"பயனர்:Chenkodan Sabalingam/மணல்தொட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,037 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
மிகச்சிறந்த பேட்மேன் வரைகலை நாவல்களில் முதலாவதாக இது ஐசீஎன்-இனால் தரப்படுத்தப்பட்டதுடன், "ஒவ்வொரு காட்சியையும் மறக்கமுடியாமல் கொண்டிருப்பதன் மூலமாக உண்மையில் தலைசிறந்ததோர் படைப்பாக அமைந்துள்ளது" என்று கூறியது. இக்கதையின் தொகுக்கப்பட்ட நூலானது, எக்காலத்திலும் தலைசிறந்த பத்து வரைகலை நாவல்களில் ஒன்றாக, 2005இல் இரைம் நாழிதளால் தெரிவுசெய்யப்பட்டது. அத்துடன், போர்பிடுன் பிளனெற்று எனும் வரைகதைப் புத்தக நிலையத்தினால் "சிறந்ததிலும் சிறந்த 50 வரைகதை நாவல்கள்" பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. எழுத்தாளர் பிறயன் கே. மனிங்கு தனது புத்தகமான "இடீசீ காமிக்சு இயர் பை இயர் எ விசுவல் குரோனிக்கில்" (இடீசி வரைகதைகளின் காலக்கிரமப் படத் தொகுப்பு) எனும் புத்தகத்தின் 1980கள் அத்தியாயத்தில் "எல்லாக்காலத்திலும் சிறந்த பேட்மேன் கதையமைப்பு" என்று எழுதியிருந்தார். சீக்காட்டு அமைப்பினால் வரைகதை அறிஞர்களிடையே நடாத்தப்பட்ட ஒரு வாக்கெடுப்பில் இந்நூல் இரண்டாம் இடத்தைப்பெற்றது.
 
இருப்பினும் சில எதிர்மறையான விமர்சனங்களையும் இந்நூல் தேடிக்கொண்டது. ஏப்பிரல் 2010இல் காமிக்சு புல்லெற்றின் நிறுவனத்தினைச் சேர்ந்த நிக்கோலசு சிலேற்றன் தனது கட்டுரையொன்றில் வோச்மேனுக்கு அடுத்தபடியாக உலகின் மிகையாகப் புகழப்படும் (ஆயினும் மோசமான) வரைகதைகளில் ஒன்றாகத் தரப்படுத்தியுள்ளார். இதுகுறித்து "இதில் மையக்கதை என்று ஒன்று கிடையாது. ஆதலால் சூப்பர்மேனுக்கும் பேட்மேனுக்கும் (கட்டாயப்படுத்தப்பட்ட) மோதல் நிகழ்வதாச் சித்தரிக்கப்பட்டிருப்பது இக்கதையின் முடிவைப் பொருத்தமில்லாமல் ஆக்குகிறது. பேட்மேனின் பண்புகள் சிதைக்கப்பட்டுள்ளதுடன், அக்கதாபாத்திரம் பிழையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது." என்று அவர் கூறினார். த நியூயோக் இரைம்சு நாழிதள் 1987இல் வெளியான இக்கதையின் தொகுப்புக்கு எதிர்மறையான விமர்சனத்தை வழங்கியது. பேட்மேன் கதாபாத்திரத்தை உருவாகிய பொப் கேனின் கதைகள் அளவுக்குக் கற்பனைத் திறனுடன் இது அமைக்கப்படவில்லை என்று மொடெகாய் இரிச்லர் தெரிவித்தார். மேலும் " இக்கதைத் தொடரானது, வாசிப்பதற்க்குச் சிக்கலான அமைப்பையும் அளவுக்கதிகமான சொற்களையும் கொண்டுள்ளது. அகோரமான உடற்கட்டுடையவர்களாக சூப்பர்மேனும் பேட்மேனும் வரையப்பட்டுள்ளனர். இது ஒரு சிறுவர் கதையெனில் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகைள் இது இரக்கமா என நான் சந்தேகிக்கிறேன். இன்றேல் இது பெரியோருக்கானதெனின் அவர்களுடன் சேர்ந்து (மது) அருந்தக்கூட நான் தயங்குவேன்" என்று குறிப்பிட்டார்.
இருப்பினும் சில எதிர்மறையான விமர்சனங்களையும் இந்நூல் தேடிக்கொண்டது. ஏப்பிரல் 2010இல் காமிக்சு புல்லெற்றின் நிறுவனத்தினைச் சேர்ந்த
135

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1864291" இருந்து மீள்விக்கப்பட்டது