கொழுமிய ஈரடுக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
உள்ளிணைப்புக்கள்
வரிசை 7:
இங்ஙனம் கொழுமிய ஈரடுக்குகளால் உருவான தடுப்புச் சுவர்கள் [[அயனி|அயனிகள்]], [[புரதம்|புரதங்கள்]] மற்றும் பிற [[மூலக்கூறு|மூலக்கூறுகளைத்]] தேவையான இடத்தில் வைக்கும் அதே சமயத்தில் தேவையில்லாத இடங்களில் இம்மூலக்கூறுகள் விரவாமல் தடுக்கவும் செய்கின்றன. பெரும்பாலான, [[நீர்|நீரில்]] கரையும் (நீர்-விரும்பும்) மூலக்கூறுகள் ஊடுருவமுடியாமலுள்ளத் தன்மையினால், சில [[நானோமீட்டர்]] அகலமே இருந்தாலும், கொழுமிய ஈரடுக்குகள் இப்பணிக்கு சிறந்த தகுதி வாய்ந்தவைகளாக உள்ளன. கொழுமிய ஈரடுக்குகள் முக்கியமாக [[அயனி|அயனிகளைக்]] கசியவிடாமல் தடுப்பதால், செல்கள் அயனிஏற்றி [[புரதம்|புரதங்களைக்]] கொண்டு மென்படல எதிர்ப்பக்கத்திற்கு அயனிகளை ஏற்றி [[உப்பு|உப்புச்]] செறிவுகளையும், [[அமிலக்காரதன்மை குறியீடு|அமிலக்காரத் தன்மையையும்]] ஒழுங்குப்படுத்துகின்றன.
 
இயற்கையான கொழுமிய ஈரடுக்குகள் பொதுவாக [[பாஸ்போகொழுமியம்|பாஸ்போகொழுமியங்களால்]] உருவானவையாகும். பொஸ்போகொழுமிய மூலக்கூறுகள்[[மூலக்கூறு]]கள் ஒவ்வொன்றும் நீர்நாட்டமுள்ள (hydrophilic) தலைப் பகுதி ஒன்றையும், நீர்விலகுதன்மை (hydrophobic) கொண்ட இரு வால்ப் பகுதிகளையும் கொண்டதாக இருக்கும். இத்தகைய அமைப்பைக் கொண்டிருப்பதனால் பொஸ்போகொழுமிய மூலக்கூறுகள் [[நீர்|நீருடன்]] தொடர்பில் வரும்போது, அவை தம்மைத்தாமே ஈரடுக்காக ஒழுங்குபடுத்திக் கொள்கின்றன. நீர்நாட்டமுள்ள தலைப்பகுதிகள் நீருடன் தொடர்புகொண்ட நிலையில் வெளிப்புறமாகவும், நீர்நாட்டமட்ட வால்ப்பகுதிகள் உள்ளே ஒன்றையொன்று நோக்கியபடி நடுப்பகுதியிலும் ஒழுங்குபடுத்தப்படுவதனால், இவ்வாறான ஈரடுக்கு அமைப்புக்கள் தோன்றுகின்றன.
 
==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/கொழுமிய_ஈரடுக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது