திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி சேர்க்கை
வரிசை 53:
| 12 || [[இலங்கை]] || சனவரி 13-15 || 2015 || பயண நிகழ்வுகள்: சனவரி 12 மாலை: உரோமையிலிருந்து புறப்படுகிறார். சனவரி 13: காலையில் கொழும்பு பன்னாட்டு விமான நிலையம் வந்தடைகிறார். வரவேற்பு நிகழ்ச்சி, உரை. பிற்பகல்: இலங்கையின் கத்தோலிக்க ஆயர்களுக்கு உரையாற்றுகிறார். மாலை: இலங்கை அதிபரை சந்தித்தல்; பல்சமய நல்லிணக்கக் கூட்டத்தில் கலந்து உரையாற்றுகிறார். சனவரி 14: [[கொழும்பு]] நகரில் அருளாளர் [[யோசப் வாசு|யோசேப்பு வாஸ்]] என்பவருக்குத் திருத்தந்தை பிரான்சிசு புனிதர் பட்டம் வழங்குகிறார்; மறையுரை ஆற்றுகிறார். பிற்பகல் 2 மணிக்கு உலங்கு வானூர்தியில் கொழும்பிலிருந்து புறப்பட்டு இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள புகழ்மிக்க [[மடு மரியாள் ஆலயம்|மடு அன்னை மரியா]] திருத்தலத்திற்குச் சென்று அங்கே 3:30 மணியளவில் மரியன்னையின் மன்றாட்டினை நிகழ்த்துகிறார். உரையாற்றுகிறார். பின்னர் உலங்கு வானூர்தியில் கொழும்பு வருகிறார். சனவரி 15: பொலவலானாவில் இலங்கையின் அரசி என்று போற்றப்படுகின்ற அன்னை மரியாவின் திருத்தலத்திற்குச் சென்று வேண்டுதல் நிகழ்த்துகிறார். கொழும்பிலிருந்து புறப்பட்டு பிலிப்பீன்சு நாடு செல்கிறார்.
|-
| 13 || [[பிலிப்பீன்சு]] || சனவரி 15-19 || 2015 || வியாழன், சனவரி 15: கொழும்பிலிருந்து சிறீலங்கா ஏர்லைன்சு விமானத்தில் மணி்லாவின் வில்லாமோர் விமானப் படைத்தளம் வந்தடைகிறார். அதிகாரப்பூர்வ வரவேற்பு. வெள்ளி, சனவரி 16: அதிபர் மாளிகையில் வரவேற்பு; திருத்தந்தை பிரான்சிசு பிலிப்பீன்சு நாட்டு அதிபர் [[பெனிக்னோ அக்கீனோ III]] என்பவரை சந்தித்துப் பேசுகிறார். மணிலா மறைமாவட்டக் கோவிலில் ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவியரோடு திருப்பலி நிறைவேற்றுகிறார். குடும்பங்களை சந்திக்கிறார். சனிக்கிழமை, சனவரி 17: 2013ஆம் ஆண்டில் கடும் புயலால் பாதிக்கப்பட்ட தாக்லபான் நகருக்குச் சென்று திருப்பலி ஆற்றுகிறார். மக்களைச் சந்திக்கிறார். சனவரி 18: ஞாயிறு: கிறித்தவ மற்றும் பிற மதத் தலைவர்களை மணிலாவின் புனித தோமா பல்கலைக்கழகத்தில் சந்தித்து உரையாற்றுகிறார். இளையோரை சந்திக்கிறார். பிற்பகல் 3:30 மணிக்கு மணிலாவில் மாபெரும் ரிசால் வெளியரங்கத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார். அதில் பல இலட்சம் மக்கள் பங்கேற்பர். சனவரி 19: திங்கள்: திருத்தந்தைக்குப் பிரியாவிடை அளிக்கப்படுகிறது. (மேலதிகத் தகவல்கள் கீழே காண்க).
|}
 
வரிசை 156:
 
பொது மன்றாட்டு தமிழில் இசையமைப்பிலும், சிங்களத்திலும் எடுத்துரைக்கப்பட்டன. இலங்கையில் நீதி, அமைதி, சம உரிமை நிலவிட மன்றாட்டுகள் எழுப்பப்பட்டன. திருத்தந்தை சிறப்பு ஆசி வழங்கியபோது மக்கள் செபமாலை, சிறு சுரூபங்கள் மற்றும் படங்களை உயர்த்திப் பிடித்துக்கொண்டிருந்தனர். “சர்வேசுரா சுவாமி, இரக்கமாக எங்களைப் பாரும். கன்னி மரியாயே, மருதமடுமாதாவே, எங்களுக்காக இயேசுவை மன்றாடும்” ஆகிய மன்றாட்டுகளை மக்கள் எல்லாரும் சேர்ந்து பாடினார்கள். மடுமாதா சுருபத்தைக் கைகளில் வாங்கிக்கொண்டு, அதைக்கொண்டு மக்களுக்குத் திருத்தந்தை ஆசி வழங்கினார். திருத்தந்தைக்கு மரத்தில் செதுக்கப்பட்ட மடு அன்னையின் சுரூபம் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. அதைப் பெற்று முத்தம் அளித்த பிரான்சிசு, அதை இறுதிவரைத் தம் கைகளில் தாங்கிக்கொண்டிருந்தார். அப்போது “எங்கள் ஞானத் தந்தையர்க்கு இறைவனே ஆசி அளித்திடுவீர்” என்ற கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் பிரான்சிசு மடுமாதா சுரூபத்திற்கு ஒரு செபமாலையை அணியாகச் சூட்டினார்.
 
==திருத்தந்தையின் பிலிப்பீன்சு பயணம் பற்றிய சில தகவல்கள்==
திருத்தந்தையின் பிலிப்பீன்சு பயணம் அவருடைய ஆசியப் பயணத்தின் இரண்டாம் கட்டம் ஆகும். இலங்கையில் பயணத்தை முடித்துக்கொண்டு நேரடியாக அவர் பிலிப்பீன்சு வந்தார். ஆசியாவில் கத்தோலிக்கர் மிகப் பெரும்பான்மையராக உள்ள நாடு இது. சுமார் 100 மில்லியன் மக்களைக் கொண்ட இந்த நாட்டில் சுமார் 80 மில்லியன் பேர் கத்தோலிக்கர்.
 
1521இல் இங்கு எசுப்பானியக் குடியேற்ற ஆதிக்கம் தொடங்கியது. அதோடு கத்தோலிக்கமும் பரவியது.
 
பிலிப்பீன்சு மக்களின் கத்தோலிக்க நம்பிக்கையை உறுதிப்படுத்துவதும், அந்நாட்டில் வாழ்கின்ற எண்ணிறந்த ஏழைமக்களுக்கு வளமான வாழ்வு அமைக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதும், 2013இல் கடும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதும் தமது பயணத்தின் நோக்கங்கள் என்று திருத்தந்தை கூறினார்.
 
பிலிப்பீன்ஸ், தென்கிழக்கு ஆசியாவில், மேற்கு பசிபிக் பெருங்கடலில் 7,107 தீவுகளைக் கொண்டுள்ள ஒரு நாடு. இந்நாடு, பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ளதாலும், நில நடுக்கோட்டுக்கு அண்மையில் உள்ளதாலும், நிலநடுக்கங்களும் கடும் புயல்களும் அடிக்கடி ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது. இந்த இயற்கையின் சீற்றத்தைத் திருத்தந்தையின் பயணத்தின்போது உணர முடிந்தது. பிலிப்பீன்சில் பயணம் செய்யும் திருத்தந்தை பிரான்சிசு சனிக்கிழமை, சனவரி 17ஆம் நாள் உள்ளூர் நேரம் காலை 8.15 மணிக்கு மனிலாவிலிருந்து விமானத்தில் லெய்ட்டே (Leyte) தீவுக்குச் சென்றார். 650 கிலோ மீட்டர் தூரத்தை ஒரு மணி 15 நிமிடங்கள் பயணம் செய்து அத்தீவின் முக்கிய நகரங்களில் ஒன்றான தக்லோபான் அடைந்தார். ஆனால் அந்நாட்டு வானிலை அறிக்கையின்படி இன்று இத்தீவில் கடும் புயல் அடிக்கும் என விமான ஓட்டுனர்கள் எச்சரித்தனர். அதிலும் மதியம் ஒரு மணிக்குமேல் புயலின் வேகம் அதிகரிக்கும், விமானப் பயணம் கடினம் என்று கூறியதால் இந்நகரில் திருப்பலியை நிறைவேற்றிய பின்னர் பிற்பகலில் மனிலா வந்து சேர்ந்தார் திருத்தந்தை பிரான்சிசு.
 
திருத்தந்தை பிரான்சிசின் பயண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அங்கு செல்லவிருந்த ஆயிரக்கணக்கான மக்களாலும் அங்கு செல்ல இயலவில்லை. இச்சனிக்கிழமையன்று கன மழையுடன் மெக்கால (Mekkhala) புயல் வீசிய இதே லெய்ட்டே (Leyte) தீவும், தக்லோபான் நகரமும்தான் 2013ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி ஹையான் கடும் புயலால் கடுமையாய்த் தாக்கப்பட்டன. ஏழு மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பி கடும் சேதத்தை விளைவித்தன. இப்பகுதியில் இதுவரை இடம்பெற்ற கடும் புயல் இது என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த ஹையான் கடும் புயலில் தக்லோபான் நகரின் ஏறக்குறைய 90 விழுக்காடு அழிந்தது. லெய்ட்டே தீவின் ஆறு மாநிலங்கள் மற்றும் 44 மாவட்டங்களில் ஒரு கோடியே 45 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டனர். ஏறக்குறைய பத்து இலட்சம் மக்கள் வீடுகளை இழந்தனர்.
 
ஹையான் கடும் புயல் வீசி 14 மாதங்கள் கழித்து, பிலிப்பீன்ஸ்க்கு மூன்று நாள் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிசு ஹையான் புயலில் கடுமையாய்ப் பாதிப்படைந்த மக்களை நேரில் கண்டு தனது அன்பைத் தெரிவிப்பதற்கு மிகவும் ஆவல்கொண்டு தனது பயணத் திட்டங்களில் முக்கியமானதாக தக்லோபான் செல்வதைக் குறித்திருந்தார். அத்திட்டத்தின்படி சனவரி 17, சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்குத் திருப்பலி நிகழ்த்தினார். ஆனால் மோசமான வானிலை காரணமாக திருப்பலியை வேகமாக முடிக்க வேண்டியிருந்தது. கொட்டும் மழையில் பல்லாயிரக்கணக்கான விசுவாசிகள் மஞ்சள் நிறத்தில் மழைப்பாகையை அணிந்துகொண்டு திருப்பலியில் பக்தியோடு பங்கெடுத்தனர். திருத்தந்தையும் மஞ்சள் நிறத்தில் மழைப்பாகை அணிந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினார். இத்திருப்பலிக்கென ஏற்கனவே ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டிருந்த மறையுரையை வழங்காமல் எசுப்பானிய மொழியில் சுருக்கமாக தனது உள்ளத்துணர்வுகளை மக்களோடு பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை. அவர் இஸ்பானிய மொழியில் சொல்லச் சொல்ல ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பும் நடைபெற்றது.
 
தக்லோபான் நகரில் நிறைவேற்றிய திருப்பலியின் இறுதியில், அம்மக்களுக்காகச் செபித்து ஆசீர் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
 
கன மழையையும் பொருட்படுத்தாது பல்லாயிரக் கணக்கில் இத்திருப்பலியில் மக்கள் கலந்துகொண்டனர். இத்திருப்பலிக்குப் பின்னர், அங்கிருந்து 12 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பாலோ பேராயர் இல்லத்தில் ஹையான் புயலில் கடுமையாய்ப் பாதிப்படைந்த 30 குடும்பங்களுடன் திருத்தந்தை மதிய உணவு அருந்துவதாகப் பயணத் திட்டத்தில் இருந்தது. கன மழை புயல் காரணமாக இந்நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டது. இம்மக்களுக்கு பாலோவில் வத்திக்கானின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள திருத்தந்தை பிரான்சிசு மையத்தைத் திருத்தந்தை ஆசீர்வதிக்கவேண்டியிருந்தது. அந்நிகழ்வும் இரத்துச் செய்யப்பட்டது. மாலை 3.30 மணிக்கு பாலோ பேராலயத்தில் ஆயர்கள், குருக்கள், துறவிகள், குருத்துவ மாணவர்கள் மற்றும் ஹையான் புயலில் பாதிப்படைந்த குடும்பத்தினரைத் திருத்தந்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்நிகழ்வை இத்திருப்பலிக்குப் பின் சுருக்கமாக நடத்தினார் திருத்தந்தை. பாலோ பேராலயத்தில் அனைவரையும் ஆசீர்வதித்து, பாதுகாப்பாக மனிலா வந்து சேர்ந்தார் திருத்தந்தை பிரான்சிசு.
 
===பிரான்சிசு ஆற்றிய மறையுரை===
"எனது இதயத்துக்கு மிகவும் நெருக்கமான ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உரோமையில் இந்த ஹையான் புயலின் கடும் சேதங்களைப் பார்த்தபோது நான் இங்கு இருப்பதற்கு விரும்பினேன். அந்த நாள்களிலே இங்கு நான் வர விரும்பினேன். சிறிது தாமதமாக வந்தாலும் நான் இப்போது உங்களோடு இருக்கிறேன். இயேசுவே ஆண்டவர் என்பதைச் சொல்வதற்காக இங்கு வந்துள்ளேன். அவர் ஒருபோதும் நம்மைச் சோர்வுறவிடமாட்டார், நம்மை விழத்தாட்டமாட்டார். ஆனால் தந்தையே, எனது வீடு, வாழ்வாதாரங்கள் என பல பொருள்களை நான் இழந்துவிட்டேன், அதனால் மனம் சோர்ந்துள்ளேன் என்று நீங்கள் சொல்லலாம். இப்படி நீங்கள் சொன்னால் அது உண்மையே, உங்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஆயினும் சிலுவையில் அறையுண்ட இயேசு இங்கிருக்கிறார். இதிலிருந்து அவர் நம்மை சோர்வுறவிடமாட்டார். நாம் அனுபவிக்கும் அனைத்துத் துன்பங்களையும் அவர் அனுபவித்துள்ளார். இயேசுவே ஆண்டவர். நம் வாழ்வின் இன்னல் நிறைந்த நேரங்களில் நம்மோடு கண்ணீர் சிந்தி நம்மோடு நடக்கும் ஆண்டவரை நாம் கொண்டிருக்கிறோம்."
 
"உங்களில் பலர் எல்லாவற்றையும் இழந்துள்ளீர்கள். என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. ஆயினும் உங்களுக்கு என்ன சொல்ல வேண்டுமென்பதை இயேசு அறிந்திருக்கிறார். உங்களில் பலர் உங்கள் குடும்பங்களில் ஒரு பகுதியினரை இழந்துள்ளீர்கள். அமைதியாக இருந்து எனது அமைதியான இதயத்துடன் உங்களோடு இருப்பதை மட்டுமே என்னால் செய்ய முடியும். ஆண்டவரே, இத்துன்பம் ஏன் என உங்களில் பலர் கேட்கலாம். உங்கள் ஒவ்வொருவரின் இதயத்திடமும், கிறிஸ்து சிலுவையிலிருந்து தம் இதயத்தோடு பதில் சொல்கிறார். இதற்குமேல் சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. கிறிஸ்துவை நோக்குவோம். அவர் ஆண்டவர்."
 
"அவரது சிலுவையருகில் அவரின் தாய் நிற்கிறார். நாம் அதிகத் துன்பங்களை அனுபவிக்கும் நேரங்களில் சிறு குழந்தைகள்போல் நாம் இருக்கிறோம். அச்சமயங்களில் நாம் எதையும் புரிந்துகொள்வதில்லை. “மம்மி” என்று தாயின் கரங்களை மட்டுமே நாம் பிடித்துக்கொண்டிருக்க முடியும். குழந்தை பயப்படும்போது மம்மி என்று சொல்கிறது. நம் துன்ப நேரங்களில் “மம்மி” என்ற வார்த்தையை மட்டுமே நம்மால் சொல்ல முடியும். சிலுவையடியில் மௌனமாக நின்ற தாயை உற்று நோக்குவோம். சிறு குழந்தை போல, அத்தாயிடம், அம்மா எனச் சொல்வோம். நமக்கு ஒரு தாய் இருக்கிறார். மாபெரும் சகோதரர் இயேசு இருக்கிறார். நாம் தனியாக இல்லை. பேரிடர் துன்ப நேரங்களில் பல சகோதரர்கள் உதவி செய்வதற்கு வந்தார்கள். ஏனெனில் நாம் ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகளாக உணருகிறோம்."
 
"இதுவே எனது இதயத்தில் தோன்றியவை. வேறு எதுவும் சொல்லாமல் விட்டிருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். இயேசு ஒருபோதும் நம்மைச் சோர்வுறவிடமாட்டார் என்பதை தயவுகூர்ந்து அறிந்திருங்கள். அன்னைமரியாவின் கனிவு உங்களைச் சோர்வுறவிடாது என்பதையும் அறிந்திருங்கள். அன்னைமரியாவையும், இயேசுவையும் பற்றிக்கொண்டு சகோதர சகோதரிகளாக ஆண்டவரில் ஒன்றிணைந்து நடப்போம்."
 
==வெளி இணைப்புகள்==