யூகின் ஓடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"==யூகின் பி ஓடம்== பேராசிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
==யூகின் பி ஓடம்==
 
பேராசிரியர் யூகின் பி ஓடம் (Eugene P. Odum) (1913-2002) சூழல் அமைப்புச் சூழலியலின் தந்தை (Father of Ecosystem Ecology) எனப் போற்றப்படுபவர். அவரது ”சூழலியலின் அடிப்படைகள்” என்ற நூல், இப்பயில்களத்துக்குப் புதிய சட்டகத்தை உருவாக்கியதால், சூழலியற் பயில்வைப் புரட்சிகரமாக மாற்றியது. சூழலியலை [[இயற்பியல்]], [[வேதியியல்]], [[புவியியல்]], [[உயிரியல்]] [[அறிவியற்]] புலங்களின் ஒருங்கிணைந்த பயில்களமாக்கியதோடு, நாம் வாழும் புவி தன்னியக்கம் வாய்ந்த, பல்வேறு கட்டமைப்புகளும் செயற்பான்மைகளும் உள்ள [[சூழல் அமைப்பு]]களின் இடையிணைப்புகளுடன் விளங்குவதைச் சுட்டி காட்டினார்.சூழல் அமைப்புகள் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி, உயிரிலிப் பொருள் ஊட்டச் சத்துகளைச் சுழற்சிப்படுத்தி, உயிரினத்துக்கும் மாந்த இனத்துக்கும் பெருந்தொண்டாற்றுகின்றன. சூழலியலுக்கு ஆற்றிய பெரும்பணிகளுக்காக அமெரிக்க அறிவியற் கல்விக்கழகத்தின் ஆய்வுத்தகைஞராக அவர் தேர்வு செய்யப்பட்டார். மேலும் [[நோபிள் பரிசு]]க்கீடான சுவீடன் நாட்டு அரசுக் கல்விக்கழகத்தின் [[கிராஃபோர்டு பரிசு]]ம் அவருக்கும் அவரது உடன்பிறப்பாளருக்கும் (H.T.Odum) வழங்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/யூகின்_ஓடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது