பசுமை விகடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 43:
பசுமை விகடன் மாதம்தோறும் 10 மற்றும் 25 தேதிகளில் சென்னையிலிருந்து வெளிவருகிறது. முதல் இதழ், 2007\ம் ஆண்டு ஜனவரி மாதம் 26\ம் தேதியன்று, தமிழ் கூறும் நல்லுலகுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதற்கான விழா, கோயம்புத்தூரில் விவசாயிகளின் மத்தியில் நடைபெற்றது. உலகெங்கும் இருக்கும் பாரம்பரிய மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் தமிழக விவசாயிகளைச் சென்றடைய வேண்டும் என்கிற உயரிய நோக்கில், 80 ஆண்டுகால பாரம்பரியமான ஆனந்த விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திரு.பா. சீனிவாசன், பசுமை விகடனை அறிமுகப்படுத்தினார்.<ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=73825 அர்ப்பணிப்பு விழா]</ref>இன்றைக்கு வரும் பெரும்பாலான நோய்களுக்கான அடிப்படைக் காரணம், ரசாயனம் மூலம் விளைவிக்கப்படும் பயிர்கள்தான் என்பதால், இயற்கை வழி விவசாயத்தை வலியுறுத்திவரும் பசுமை
விகடன், இதை ஒரு சமுதாயக் கடமையாகச் செய்து வருகிறது. 60 நாட்களில் விளையும் அறுபதாம் குறுவை என்ற நெல் ரகம் அழிந்து போன நிலையில், அதை தேடிக் கண்டுபிடித்து மீட்டெடுக்கும் பணியில் தோள் கொடுத்ததோடு, அந்த விதைகளை விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்ததன் பலனாக, இன்றைக்கு பல நூறு ஏக்கர்களில் விளைகிறது அறுபதாம் குறுவை.<ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=70468 ஆண்டுக்கு ஐந்து போகம்... அள்ளிக் கொடுக்கும் அற்புத ரகம்!]</ref> 70 நாட்களில் விளையும் பூங்கார், வெள்ளத்தால் பாதிக்கப்படாத மடுமுழுங்கி, வறட்சியைத் தாங்கி வளரும் மாப்பிள்ளை சம்பா, சன்ன ரகமான ‘சொர்ணமசூரி’ போன்ற சம்பா ரகங்கள் என கிட்டத்தட்ட 13 பாரம்பரிய ரகங்களை அழிவின் விளிம்பில் இருந்து மீட்டெடுக்க, தோள் கொடுத்திருக்கிறது பசுமை விகடன்.<ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=2012 பசுமையில் படித்தேன்... சொர்ணமசூரி விதைத்தேன் !]</ref><ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=70680 பூங்கார் என்றொரு பொக்கிஷம்...!]</ref>
 
== சமூக அக்கறை ==
ஒரு பத்திரிகை என்பதோடு நிற்காமல், விவசாயிகளுக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தியுள்ளது. குறிப்பாக, மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிரான கருத்துக்களுக்கு போதுமான இடத்தைத் தொடர்ந்து அளித்து வருகிறது பசுமை விகடன். இதன் தாக்கத்தால், தமிழகத்தில் மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. பாரம்பரிய இயற்கை விவசாயம் சார்ந்த பயிற்சிகள் மற்றும் பரப்புரைகளை ஒடுக்கும் வகையில் தமிழக அரசால் 'தமிழ்நாடு வேளாண் மன்ற சட்டம் -2009' என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட கறுப்புச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்ததோடு, விவசாயகளின் துணையோடு அந்தச் சட்டத்தை அறிமுக நிலையிலேயே முடங்குவதற்கு தோள் கொடுத்தது பசுமை விகடன்.
 
பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கும் அதேவேளையில், பயன்படுத்தத் தகுந்த நவீன தொழில்நுட்பங்களையும் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது.<ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=16583 கருவிகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்!]</ref>
 
2012-ம் ஆண்டு ஏற்பட்ட தானே புயலில் சிக்கித் தவித்த கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் துயர் துடைத்ததில் முனைப்புக் காட்டியது பசுமை விகடன்.<ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=16004 'தானே'துயர் துடைக்க...நீளட்டும் நம் கரங்கள் !]</ref>
 
பசுமை விகடனின் வருகைக்குப் பிறகு தமிழக விவசாயிகள் மத்தியில் ஒரு நெட்வொர்க் அமைந்திருக்கிறது. பல்வேறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பசுமை விகடன் மூலமாக அறிமுகமாகி, தங்களுக்குள் தொழில்நுட்பங்கள், விதைகள், செடிகள் போன்றவற்றை பரிமாறிக்கொள்கிறார்கள். பசுமை விகடன் ஏற்படுத்திய விழிப்பு உணர்வின் காரணமாக, விவசாயிகள் தங்களிடம் இருக்கும் விதையைத்
தேவைப்படும் விவசாயிக்கு இலவசமாகக் கொடுத்து விளைச்சல் வந்த பிறகு, இரண்டு மடங்காகத் திரும்பி வாங்கும் ‘ஒட்டிக்கு ரெட்டி முறை’ இன்று பெரும்பாலான விவசாயிகள் மத்தியில் நடைமுறையில் இருக்கிறது. விவசாயிகள் மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்கள் மத்தியிலும், விவசாயம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.<ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=28904 வகுப்பறையில் பசுமை விகடன்... பள்ளிவளாகத்தில் வயல் காடு..]</ref>
 
== இயற்கை விவசாய எழுச்சி ==
பசுமை விகடன் வருகைக்குப் பிறகு, இயற்கை விவசாயம் தொடர்பான விழிப்பு உணர்வு தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. விவசாயிகள் இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்களைத் தெரிந்துகொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளது பசுமை விகடன். இயற்கை வேளாண் விஞ்ஞானிÕ கோ. நம்மாழ்வார் தலைமையில், ‘இனியெல்லாம் இயற்கையே’ என்ற
தலைப்பில், நடத்தப்பட்ட அந்த பயிற்சிகளில் பங்கேற்ற விவசாயிகளில் பலரும், இன்றைக்கு தமிழகத்தின் முன்னோடி இயற்கை விவசாயிகளாக விளங்குகிறார்கள். மேலும், ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களை விவசாயத்தில் இறங்குவதற்கான வழிகட்டியாக பசுமை விகடன் திகழ்கிறது.
<ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=70987 வயல் வெளியே... பல்கலைக்கழகம்!]</ref>
 
விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதற்கு காரணம், சாகுபடி செலவுகள்தான். சாகுபடிச் செலவுகளைக் குறைக்கும் வகையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த வேளாண் அறிஞர் சுபாஷ் பாலேக்கர் ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மைத் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து பரப்பிக் கொண்டிருக்கிறார்.
இவரை தமிழகத்துக்கு முதன்முதலாக அழைத்து வந்து, ஜீரோ பட்ஜெட் விவசாய முறையை அறிமுகப்படுத்தியது பசுமை விகடன். 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் திண்டுக்கல், ஈரோடு ஆகிய இரண்டு இடங்களில் சுபாஷ் பாலேக்கரின் இரண்டு நாள் மற்றும் நான்கு நாள் பயிற்சி வகுப்புகள்
நடத்தப்பட்டன. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், கிட்டத்தட்ட 3,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்தப் பயிற்சிகளில் கலந்துகொண்டனர். தற்போது, ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பம் தமிழகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. இதனால் விவசாயிகளின் சாகுபடிச் செலவும் குறைந்திருக்கிறது.<ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&mid=8&sid=2511 பசுமை விகடன் 2007-10-25]</ref>
<ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=71115 ஈரோட்டில் ஒரு தேரோட்டம்]</ref>
 
‘வீட்டிலும் செய்யலாம் விவசாயம்..’ கால்நடை வளர்ப்புக் கருத்தரங்குகள், மரம் வளர்ப்புக் கருத்தரங்குகள் இயற்கை இடுபொருள் தயாரிப்புக் கருத்தரங்குகள், பூச்சி\நோய் மேலாண்மை பற்றிய கருத்தரங்குகள், வீட்டுத் தோட்டம், சிறுதானியம் என பல்வேறு தலைப்புகளில் இதுவரை 300 க்கும்
மேற்பட்ட பயிற்சிகளைக் கொடுத்திருப்பதுடன், பயிற்சிகளைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டும் வருகிறது பசுமை விகடன். விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தகுந்த வல்லுநர்களை அவர்களின் தோட்டங்களுக்கே அழைத்துச் சென்று, தீர்வை ஏற்படுத்திக் கொடுக்கும் பணியையும்
சிறப்பாகச் செய்து வருகிறது.
 
சிறுதானியம் மற்றும் மரம் வளர்ப்பு போன்றவற்றை ஊக்குவிப்பதில் பசுமை விகடன் முன்னணியில் இருக்கிறது. இது தொடர்பான ஆதாரப்பூர்வ கட்டுரைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. இதன் விளைவாக, இன்றைக்கு சிறுதானியம் பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்து, இதன் விளைச்சல் உயர ஆரம்பித்துள்ளது. இதேபோல மரம் வளர்க்கும் விவசாயிகளின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.
* சிறுதானிய விவசாயமே சிறப்பான விவசாயம்!<ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=69856 'வானம் பார்த்த பூமி... வாழ வைத்த சாமி!']</ref>
* பென்ஷன் கொடுக்கும் மரங்கள்! மரம் வளர்ப்பு மூலம் லாபம் அள்ளும் விவசாயிகள்!<ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=29976 பென்ஷன் கொடுக்கும் மரங்கள்!]</ref>
 
== வாள் முனையாக பேனாமுனை ==
விவசாயத் தொழில்நுட்பங்கள் மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கு எதிரான செயல்களையும் கடுமையாக கண்டித்து வருவதுடன், பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகளையும் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது. பல்வேறு மோசடிகளை விவசாயிகளுக்கு அடையாளம் காட்டியதுடன், விழிப்பு உணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.
* ஈமுக்கோழி வளர்ப்பு மோசடிகளால் சுருண்ட விவசாயிகள்!<ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=19792 ஈமு விளம்பரங்களைப் பார்த்து ஏமாற வேண்டாம் !]</ref><ref>[http://www.vikatan.com/new/
article.php?module=magazine&aid=22543 முதலீடு செய்யாதீங்க !]</ref>
* காட்டாமணக்கு பயிரிட்டதால், சருகாகிப் போன விவசாயிகள்!<ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=86291 காலை வாரிய காட்டாமணக்கு!]</ref>
* தண்ணீர் பயன்பாடு குறித்த விழிப்பு உணர்வு மற்றும் தொழில்நுட்பங்கள்.<ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=96200 மீத்தேன் எமன் - 'துபாய் ஆக மாறும் காவிரிப்படுகை?!']</ref>
* காவிரி டெல்டாவை விழுங்கும் மீத்தேன் எமனுக்கு எதிராக வாள் வீச்சு!<ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=98607 மீத்தேன் எமன் - 'துபாய் ஆக மாறும் காவிரிப்படுகை?!']</ref>
 
 
{{விகடன் குழுமம்}}
"https://ta.wikipedia.org/wiki/பசுமை_விகடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது