செலுலாயிடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''செலுலாய்டுகள்''' (''celluloids'') என்பவை ஒரு வகையான [[சேர்மம்|சேர்மங்களாகும்]]. இவை நைட்ரோசெல்லுலோசு, [[கற்பூரம்|கற்பூரம்]] ஆகியவற்றில் இருந்து மேலதிகமாக [[சாயம்|சாயங்களும்]] சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. இந்த செலுலாய்டுகளே முதன்முதலாக உருவாக்கப்பட்ட [[வெப்ப நெகிழி]] எனக் கருதப்படுகிறது. 1866 இல் பார்க்கின்சைன் என்ற பெயரிலும்,<ref>Stephen Fenichell, Plastic: The Making of a Synthetic Century, p. 17</ref> 1869 இல் சைலோநைட் என்ற பெயரிலும் தயாரிக்கப்பட்டது. பின்பு 1870 இல் செலுலோயிடு என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டது.
இந்த செல்லுலாய்டை எந்த வடிவமாகவும் எளிதில் வார்த்தெடுக்கலாம். முன்பெல்லாம் கத்தியின் கைப்பிடிகள், இசைக் கருவிகள் மற்றும் பல சாதனங்கள் செய்ய யானைத் தந்தங்கள் பயன்படுத்தப்பட்டது. அதற்கு (யானைத் தந்தத்திற்கு) மாற்றாக முதன்முதலில் பரவலாக பயன்படுத்தப்பட்ட பொருள் இந்த செல்லுலாய்டே ஆகும்.
ஒளிப்பட மற்றும் நிகழ்படத் தொழிற்சாலைகள், படச்சுருள்கள் (''film'') தயாரிக்க இந்த செல்லுலாய்டை மட்டுமே பயன்படுதின. பின்பு 1950களில் அசிடேட் படச்சுருள்கள் புழக்கத்திற்கு வந்தன.
இந்த செல்லுலாய்டு எளிதில் தீப்பிடிக்கக்கூடியது. மேலும் இதைத் தயரிப்பது கடினம் மற்றும் மிகுந்த செலவுபிடிக்கும் ஆதலால் இவை பரவலாக பயன்படுத்தப்படுவது இல்லை. எனினும் தற்போது, டேபிள் டென்னிசு பந்துகள், இசைக்கருவிகள் மற்றும் கித்தாரை மீட்ட பயன்படும் சிப்பிகள் தயாரிக்க செல்லுலாய்டு பயன்படுத்தப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/செலுலாயிடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது