திருக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ உள் இணைப்பு
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Spotted_eagle_ray.jpg|thumb|250px|புள்ளியுள்ள திருக்கை]]
'''திருக்கை''' என்பது பெரும்பாலும் தட்டையான வடிவத்தில் உள்ள நீர்வாழ் இனமாகும். இதனை திருக்கை [[மீன்]] என்றும் சொல்வர். இவ் விலங்குக்கு எலும்புக் கூட்டிற்கு பதிலாக சுறா மீனைப்போன்ற நீட்சிதரும் [[குருத்தெலும்பு]] உள்ளது. இவற்றுள் சில மின் தாக்கம் முதலிய வழிகளில் தன் எதிரியைத் தாக்க வல்லது. சில திருக்கைகள் மாந்தனைக் கொல்லும் அளவுக்கும் வலிமையாகத் தாக்க வல்லன. பலவகையான திருக்கைகள் பற்றி [[தமிழ்|தமிழில்]] நெடுங்காலமாக சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் சில கீழே தரப்பட்டுள்ளன. இன்று [[உயிரியல்]] அறிஞர்கள் சுமார் 500 வகையான திருக்கைகள் உள்ளன என்று கண்டுள்ளனர். (வளரும்)
 
திருக்கை வால்சமையலில் திருக்கை:
 
திருக்கையின் சதை மற்ற மீன்களின் சதையைவிட சற்றுக் கடினமாக இருக்கும். துடுப்புகளில் இருக்கும் மெல்லிய தண்டுகளுடன் கூடிய சதையைக் குழம்பு
வைத்து உண்பார்கள். அந்தச் சதையை வேகவைத்து, உதிர்த்து, அதை வைத்துப் பிட்டு செய்வார்கள்.
 
ஆயுதம்:
 
திருக்கையின் வால் நீளமாக இருக்கும். அந்த வாலில் மிக நுண்ணிய முட்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும். கையில் வைத்து இழுத்தால் அறுத்துவிடும்.
ஆகவே அதை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்.
கைப்பிடியில் பொருத்திவைத்து சவுக்காகப் பயன்படுத்துவார்கள். அதை வைத்து அடிக்கும்போது தோலையும் சதையையும் பிய்த்துக்கொண்டு வரும்.
 
இந்தச் சவுக்கைத் 'திருக்கை வார்' என்றும் சொல்வார்கள்.
 
==திருக்கை வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/திருக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது