பயனர்:Chenkodan Sabalingam/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 63:
 
* "த பேட்மேன்" தொடரின் அத்தியாயமான "ஆட்டிபக்ற்சு"வில் (தொல்பொருட்கள்) எதிர்காலத்தில் நடப்பது போலச் சித்தரிக்கப்பட்டிருக்கும் மற்றொரு நிகழ்வில் மில்லரின் கதாம்சங்களைக் காணமுடிகிறது. இதில் பேட்மேன் உயரமானவரும், உடற்கட்டுடையவருமாகக் காட்டப்படவதும் அவரின் எதிரியான மிசுரர் பிரீசை எதிர்கொள்கையில் பேட்மேனை நோக்கி அவர் "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" என்று கூறுவதும் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
 
==திரைப்படம்==
 
* முதன் முதலில் இயக்கப்பட்ட பேட்மேன் திரைப்படம் பற்றி அதன் இயக்குனர் இரிம் பேடன் "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" மற்றும் "த கில்லிங்கு சோக்கு" (கொலைசெய்யும் கேலி) ஆகிய வரைகதைகள் அப்படத்தின் இயக்கத்தின் செல்வாக்குச் செலுத்தின என்று கூறினார். கோர்ட்டோ மொல்ற்றீசில் நிருபர் விக்கி வேல் புகைப்படங்கள் எடுப்பது போன்ற காட்சிகள் இக்கதையிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். இத்திரைப்படத்தின் மூன்றாம் பாகமான, சோயல் சுமேசரால் இயக்கப்பட்ட "பேட்மேன் போறெவர்" (எப்பொழுதும் பேட்மேன்) திரைப்படத்தில் பேட்மேன் உறோபினுக்கு, எதிரிகளைக் கொள்வதால் அமைதி கிடைக்காது என்று உணர்த்துவதும் இகாதையிளிருன்ந்து வந்த யோசனையாகும்.
 
* 2008 சேன் இடியாகோ சித்திரக்கதை மாநாட்டில், சாக்கு சினைடரால் வரைகதைகளை மூலமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பற்றிய கேள்வியொன்றுக்கு "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" மீதான தனது பற்றே இப்படங்களின் முதிர்ந்த தன்மைக்குக் காரணம் என்று கூறியிருந்தார். பேட்மேன் படங்களின் தயாரிப்பாளரான மைக்கல் இயூசிலன் "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" தொடர்ப்பான ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க விருப்புத் தெரிவித்திருந்தார்.
 
* "த இடாக்கு நைற்று இறைசசு" (இருண்ட மறவன் உதிக்கிறான்) திரைப்படத்தில் இக்கதையின் அம்சங்கள், குறிப்பாக ஓய்வுபெற்ற பேட்மேன் நீண்டகாலத்தின் பின்பு மீண்டும் கோதம் நகருக்குத் திரும்புவது போன்ற நிகழ்வுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மற்றொரு காட்சியில் பேட்மேன் ஒரு குற்றவாளிய்த் துரத்திச் செல்வதைக் காணும் ஒரு காவற்றுறை அதிகாரி மற்றொருவரிடம் "இன்றிரவு நீ ஒரு அற்புதத்தைப் பார்க்கப் போகிறாய் மகனே" என்று கூறுவது இக்கதையிலிருந்து எடுக்கப்பட்ட மற்றொரு நிகழ்வாகும். அத்துடன் இக்கதையில் பேட்மேன் தனது முறிந்த கைக்கு இயந்திர அமைப்பின் உதவிய நாடுவது போல போல இதில் பேட்மேன் தனது சேதமடைந்த காலுக்கு உதவியாகப் பொறிகளாலான அமைப்பைப் பயன்படுத்துகிறார். மேலும் பேட்மேன் இதிலும் தான் இறந்து விடுவதாகப் பிறரை நம்பவைத்துத் தனது பதவியை வேறொருவருக்கு வழங்குகிறார்.
 
* "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு" எனும் இரண்டு பாகங்களைக் கொண்ட இடீசீ மகிழ்கலையகம் தயாரித்தது. இதன் முதற்பாகம் இறுவட்டு மற்றும் புளூறேயில், செப்டம்பர் 25, 2013இல் வெளியிடப்பட்டது. இரண்டாம் பாகமானது சனவரி 29, 2013இல் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் பீற்றர் வெலர் , மைக்கல் எமேசன் முறையே பேட்மேன், சோக்கர் கதாபாத்திரங்களுக்குக் குரல்கொடுக்கின்றனர்.
 
* 2013இல் வெளிவந்த "மேன் ஒப் சுடீல்"இன் தொடர்ச்சியான "பேட்மேன் வீ சூப்பர்மேன்: இடான் ஒப் சசுரிசு" பேட்மேன் மற்றும் சூப்பர்மேன் வெள்ளித்திரையில் சந்திக்கவுள்ள முதற்றிரைப்படமாகும். இது "த இடாக்கு நைற்று இறிற்றேண்சு"வை உதாரணமாகக் கொண்டு வெளிவரும் அனால் முற்றிலும் அசலான திரைப்படம் என்று அதன் இயக்குனர் சாக்கு சினைடர் தெரிவித்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Chenkodan_Sabalingam/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது