அக்கரைச் சக்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"படிமம்:Akkari-Sakthi_kavignan.jpg|விரலளவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

04:28, 3 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

கவிஞர்.அக்கரைச் சக்தி

கிழக்கு மாகாணத்தின் தென்கோடியில் கல்முனை என்னும் நகரின் கண் அமைந்துள்ள அழகிய ஊரான பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட ”அக்கரைச் சக்தி” எனும் பெயரில் கவிதை உலகில் தனிமுத்திரை பதித்துக் கொண்டிருக்கும் கவிஞர்.சக்திதாஸன் அவர்கள் தற்போது கொழும்பில் வசித்து வருகிறார். ஆரம்பக்கல்வியை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணவித்தியாலயத்திலும், இடைநிலைக்கல்வியை மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்திலும் நிறைவேற்றி பேராதனைப்பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் இயந்திரவியல் பொறியியலாளராகப் பட்டம் பெற்று, இலங்கைப் பொறியியலாளர்கள் நிறுவகத்தின் பட்டயப்பொறியியலாளராகவும், இலங்கை தன்னியக்க வாகனப் பொறியியலாளர் நிறுவகத்தின் உறுப்பினராகவும், இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராகவும் பதவி வகிக்கிறார். 1967ம் ஆண்டு சிவானந்த வித்தியாலயத்தில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும்போது பாடசாலையில் நடைபெற்ற கவிதைப்போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற ”விபுலானந்தனுக்கு நான் விடுத்த ஓலை”" எனும் கவிதைமூலம் கவியுலகில் காலடி வைத்த இவரை கிழக்கிலங்கையின் கவிச்சக்கரவர்த்தியாகவிருந்த நீலாவணன் அவர்களின் பிரசன்னமும் விமர்சனமும் இவருக்குக் கவிபாட ஊக்கம் கொடுத்திருந்தன.

இவரது ஆக்கங்கள் கலைவாணன்,வீரகேசரி,வெளி,அச்சாணி,நாணோசை,மருதம், செங்கதிர்,மாற்றும் கவிஞன் போன்ற அச்சு ஊடகங்களிலும் Poetry.Com போண்ற இலத்திரனியல் ஊடகங்களிலும் வெளியாகியிருந்தன. 2003-08-15,17 மற்றும் 2004-08-13,15 ஆகிய திகதிளில் கவிஞரை அமெரிக்காவில் முறையே வாசிங்டனிலும், பிலடெல்பியாவிலும் நடைபெற்ற உலகளாவிய கவிதை மகாநாட்டிற்கு வந்து கவிதை வாசிக்கும்படி எழுதியிருந்தும் நிதிவசதியின்மையால் அங்கு செல்ல முடியாமலிருந்ததாக கூறும் இவரை அவ்வாண்டுகளுக்கான கவிஞராகவும் தெரிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர் என்கிறார். தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் கவிதை யாக்கும் இவர் கவிதைத் துறையில் மட்டுமன்றி நாடகம் வில்லுப்பாட்டு சங்கீதம் போன்ற துறைகளிலும் ஈடுபடுகின்றார்.

உசாத்துணை

www.kavignan.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கரைச்_சக்தி&oldid=1563880" இலிருந்து மீள்விக்கப்பட்டது