தினமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
http://www.dinamani.com/editorial/article1215539.ece?service=print
சி http://www.dinamani.com/about_us/
வரிசை 23:
 
தினமணியை வெளியிடும் நிறுவனம் ''நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்'' நிறுவனக் குழுமம் ஆகும். (The New Indian Express Group of Companies). இந்த நிறுவனம் ஆங்கிலத்தில் [[இந்தியன் எக்சுபிரசு|நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்]] பத்திரிகையையும் கன்னடத்தில் கன்னடப் பிரபா நாளிதழையும் வெளியிடுகிறது. சினிமா எக்ஸ்பிரஸ் (தமிழ்), மலையாளம் வாரிகா (மலையாளம்) ஆகியன இந்நிறுவனத்தால் வெளியிடப்படும் இதழ்கள் ஆகும்.
 
==தினமணி பிறந்த கதை==
 
புதிதாக வெளியாக இருக்கும் தேசிய நாளிதழுக்கு, சுருக்கமாக, மனதில் நிற்கும் விதத்தில் நல்லதொரு பெயரைத் தேர்ந்தெடுக்க வாசகர்களுக்கு ஒரு போட்டி வைத்தார் சதானந்த். நல்ல பெயருக்கு பத்து ரூபாய் பரிசு என்று அறிவித்தார். "தினமணி" என்கிற பெயரை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.எஸ். அட்சயலிங்கமும், தியாகராய நகரைச் சேர்ந்த எஸ்.சுவாமிநாதனும் எழுதி அனுப்பி இருந்தனர். பரிசு இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
"தினமணி" என்றால் அது கதிரவனைக் குறிக்கும். அந்தப் பெயர் புதுமையாகவும், கவர்ச்சிகரமானதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள் தருவதாகவும் இருந்தது. நேரடியாகப் பொருள் கொண்டால், அன்றாடம் ஆட்சியாளர்களைத் தட்டி எழுப்பும் மணி என்று சொல்லலாம்.
சென்னை ஜார்ஜ் டவுனிலுள்ள மூக்கர் நல்லமுத்துச் செட்டி தெருவில் அலுவலகத்துடன் தொடங்கப்பட்ட தேசிய தினசரியான "தினமணி", பாரதியாரின் நினைவு நாளன்று வெளிவந்தது. "தினமணி" நாளிதழின் விளம்பரத்தில் "பாரதியார் நீடூழி வாழ்க! தினமணி நீடூழி வாழ்க!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தேசிய நாளிதழ் எந்தக் கட்சியையும் சார்ந்ததல்ல என்றும், சுயநல நோக்கமில்லாமல் மக்களுக்குச் சொந்தமான ஒரே பத்திரிகை என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது.
 
===முதல் இதழ்===
செப்டம்பர் 11, 1934-ஆம் ஆண்டு அரையணா விலையில் எட்டு பக்கங்களுடன் தனது முதல் பக்கத்திலேயே "ஏழை துயர் தீர்க்க, எல்லோரும் களித்திருக்க, எவருக்கும் அஞ்சாத தினமணி" என்கிற வாசகத்தைப் பொறித்த வண்ணம் "தினமணி" நாளிதழின் முதல் இதழ் வெளிவந்தது.
 
===முதல் தலையங்கம்===
""இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும், தன்னைத் "தமிழர்" என்று பெருமையுடன் கூறிக்கொள்ள வேண்டும். நாட்டுக்கு வெளியே செல்லும்போது தன்னை "இந்தியன்" என்று பெருமை பொங்க அழைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்றால் தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ்நாட்டைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்டு வாழும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மற்றும் தமிழ் பேசும் அனைவரும்தான்"" என்று சந்தேகத்துக்கிடமின்றி முதல் நாள் தலையங்கம் விளக்கி இருந்தது.
இதுதான் 1934-ல் "தினமணி" நாளிதழ் பிறந்த கதை.
 
(தினமணியின் 75வது ஆண்டில் (பவள விழா ஆண்டில்) தற்போது எழுதப்பட்ட தலையங்கம். இதில் தினமணி பிறந்த கதை முழுமையாகத் தரப்பட்டுள்ளது.)
 
==தினமணிக் கதிர் ==
"https://ta.wikipedia.org/wiki/தினமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது