நேர்பாலீர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
 
===அமெரிக்கா===
2004 ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ நகர மேயர் கவின் நெவ்சம் (Gavin Newsom) முதல் முறையாக கலிஃபோர்னியா மாகாணத்தில் ஒரு லெஸ்பியன் தம்பதிக்கு திருமண உரிமத்தை வழங்கினார். ஆனால் இந்த முயற்சிகள் தொடரவில்லை. சட்டப்படி ஒரு பால் ஈர்ப்புடையோர்களின் திருமணம் அங்கீகரிக்கப்படவில்லை.
நியூ யார்க்கில் நிகழ்ந்த ஸ்டோன்வால் கிளர்ச்சிதான் (Stonewall riots) உலகில் முதல் முதலாக ஒரு பால் ஈர்ப்புடையோருக்காக நடைபெற்ற மிகப் பெரிய புரட்சி. ஜூன் 28, 1969 அன்று ஸ்டோன்வால் விடுதியில் ஒரு பால் ஈர்ப்புடையவர்களுக்கு எதிராக காவல்துறை தாக்குதல் தொடுத்தபோது, அவர்கள் வெகுண்டு எழுந்து கலகத்தில் ஈடுபட்டனர். இந்த எதிர்ப்பு அலையலையாகப் பரவி உலக கவனத்தை ஈர்த்தது.
ஒருபால் ஈர்ப்புடையோர் சமூகத்திலிருந்து முதல் முறை வெளிப்படையாக அமெரிக்க அரசியலில் உயர் பதவி வகித்தவர் ஹார்வே மில்க். சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தின் நகர மேற்பார்வையாளராக இவர் பணியாற்றினார். ஒரு பால் ஈர்ப்புடையோருக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கும் வகையில் ஓர் அரசாணையை பிரகடனப்படுத்தினார்.
ஒரு பால் ஈர்ப்புடையோருக்காக 1978ல் சான் பிரான்சிஸ்கோவில் நிகழ்ந்த பிரம்மாண்டமான திருவிழாவில் முதல் முறையாக 2,50,000 பேர் கலந்து கொண்டனர்.
பாலியல் ரீதியான பாகுபாடுகளைத் தவிர்க்கும் சட்டங்களை 21 அமெரிக்க மாகாணங்களும், பாலின ரீதியான பாகுபாடுகளைத் தவிர்க்கும்
சட்டங்களை வாஷிங்டன் உள்ளிட்ட 16 மாகாணங் களும் நிறைவேற்றியுள்ளன. வாஷிங்டன் உள்ளிட்ட 6 மாகாணங்களில் ஒரு பால் திருமணங்கள் அங்கீகரிப்பட்டுள்ளன.<ref>http://www.aazham.in/?p=1240</ref>
1982ல் அமெரிக்க மாகாணமான விஸ்கான்சினில் முதல் முறையாக பாலியல் ரீதியான பாகுபாடு தடை செய்யப்பட்டது. தொடர்ந்து 1984ம் ஆண்டு கலிஃபோர்னியாவில் உள்ள பெர்க்கலி நகரத்தில் ஒரு பால் ஈர்ப்புடையவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வெர்மோன்ட் மாநிலத்தில் 2000ம் ஆண்டு, ஒரு பால் ஈர்ப்புடையவர்களுக்கான திருமணம் அங்கீகரிக்கப்பட்டது
அமெரிக்க நாடாளுமன்றத்தின் எம். பியான பெர்னிபிராங்க் மற்றும் ஜிம்ரெய்டி ஆகியோர் ஜூலை 7 2012ல் திருமணம் செய்துகொண்டனர். இதன் மூலம் அமெரிக்க அரசியல் வரலாற்றில் முதன்முறையாக பார்லிமென்ட் எம்.பி. தற்பால் சேர்க்கை திருமணம் செய்து கொண்டதாக பூஸ்டன் குளோப் நாளிதல் செய்தி வெளியிட்டுள்ளது.<ref>http://www.dinamalar.com/News_Detail.asp?id=503203&Print=1 பார்த்த நாள் 17-06-2013</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/நேர்பாலீர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது