கோச்சடையான் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

25 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
கோட்டையபட்டினம் தேசத்து மன்னன் நாசர். இந்நாட்டில் தலைமை படைத்தளபதியாக இருப்பவர் கோச்சடையான். இவருக்கு ராணா, சேனா என இரு மகன்கள். கோச்சடையான் சிவபக்தர். சிறந்த வீரரும்கூட. அதனால் நாட்டு மக்கள் அவர் மேல் அளவு கடந்த அன்பு வைக்கின்றனர். இது நாசருக்கு பிடிக்கவில்லை. ஆகையால் கோச்சடையானை எப்படியாவது அழிக்க வேண்டுமென்று முயற்சிக்கிறார். இந்நிலையில் ஒருநாள் கோச்சடையான், தனது போர் வீரர்களை அழைத்துக்கொண்டு வேறு நாடுகளுக்கு சென்று போருக்கு தேவையான குதிரைகளை வாங்கி கப்பலில் கொண்டு வருகிறார்.
 
அப்போது கோட்டையபட்டினத்தின் எதிரி நாடான கலிங்கபுரியை ஆட்சி புரியும் ஜாக்கி ஷெராப்பின் படை வீரர்கள் மறைந்திருந்து கோச்சடையான் கப்பல்கள் மீது பாய்ந்து சண்டையிடுகிறார்கள். அப்போது நடக்கும் சண்டையில் அனைவரையும் விரட்டியடிக்கிறார் கோச்சடையான். கலிங்கபுரி வீரர்கள் தப்பித்து செல்லும் செல்லும்போது கோச்சடையானின் கப்பல்களில் இருக்கும் உணவுகளில் விஷத்தை கலந்துவிட்டு செல்கிறார்கள். அதை உண்ணும் கோச்சடையானின் வீரர்கள் உயிருக்கு போராடுகிறார்கள்.
 
இவர்களை காப்பாற்றுவதற்காக கோச்சடையான் அருகிலிருக்கும் கலிங்கபுரிக்கு சென்று அரசர் ஜாக்கி ஷெராப்பை சந்தித்து, தன் போர் வீரர்களை காப்பாற்றும்படி கேட்கிறார். அதற்கு, ஜாக்கி ஷெராப் அவர்களை காப்பாற்றுவதென்றால், நீ கொண்டு வந்த வீரர்களையும், குதிரைகளையும் என்னிடமே கொடுத்துவிட்டு செல்லவேண்டும் என்று கூறுகிறார். அதற்கு கோச்சடையானும் சம்மதித்து அவரிடமே அனைத்தையும் விட்டுவிட்டு தனது சொந்த நாட்டுக்கு திரும்புகிறார். இருப்பினும், எப்படியாவது தனது வீரர்களை தன்னுடைய நாட்டுக்கு திரும்ப அழைத்துச் செல்வேன் என்று ஜாக்கி ஷெராப்பிடம் சூளுரைத்துவிட்டு வருகிறார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1727655" இலிருந்து மீள்விக்கப்பட்டது