காட்சில்லா (2014 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பதிப்புரிமையுள்ள உள்ளடக்கம் http://www.chidambaramtimes.com/2014/05/godzilla.html
வரிசை 21:
 
'''காட்சில்லா''' 2014ம் ஆண்டு வெளிவர இருக்கும் [[அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு அறிவியல் கற்பனை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை '''கரேத் எட்வர்ட்ஸ்''' இயக்க ஆரோன் டெய்லர்-ஜான்சன், கென் வாடனாபே, எலிசபெத் ஓல்சன், ஜூலியட் பினோச்சே, சாலி ஹாக்கின்ஸ்,டேவிட் Strathairn மற்றும் பிரையன் Cranston நடித்துள்ளார்கள்.
 
==கதை சுருக்கம்==
ஜப்பான் நாட்டின் அணுமின் நிலையத்தில் நாயகனின் தந்தையான பிரையன் கரன்ஸ்டோன் மற்றும் அவரது மனைவி வேலை செய்கிறார்கள். ஒருநாள் திடீர் நில அதிர்வு ஏற்பட்டு அந்த அணு உலை சேதமடைந்து அதிலுள்ள அணுக்கதிர்கள் வெளியே வருகின்றன. இதன் தாக்கத்தால் தனது மனைவியை இழக்கிறார் பிரையன்.
 
இந்த சம்பவத்தில் இருந்து அணுமின் நிலையம் உள்ள இடத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கிறார்கள். ஆனால் பிரையன் 15 வருட காலமாக அந்தப் பகுதிக்குள் செல்ல முயற்சி செய்து வருகிறார். ஒரு நாள் இவரை போலீஸ் கைது செய்து விடுகிறது. இதை அறிந்த இவரது மகன் ஆரோன் (நாயகன்) அவரை பார்ப்பதற்காக ஜப்பான் செல்கிறார். அங்கு போலீசிடமிருந்து தந்தையை மீட்கிறார்.
 
பிரையன் தனது மகனிடம் உனது தாய் பூகம்பத்தால் இறக்கவில்லை. தடை செய்யப்பட்ட பகுதிக்குள் வேறு ஏதோ உலகத்தை அச்சுறுத்தகூடிய ஒன்று உள்ளது. இதை இவர்கள் மறைக்கிறார்கள் என்று கூறுகிறார். இதை கேட்ட ஆரோன் தன் தந்தையுடன் தடை செய்யப்பட்ட பகுதிக்கு மீண்டும் செல்கிறார். அங்கு அணுக்கரு பொருட்களை 15 வருட காலமாக சாப்பிட்டு ஒரு மிருகம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று அவர்கள் அறிகிறார்கள். அதைப் பார்த்த பிரையன் இதைத்தான் நான் 15 வருடங்களுக்கு முன்பு சொன்னேன், அப்போது யாரும் நம்பவில்லை என்கிறார். இதைக் கேட்ட ஆராய்ச்சியாளரான கென் மேலும் இதைப் பற்றி அவரிடம் உள்ள குறிப்புகளை எடுத்துக் கொண்டு ஆராய்கிறார்.
 
அப்போது இவர் சொல்வது அனைத்தும் உண்மை என்று தெரியவருகிறது. அந்த மிருகத்தை அழிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அந்த மிருகம் தப்பித்து சென்று விடுகிறது. பின்னர் அந்த மிருகம் வேறொரு மிருகத்துடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்வது தெரியவருகிறது. அது காட்ஸில்லாவாக இருக்குமோ என்று எண்ணுகிறார்கள். ஆனால் அதைப்போலவே வேறொரு மிருகம் இருப்பது தெரியவருகிறது. இந்த மிருகங்கள் அணுக்கருக்களை உணவாக உட்கொள்கின்றன. இதனால் நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள் சூழ்கிறது. இதை ராணுவம் தடுக்க முயற்சி செய்கிறது. ஆனால் அவர்களின் முயற்சி பயனளிக்காமல் போகிறது.
 
இந்த மிருகங்கள் செய்யும் செய்கைகளை தடுக்க இதைப் போன்ற மிருகம் ஒன்று வந்தால்தான் அழிக்க முடியும் என்று ராணுவம் எண்ணுகிறது. இந்நிலையில் ஆழ்கடலில் இருக்கும் காட்ஸில்லா இந்த மிருகங்களின் செய்கைகளை அறிகிறது. இவைகளை அழிக்க ஆழ்கடலில் இருந்து காட்ஸில்லா வந்து இந்த மிருகங்களுடன் சண்டை போடுகிறது.
 
இறுதியில் காட்ஸில்லா இந்த மிருங்களுடன் சண்டைப் போட்டு நாட்டு மக்களை காப்பாற்றியதா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/காட்சில்லா_(2014_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது