மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
''மஹாத்மா காந்தி பல்கலைக்கழகம்'' (Mahatma Gandhi University) இந்தியா நாட்டில் கேராளா மாநிலத்தில் உள்ள கோட்டையம் என்ற
ஊரைத்தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது. 1983 அக்டோபர் 3 (புரட்டாசி 16)-ல் நிறுவப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழில் கேரளத்தில் ஐந்து மாவட்டங்களிலாக 123 கலை அறிவியல் கல்லூரிகளும், 3 மருத்துவ கல்லூரிகளும், 22 பொறியியல் கல்லூரிகளும், 3 ஆயுர்வேத கல்லூரிகளும், 2 ஹோமியோபதி கல்லூரிகளும் உள்ளன. பல்கலைக்கழகத்திற்கு சொந்தமாக ஒரு பொறியியல் கல்லூரியும், பாராமெடிக்கல் பாடபிரிவுகளுக்கான கல்லூரிகளும், ஆசிரியர் பயிற்சி கல்வி கல்லூரிகளும் உள்ளது. பல்கலைக்கழக துறைச்சார் 11 கல்விக்கூடங்கள் வாயிலாக பலதர ஆய்வுகள் நடத்தப்பட்டு இதற்க்குள்ளாக ஆயிரத்திற்கு மேலான முனைவர் பட்டங்கள் நல்கியுள்ளது. கல்வி மையங்கள் வழியாக மேல்நிலைப் பள்ளி கல்வி தேர்ந்தவர்களுக்கான பல அறிவியல் பிரிவுகளை ஒன்றினைத்து எம்.எஸ். பாடத்திட்டங்களை பயில்விக்கிறது. ஆங்கில மொழி பரிமாற்றம், சுற்றுச்சூழல் ஆய்வு, நானோ சயன்ஸ், பயோமெடிக்கல் ஆய்வு மற்றும் சமுக அறிவியல் பிரிவுகளில் வெளி பல்கலைக்கழக மையங்களும் செயல்படுகிறது. முதுகலை மற்றும் இளங்கலை பட்டப்படிப்புக்கான நுழைவு ஒற்றைச் சாளர முறையில் நடத்தப்படுவது இப் பல்கலைக்கழகத்தின் சிறப்பாகும்.
 
[[பகுப்பு:கேரளப் பல்கலைக்கழகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மகாத்மா_காந்தி_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது