தகியுத்தீன் முஹம்மது இப்னு அஹ்மது அல் யூனினி (ரஹ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
speed-delete-on|ஏப்ரல் 7, 2015
No edit summary
வரிசை 1:
{{speed-delete-on|மார்ச் 7, 2015}}
சிரியாவிலுள்ள பால்பக் மாவட்டத்திலே யூனின் என்னும் கிராமத்தில் கி.பி. 1177ம் ஆண்டு ஜனவரி 7ம் திகதி (ஹிஜ்ரி 572) முஹம்மது என்னும் இயற்பெயரையும், தகியுத்தீன் என்னும் சிறப்புப் பெயரையும் கொண்ட தகியுத்தீன் முஹம்மது இப்னு அஹ்மது அல் யூனினி (ரஹ்) அவர்கள் பிறந்தார்கள்.
 
இளவயதிலேயே மார்க்கக்கல்வியைக் கற்று முடித்த தகியுத்தீன் அவர்கள் ஹதீதுக் கலையை கற்க விரும்பி பெரியார் ஹாபிஸ் அப்துல் கனி அவர்களிடம் மாணவராகச் சேர்ந்தார்கள். ஹதீதுக் கலையில் மிகச் சிறந்து விளங்கிய பெரியார் ஹாபிஸ் அப்துல் கனி அவர்கள் தமது மாணாக்கர் மீது கொண்டிருந்த மதிப்பு அளப்பரியதாக இருந்தது. தகியுத்தீன் அவர்களுக்கிருந்த அபார நினைவாற்றல் காரணமாக ஸஹீஹ் புஹாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய இரண்டு ஹதீஸ் நூல்களையும் மனனம் செய்திருந்தார்கள்.
 
தமது உறவினராகிய அப்துல்லாஹ் அல் யூனினி (ரஹ்) அவர்களிடம் ஆன்மீகக் கல்வியையும், ஆன்மீகப் பயிற்சியையும் பெற்றார்கள். ஆசானின் மறைவுக்குப் பின்னர் ஆசானின் இடத்திலிருந்தவாறே மக்களுக்கு ஸூபித்துவம் பற்றியும் இறைவனை அடையும் வழிமுறை பற்றியும் உரை நிகழ்த்த ஆரம்பித்தார்கள். அவர்களது சொற்பொழிவைக் கேட்பதற்காக மக்கள் திரண்டு வரத் தொடங்கினார்கள்.