சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"யாழ்ப்பாண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1:
[[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]] மாவட்டத்தில் அமைந்துள்ள [[சுன்னாகம்]] பகுதியில் [[நிலத்தடி நீர்ப்படுகை|நிலத்தடி நீரில்]] கழிவு எண்ணெய் கலந்தமையால் இச்சூழற்கேடு ஏற்பட்டது. [[2005]]ம் ஆண்டளவில் சுன்னாகம் பகுதியில் கிணறுகளில் நீரின் மேல் எண்ணெய்ப் படலம் காணப்பட்டதையடுத்து இக்கேடு உணரப்பட்டது. தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் கிணற்று நீரில் எண்ணெய்க் கலப்புக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம், பாடசாலைகள், குடியிருப்புக்கள் போன்றவற்றில் உள்ள கிணறுகளிற் பல தற்போது பாவனைக்கு உதவாதனவாக அடையாளம் காணப்பட்டு நீரெடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
==மாசடைவுக்கான காரணம்==
 
சுன்னாகம் பகுதியில் இயங்கி வந்த [[டீசல்]] [[மின்வலு நிலையம்]] ஒன்றின் கழிவு எண்ணெய் பாதுகாப்பற்ற விதத்தில் நிலத்தில் விடப்பட்டதன் விளைவாகவே இக்கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்களும் நிபுணர்களும் கருதுகிறார்கள். இலங்கையில் உள்நாட்டுப் போர் நிலவிய காலத்தில் தரைவழியாக மின்சாரம் வழங்கப்பட முடியாத நிலையில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான மின்வழங்கலுக்காக இந்த டீசல் மின் வலு நிலையம் உருவாக்கப்பட்டது. இந்நிலையம் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னரும் தொடர்ச்சியாக இயங்கி வந்தது. தற்போது '''நோர்தன்பவர் (Northern Power Company (Private) Limited)''' எனும் நிறுவனத்தினால் இயக்கப்பட்டுவந்த இந்நிலையம் மின்வலுத்துறை அமைச்சரின் ஆணைக்கமைய மூடப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சுன்னாகம்_நிலத்தடி_நீர்_மாசடைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது