விடத்தல்தீவு புனித யாகப்பர் ஆலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"புனித யாகப்பர் ஆலயம் மன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

04:07, 25 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

புனித யாகப்பர் ஆலயம் மன்னார் நகரத்திலிருந்து 25 கி. மீ தொலைவில் மன்னார் சங்குபிட்டி பிரதான பாதையிலிருந்து வடமேரற்கே 1.25 கி .மீ தூரத்தில் அமைந்துள்ள விடத்தல் தீவு என்னும் கிராமத்தில் எழில்மிகு தோற்றத்துடன் கம்பீரமாக காட்ச்சியளிக்கின்றது.

ஆலயத்தின் வரலாறு வண.பிதா.அன்ரனைஸ் மடுத்திருப்பதி பற்றி எழுதிய வரலாற்று நூலில் மன்னார் பகுதியில் 400 ஆண்டுகளுக்கு முன்பதாக 4 கத்தோலிக்க ஆலயங்கள் இருந்ததாகவும் அதிலொன்று விடத்தல் தீவு புனித யாகப்பர் ஆலயம் என்றும் குறிப்பிடுகிறார். தற்போதும் இந்த ஆலயத்தின் புராதன அடையாளங்கள் காணப்படுகின்றன.

யாழ், நவாலி,அல்லைப்பிட்டி ஆகிய இடங்களிலிருந்து மீன்பிடி தொழில் வாய்ப்பு தேடி இங்கு வந்து சில கத்தோலிக்கர் குடியேறினார்கள் என்றும் அவர்களினால் தான் இக்கோவில் கட்டப்பட்டது என்றும் அவர்களுடைய சந்ததியினர் தான் தற்போது வாழ்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இம்மக்கள் யாகப்பர் ஆலயத்தில் தமது வழிபாடுகளை நடாத்தி வந்தார்கள். 1918 அளவில் ஏற்ப்பட்ட ஒரு சச்சரவினால் ஒரு சிலர் இன்னுமொரு ஆலயத்தை கட்டி வழிபடத்தொடங்கினார்கள். தற்போது விடத்தல் தீவில் புனித யாகப்பர், புனித மரியன்னை என்ற இரு ஆலயங்கள் உண்டு.

பங்கு வளர்ச்சி 1948ம் ஆண்டு ஈறாக இரணைதீவு பங்கின் ஒரு பங்கு தளமாக புனித யாகப்பர் ஆலயம் இயங்கி வந்தது.இரணைதீவிலிருந்து வள்ளத்தில் வந்து குருக்கள் மக்களது ஞனக்கடமைகளை நடத்திவந்த்தார்கள்.அதன் பிற்பாடு அடம்பன் பங்கோடு இணைக்கப்பட்டது. தற்போது ஒரு தனிப்பங்காக இயங்குகின்றது.