கி. வீரமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 181:
#சேலம் மாவட்டம், ஆத்தூரையடுத்த தம்மம்பட்டியில் 28.08.1987 அன்று தாக்கப்பட்டார்.
==கி.வீரமணி பற்றி பெரியார்==
*திரு கி.வீரமணி வெறும் ஆள் அல்ல. நம் தலைவர் போல, குருசாமியைப் போல அவர் பேசவில்லை. சற்று துணிவாய் பேசிவிட்டார். திரு வீரமணி நம்மைப் போன்றவர் அல்ல -அவர் ஒரு வக்கீல். எவ்வளவோ நல்ல வாய்ப்பு அவரை அணுகக் காத்திருக்கிறது. அவற்றுக்குத் தடை ஏற்படாலாம். என்னைப் பொறுத்தவரை அவருக்கு அப்படி ஏற்பட்டால் நமக்கு நல்லதாகி விட்டது என்றுதான் கருதுவேன். ஏன்? நம் இயக்கத்திற்கு ஒரு முழுநேரத் தொண்டன் நமக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்கிற ஆசை, இப்போது அவர் தொண்டு அரை நேரம்; இனி அது முழுநேரமாகி விடலாம்.--30.10.1960 இல் சென்னை-திருவல்லிக்கேணி கடற்கரை சொற்பொழிவில் தந்தை பெரியார்--<ref >தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 79</ref>
==பிற இதழ்கள் கி.வீரமனியைப் பற்றி==
*கி.வீரமணியிடம் சிகரெட் உட்பட எந்த வேண்டாத பழக்கமும் கிடையாது. எப்போதாவது பார்க்கும் ஆங்கில அறிவியல் படங்களைத் தவிர, சினிமா பார்ப்பதும் கிடையாது. ஈவெரா பெரியாரின் சுயமரியாதைப் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டு அதிகாரப்பூர்வமாய்ச் சேலம் மாவட்டத்தில் 1944 இல் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது திரு. வீரமணி பத்து வயதுச் சிறுவன். இப்போது திராவிடர் கழகப் பொதுச்செயலாளர். மாணவப் பருவத்தில் எந்த வகுப்பிலும் முதல் அல்லது இரண்டாவது நிலையிலேயே இருப்பாராம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., ஆனர்ஸ் படிப்பில் சேருவதற்கு, முதல் பருவக் கட்டணம் கட்டப் பொருளாதார வசதி இல்லை. மிகவும் தயக்கத்துடன் பெரியாருக்கு உதவி கேடுக் கடிதம் எழுதினார். எங்கோ சுற்றுப்பயணத்திலிருந்த பெரியார் குறிப்பிட்ட நாளில் பணம் கிடைப்பதற்காகத் தந்தி மணியார்டரில் ரூ.95 அனுப்பினார். பின்னர், தேர்வில் முதலாவதாய்த் தேறித் தங்கப் பதக்கத்துடன் அய்யாவிடம் சென்று நன்றி சொல்லப் போனபோது பெரியார் கூரியது; அப்படியா? நான் பணம் அனுப்பிச்சேனா? இருக்கலாம் மறந்து போச்சு. --கல்கி ஏடு 24.06.1979 குளோஸ் அப் பகுதியில்--<ref> தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 73</ref>
*பிராமணர்கள் மனிதர்களாகத்தான் இருக்க வேண்டும்; தங்களை மற்றவர்களை விட உயர்ந்தவர்களாகக் கருதக் கூடாது என்று திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி கூறுகிறார். தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று பார்ப்பனர்கள் உரிமை கொண்டாடக்கூடாது; சமுதாயத்தில் அவர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கக் கூடாது. திராவிட கழகம் ஒரு பார்ப்பன எதிர்ப்பு இயக்கமாகும் என்று வீரமணி சொல்லுகிறார்.--நியூயார்க் டைம்ஸ், 09.11.1982--<ref> தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 259</ref>
*திரு கே.வீரமணி, திராவிடர் கழக தலைவர் மாடர்ன் ரேசனலிஸ்ட் மாத இதழின் ஆசிரியர், பெரியார் ஈ.வி.ராமசாமி நாயக்கருக்குப் பிரதான சீடர். தமிழ்நாட்டு அரசியலில் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோருக்கு நெருக்கமானவர். தற்போது பெரியார் லட்சியங்களை உலகமெங்கிலும் பரப்புவதற்காக அசாதாரணமாகப் பாடுபட்டு வருபவர்.--கோரா மனபத்ரிக தெலுங்கு வார ஏடு--<ref> தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 81</ref>
*தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டவருக்கு 30 சதவிகிதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவிகிதமும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 18 சதவிகிதமும், பழங்குடியினருக்கு 1 சதவிகிதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை செயல்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும். ஒதுக்கீட்டுக் கொள்கைகளினால் நிர்வாகம் சீர்கெடுமா என்று வினவியதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒதுக்கீடுகள் இருந்தபோதிலும் தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த நிர்வாக அமைப்பை பெற்றிருக்கிறது என்றார். --மனோரமா இயர் 'புக்' 1991 தமிழ் பதிப்பு பக்கம் 19--<ref >தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 133</ref>
*கருப்புச் சட்டை அணிந்து கொண்டு இவர் நாத்திகவாதம் பேசுவதைக் கேட்டால், பலர் காதை மூடிக் கொள்வார்கள். இன்னும் பலர் துடிப்பார்கள், 'நாராயணா இதை எல்லாம் கேட்டுக் கொண்டு உயிரோடு இருக்க வேண்டுமா?' என்றும் சிலர் வருத்தப்படுவார்கள். ஆனால், அதே வீரமணியைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பழகினால் - தர்ம சாஸ்திரங்கள் ஒரு நல்லவனைப் பற்றி எப்படி எல்லாம் சித்தரிக்குமோ, அப்படி காட்சி தருவார். பண்பு பழமாய்க் கனிந்திருக்கும்! பேச்சு நெய்யாய் உருகி நிற்கும்! நாகரிகம் இதம் பதமாய் இருக்கும்! சின்னஞ்சிறு வயதில் மேடையில் 'ஸ்டூல்' போட்டு ஏறி நின்று பேசிப் பழகினார். இப்போது எந்த மேடையிலும் பேச்சின் உயரத்துக்கு யாரும் வர முடிவதில்லை. கொள்கையில் சிங்கம்; குணத்தில் தங்கம். --சாவி 31.03.1995 இதழ்--<ref >தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 223</ref>
*கி.வீரமணி எழுதிய "கீதையின் மறுபக்கம்" நூல் இருபது அத்தியாயங்களையும், ஏழு பின்னிணைப்புகளையும் கொண்டுள்ளது. பாரதம் நடந்த கதையா? கீதை ஒரு கொலை நூல்தான். கிருஷ்ணன் ஒரு கபட வேடதாரி, கீதையின் முரண்பாடுகள், விநோதக் கருத்துகள் முதலிய தலைப்புகளையும் கொண்டது.--சி.இராமகிருஷ்ணன் "கீதையின் மறுபக்கம்" தினமணி விமர்சனம் 08.110.1998--<ref >தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 231</ref>
*தமிழகத்தைப் பாதித்த பல இயக்கத் தலைவர்களின் வரிசையில் முதலாவதாக திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி.--குமுதம் தீராநதி நவம்பர் 2002--<ref> தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 251</ref>
*மற்ற கட்சிகள் எல்லாம் பொதுவாகக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை வரவேற்றுள்ள நிலையில், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் திரு கி.வீரமணி மட்டும் வரக்கூடிய ஆபத்தை உணர்ந்துள்ளார் என்றும், அதன் காரணமாக இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்களின் அடுத்த நடவடிக்கை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் , அதை முறையடித்து நிலையான பாதுகாப்புப் பெறுவதற்கு அரசமைப்புச் சட்டத் திருத்தம் ஒன்று கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் இந்த நோக்கர்கள் கூறுகிறார்கள். --தி இந்து 23 ஜூலை 1994--<ref >தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 265</ref>
==கி.வீரமணியைப் பற்றி பிற தலைவர்கள் கூறியது==
*திராவிடர் கழகத்தின் ஆயுட்காலப் பொதுச்செயலாளராக அருமை நண்பர் [[கி.வீரமணி]] அவர்களை, மறைந்த அன்னை மணியம்மையார் அவர்கள் நியமனம் செய்து, அந்த நியமனம் திராவிடர் கழகப் பொதுக்குழுவாலும் ஏற்றுக் கொள்ளப்பெற்றமை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். அன்பர் திரு. வீரமணி அவர்கள் ஆண்டில் இளையர்; ஆயினும் பல ஆண்டுகள் தந்தை பெரியாரிடத்தும் அன்னை மணியம்மையாரிடத்தும் இருந்து பணி செய்த வகையில் நிறைந்த அனுபவத்தைப் பெற்றிருக்கிறார். இயல்பாக அவருக்கிருக்கும் நுண்ணறிவோடு அனுபவமும் இயைந்து பொலிவுறுகிறது. எதிர்காலக் கணிப்பு பற்றிய அறிவுத் திட்பம் அவருக்கு நிறைய உண்டு. அவரோடு கலந்து பேசிய பொழுதெல்லாம் அவர் எண்ணிக் கோடிட்டுக் காட்டிய எதிர்கால நிகழ்வுகள் அப்படியே நடந்தன. பழகுதற்கினிய பண்பாளர்; இனநலம், இனமானம் காப்பதில் உறுதியான பிடிப்புள்ளவர்; சிறந்த பேச்சாளர்; ஆற்றல்மிக்க எழுத்தாளர்; இயக்கத்தின் நோக்கங்களைத் திட்டமிட்டுச் செயற்படுத்தும் திறனுடையவர்; இனிய நண்பர் வீரமணி அவர்களை, திராவிடர் கழகம் பொதுச் செயலாளராகப் பெற்றுள்ள இந்த ஆண்டு தந்தை பெரியார் நூற்றாண்டு. இந்தத் தலைமுறையின் புதிய வரலாறு படைப்பதில் அவர்கள் வெற்றி பெறுமாறு பாராட்டி வாழ்த்துகின்றோம்.--குன்றக்குடி அடிகளார்--
<ref >குன்றக்குடி அடிகளார், தமிழகம் சித்திரை இதழில் ("விடுதலை", 21.04.1978)</ref>
*புரட்சி என்பதை வாளைத் தூக்கிக் கொண்டு மட்டும் செய்ய முடியாது. மக்கள் மனதில் எழுகின்ற மலர்ச்சியை வைத்துதான் செய்ய முடியும். அப்படிப்பட்ட பணியை, நாங்களெல்லாம் செய்கின்ற பணியைவிட உயர்ந்த பணியை, நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள். எனவே உங்களை பாராட்டுகிறோம். அரசியலலிலே என்னுடைய தோழர் ராம்விலாஸ் பாஸ்வானிடமிருந்து நான் உணர்ச்சியை பெறுகிறேன். அதேபோல், சமுதாயப் பணியிலே நண்பர் வீரமணி அவர்களே உங்களிடமிருந்து நான் அந்த உணர்ச்சியைப் பெறுகிறேன்.--முன்னாள் இந்திய பிரதமர் [[வி.பி.சிங்]]<ref> 23.12.1992 அன்று திருச்சி-பெரியார் நூற்றாண்டு நினைவுக் கல்வி வளாகத்தில் நடைபெற்ற பெரியார் நினைவுநாள், பெரியார் மணியம்மை குழந்தைகள் காப்பகக் கட்டடத் திறப்பு விழாவில்</ref>
*இங்கு பிரம்மாண்டமான மாநாட்டை வீரமணி போன்ற தலைவர்களால் தான் கூட்ட முடியும். உங்களால் முடியுமா என்று என்னை நீங்கள் கேட்டால் முடியாது என்றுதான் கூறுவேன். காரணம் நான், வீரமணி போன்ற பெரிய தலைவர் அல்ல. விமான நிலையத்திலே குடியரசு தலைவரை நானும், நண்பர் வீரமணியும் வழியனுப்பச் சென்றபோது, குடியரசுத் தலைவர் மனம் திறந்து சொன்னார். 'Veeramani is the Most Popular Leader in Tamilnadu'.--பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை ஒன்றியத்தின் செயல் தலைவர் சந்திரஜித் யாதவ்-- <ref> 'விடுதலை' தந்தை பெரியார் 109-ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர் </ref>
*தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், பிற்படுத்தப்பட்ட மக்களின் தன்னிகரில்லாத் தலைவராக திரு வீரமணி அவர்கள் இருக்கின்றார்கள். அவர் கிறித்தவ, முஸ்லீம், தாழ்த்தப்பட்ட மக்களுடைய தலைவராக வந்து கொண்டிருக்கின்றார்.--வி.டி.ராஜசேகர் ஷெட்டி 13.06.1982 திருச்சி மாநாட்டில்-- <ref >தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 29</ref>
*மண்டல் கமிசனைப் பற்றி நான் மிகச் சுருக்கமாகவே சொல்ல விரும்புகிறேன். இந்திய அரசு, மண்டல் கமிசன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைக்கக் கூடத் தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில் உள்ளே சுமார் ஆறு எம்.பி.க்கள் போராடியதன் விளைவாக நாடாளுமன்றத்திற்கு வெளியே திரு. வீரமணி அவர்களும் போராடியதன் விளைவாகத்தான் மண்டல் கமிசன் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது.--வி.டி.ராஜசேகர் ஷெட்டி 13.06.1982 திருச்சி மாநாட்டில்-- <ref >தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 29</ref>
*முளைக்கும் பருவத்தில், இளமையில் துடிப்போடு, 'எங்கே கடவுள்? காட்டுவாயா? என்ற பொதுவினாவை எழுப்பியவர் வீரமணி. பெரியார் சொன்னதெல்லாம் அவருக்கு மறை வாக்கு! --கி.துளசி வாண்டையார்--<ref >தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 46</ref>
*பேச்சில், எழுத்தில், எதிர்நீச்சல் போட்டு, பெரியார் கொள்கைகளைப் பிடிப்போடு, எவர் எதிர்த்தாலும் அடாது அலுக்காமல் விடாது பேசி, எழுதி வருகிற 'விடுதலை ஆசான்' வீரமணி!.--கி.துளசி வாண்டையார்--<ref தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 46>
*குடி, சூது - இவற்றிலிருந்து விலகி 'உழைப்பே துணை, ஒழுங்கே மானம்' என்ற நல்லுரையை ஏற்று 'தேர்தலா? அது சந்திசிரிக்குமே!' என்ற பெரியார் எண்ணத்தை ஆசாபாச லாப நட்டத்திற்கு இடம் தராமல் வளர்ந்த மணியான வீரன் வீரமணி.--கி.துளசி வாண்டையார்--<ref தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 46>
"https://ta.wikipedia.org/wiki/கி._வீரமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது