அப்துல் காதிர் அல்-ஜிலானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
'மஹ்பூபே சுப்ஹானி', 'மஹ்ஷுக்கே ரஹ்மானி', 'கிந்திலே நூரானி' என்ற சிறப்புப் பெயர்களால் போற்றிப் புகழப்பட்ட கௌதுல் அஃலம் முஹைய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் ரமழான் மாதம் முதல் நாளில் பிறந்ததினால் அம்மாதம் முழுவதும் பகல் வேளைகளில் பால் அருந்தவில்லை என்று, அன்னாருக்கு குழந்தைப் பருவத்திலே இருந்த மகத்துவத்தை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள். அல்-ஜிலானி (ரஹ்) ஆரம்பக்கல்வியை தனது 6 வது வயதில் சொந்த ஊரிலேயே பெற்றார்கள். ஒரு நாள் தனது வீட்டின் மேற்தளத்தில் உலவிக்கொண்டிருந்தபோது, பல ஆயிரம் மைல்களுக்கப்பால் மக்காவின் அரபாத் வெளியில் இலட்சக்கணக்கான ஹஜ் யாத்திரிகர்கள் இறைவனை வழுத்தி அழுது கண்ணீர் வடித்து இறைஞ்சிக்கொண்டிருக்கும் நிலையைக் கண்டார்கள். தன் கண்களையே நம்ப முடியாது திகைத்து நின்ற கௌதுல் அஃலம் அவர்கள், தமது கடமை இறைபணி செய்வதே என்று தீர்மானித்து, அதற்குத் தம்மைத் தயார்படுத்திக் கொள்ள அக்காலத்தில் இஸ்லாமிய அறிவின் இருப்பிடமாக விளங்கிய பக்தாத் மாநகரத்துக்குச் செல்லத் தயாராகினார்கள்.
 
கி.பி.1095இல் தனது பதினெட்டாம் வயதில் உயர்கல்வியைக் கற்பதற்காக [[ஈராக்]]கின் [[பக்தாத்]] நகருக்கு சென்றார்சென்றார்கள். பக்தாத் மாநகரம் ஜீலானிலிருந்து 400 மைல்களுக்கப்பால் இருந்தது. ஒரு நாள் நாற்பது வணிகர்கள் இருநூறு ஒட்டகங்களில் தமது வியாபாரச் சாமான்களை ஏற்றிக்கொண்டு பக்தாத் செல்லவிருப்பதாகக் கேள்வியுற்ற கௌதுல் அஃலம் அவர்கள், வணிகக்கூட்டத்தினருடன் சேர்ந்து அங்கு செல்ல விரும்பினார்கள். தமது இந்த விருப்பத்தை அன்னையிடம் கூறியபோது கௌதுல் அஃலம் அவர்களுடைய சட்டையின் உட்புறத்தில் 40 பொற்காசுகளை வைத்துத் தைத்துக் கொடுத்து தமது மகனிடம் எச்சந்தர்ப்பத்திலும் பொய் கூறக்கூடாதுபேசக்கூடாது என்று புத்திமதி கூறி அன்னையவர்கள் வழியனுப்பி வைத்தார்கள்.
 
வணிகக்குழு ஹமதான் நகரைக் கடந்து தர்தங் என்னும் காட்டினூடே சென்று கொண்டிருந்தபோது திடீரென கொள்ளைக்கூட்டமொன்று இடைமறித்துத் தாக்கி பொருட்களையெல்லாம் கொள்ளையடித்தது. இவ்வளவு ரகளை நடந்தும் சற்றேனும் அமைதி குலையாதவராக நின்றுகொண்டிருந்த கௌதுல் அஃலம் அவர்களைக் கண்ட கொள்ளைக்கூட்டத்தின் தலைவன் ஆச்சரியப்பட்டு ' உன்னிடம் என்ன உள்ளது?' என வினவினான். சற்றும் தாமதியாது என்னிடம் 40 பொற்காசுகள் உள்ளன என்று கூறினார்கள். இது கேட்ட தலைவன் 'அவற்றை எங்கே வைத்திருக்கின்றீர்?' என்றபோது கௌதுல் அஃலம் அவர்கள் தமது விலாப்பக்கத்தைக் காட்டினார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/அப்துல்_காதிர்_அல்-ஜிலானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது