளியேறும். பல நேரங்களில், இந்த நரம்புகள் தொடர்பு கொள்ளும் குறிப்பிட்ட உறுப்பின் அடிப்படையில், விளக்கமான பெயரீட்டையும் பெறுவதுண்டு. எ.கா. கண் நரம்பு, முக நரம்பு
இவற்றில் கண் நரம்புகள் (மண்டை நரம்பு II) தவிர்ந்த ஏனைய நரம்புகள் யாவும் புற நரம்புத் தொகுதியைச் சாரும்.
"https://ta.wikipedia.org/wiki/நரம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது