பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
வரிசை 24:
==வாழ்க்கைக் குறிப்பு==
பழந்தமிழ்க் குடியான [[அகமுடையார்|அகம்படியர்]] குடியில் சாத்தப்பப் பிள்ளை என்பாருக்கும் செங்கமலம் என்பாருக்கும் மகனாக தோராயமாக [[1850]] ஆம் ஆண்டு இராமேசுவரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு என்பதாகும். [[1866]] ஆம் [[ஆண்டு]] உள்ளூர் [[கிறித்தவம்|கிருத்துவப்]] [[பள்ளிக்கூடம்|பள்ளியில்]] பயின்றார். முனியாண்டிப் பிள்ளை என்பாரிடம் [[தமிழ் மொழி|தமிழ்]] கற்றார். சிறுவயதில் இவருக்கு கந்தர் சட்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும். இதுவே இவர் பின்னாளில் [[சண்முக கவசம்]] இயற்ற தூண்டுதலாக இருந்தது. சேது மாதவ அய்யர் என்பாரிடம் வடமொழியும் கற்கலானார்.
 
தமது 12,13 வயதிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்தார். இவருடைய முதல் பாடல் ஆசுகவியாக உருவாகிய "கங்கையைச் சடையில் பதித்து" எனத் தொடங்குவது. அருணகிரிநாதரை ஞானகுருவாகக் கொண்ட இவர் பின்னாளில் ’உபய அருணகிரிநாதர்’ என்ற பெயரும் பெற்றார்.<ref name="சுவாமிகள்">அமுதசுரபி தீபாவளி மலர் 2004; ஸ்ரீ பாம்பன் சுவாமிகள்; பக்கம் 150,151,152</ref>
 
இவருக்கு அகவை 25ஐ எட்டிய பொழுது [[மதுரை]] சின்னக் கண்ணு பிள்ளை மகளாகிய காளிமுத்தம்மாளை [[1878]]ஆம் ஆண்டு வைகாசித்திங்களில் [[இராமநாதபுரம்|இராமநாதபுரத்தில்]] திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முருகையபிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாச பிள்ளை என [[3 (எண்)|மூன்று]] மகவுகள் பிறந்தனர்.
வரி 33 ⟶ 35:
</blockquote>
 
[[1923]]ஆம் ஆண்டு [[திசம்பர் 27]] அன்று சென்னை தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த சுவாமிகள் மீது, [[குதிரை]] வண்டிச் சக்கரம் இடது கணைக்கால் மீது ஏறியதால் கால் [[எலும்பு]] முறிந்து சுவாமிகள் [[மருத்துவமனை|பொதுமருத்துவ மனையில்]] சேர்க்கப்பட்டார். இந்த விபத்து நடந்த போது பாம்பன் சுவாமிகளின் வயது 73.ஆங்கிலேய மருத்துவர்களால் குணமடைவது கடினம் என்று கூறி கைவிடப்பட்டார்.அங்கு தொடர்ந்த சண்முகக் கவசம் பாடிவந்தமையால் [[மயில்]] வாகனத்தில் வந்த முருகன் அருளால் கால் எலும்பு சேர்ந்ததாகசேர்ந்ததால் அந்நாள் ''மயூர சேவன விழா'' என ஆண்டுதோறும் [[மார்கழி]] மாதத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.சென்னை மருத்துவமனையில் "மன்ரோ வார்டில்" பாம்பன் சுவாமிகளின் திருவுருவப்படம் மாட்டப்பட்டு நோயாளிகளால் வழிபடப்படுகிறார்.<ref name="சுவாமிகள்"/>
 
1926 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 அன்று உயில் எழுதி மகா தேஜோ மண்டலசபை அமைப்பு நடைமுறையை ஏற்படுத்தினார்.<ref name="சுவாமிகள்"/>
 
[[மே 30]] , [[1929]] அன்று காலை 7.15 மணிக்குச் சுவாமிகள் சமாதியடைந்தார்கள். சுவாமிகள் திருமேனி அலங்கரிக்கப்பட்ட புஷ்பவிமானத்தில் ஊர்வலாமாகஊர்வலமாக எடுத்து வரப்பட்டு [[மே 31]] , [[1929]] [[திருவான்மியூர்|திருவான்மியூரில்]] சமாதி அமைக்கப்பட்டது.
 
==சுவாமிகள் இயற்றிய பாடல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பாம்பன்_குமரகுருதாச_சுவாமிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது