நல்லூர் (யாழ்ப்பாணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தமிழ்க்குரிசில்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி better image
வரிசை 25:
{{coor title dms|9|40|27|N|80|1|35|E|region:LK_type:landmark}}
 
யாழ்ப்பாணத்து '''நல்லூர்''' தற்போது [[யாழ்ப்பாண மாநகரசபை|யாழ்ப்பாண மாநகரசபை]] எல்லைக்குள் [[நல்லூர் பிரதேசச் செயலாளர் பிரிவு|நல்லூர் பிரதேசச் செயலாளர் பிரிவில்]] அடங்குகிறது. [[யாழ்ப்பாண நகரம்|யாழ்நகர]] நடுப்பகுதியிலிருந்து, கிட்டத்தட்ட மூன்றரைக் [[கிலோமீட்டர்]] தூரத்தில் இது அமைந்துள்ளது.
 
== வரலாறு ==
[[யாழ்ப்பாண அரசு|யாழ்ப்பாண அரசை]]ப் [[போர்த்துக்கீசர்]] தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவரமுன்னர், இது அவ்வரசின் தலைநகரமாக இருந்து வந்தது. [[ஆரியச் சக்கரவர்த்திகள்]] என அழைக்கப்படும் வம்சத்தினர் இங்கிருந்து ஆண்டுவந்தனர். இவர்கள் சிங்கையாரியர்கள் அல்லது சிங்கைநகராரியர் எனக் குறிப்பிடப்படுவதை அடிப்படையாக வைத்து, ஆரம்பகால ஆரியச் சக்கரவர்த்திகள் சிங்கைநகர் என்னும் இன்னோரிடத்தைத் தலைநகராகக் கொண்டிருந்தனரென்றும், [[15ம் நூற்றாண்டு|15 ஆம் நூற்றாண்டில்]], தென்னிலங்கையைச் சேர்ந்த [[கோட்டே]] அரசனின் சார்பில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சப்புமால் குமாரயா எனப்பட்ட சண்பகப்பெருமாள் என்பவனே நல்லூரைக் கட்டுவித்தானென்றும் சிலர் கூறுவர். எனினும், [[13ம் நூற்றாண்டு|13 ஆம் நூற்றாண்டளவில்]] முதலாவது [[ஆரியச் சக்கரவர்த்திகள்|ஆரியச் சக்கரவர்த்தி]]யான [[கூழங்கைச் சக்கரவர்த்தி]]யே இந்நகரைக் கட்டுவித்தவன் என்பதும், சிங்கைநகர், நல்லூரின் இன்னொரு பெயர் என்பதுவும், பெரும்பான்மை ஆய்வாளர்களுடைய கருத்து.
 
[[1620]] இல், போர்த்துக்கீசப் படைகள், [[பிலிப்பே டி ஒலிவேரா|ஒலிவேரா]] என்பவன் தலைமையில் நல்லூரைக் கைப்பற்றின. அவன் சிறிதுகாலம் நல்லூரிலிருந்து நிர்வாகத்தை நடத்திவந்தானாயினும், இக்காலப்பகுதியில் நடைபெற்ற பல தாக்குதல்களைக் கருத்திற்கொண்டு, பாதுகாப்பின் நிமித்தம், நிர்வாகம், நல்லூரையண்டிக் கடற்கரையோரமாக இருந்த [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]]த்துக்கு மாற்றப்பட்டது.
 
[[படிமம்:Sangkilithoppu.jpg|thumb|180px|சங்கிலி மன்னனின் மாளிகை அமைந்திருந்த சங்கிலித்தோப்பிலுள்ள வளைவின் ஒரு தோற்றம்]]
போர்த்துக்கீசருக்கு முந்திய நல்லூரின் அமைப்புப் பற்றியும், அங்கிருந்த கட்டிடங்கள் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்ளக்கூடிய அளவுக்குப் போதிய தகவல்கள் இல்லை.
அக்காலத்துக் கட்டிடங்கள் அல்லது அவற்றின் பகுதிகள் இன்றுவரை நிலைக்கவில்லை என்றே கொள்ளலாம். அரசனின் அரண்மனையையும், வேறு சில முக்கியஸ்தர்களின் வாசஸ்தலங்களையும்விடக் [[கோயில்]]கள் மட்டுமே நிலைத்திருக்கக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டிருக்கக்கூடும். நகரின் நான்குதிசைகளிலும், [[நல்லூர்க் கந்தசுவாமி கோயில்|கந்தசுவாமி கோயில்]], [[நல்லூர் வீரமாகாளியம்மன் கோயில்|வீரமாகாளியம்மன் கோயில்]], [[நல்லூர் கைலாசநாதர் கோயில்|கைலாசநாதர் கோயில்]], [[ நாயன்மார்கட்டு ஸ்ரீவெயிலுகந்த விநாயகர் ஆலயம்|வெயிலுகந்த பிள்ளையார் கோவில்]], [[நல்லூர் சட்டநாதர் கோயில்|சட்டநாதர் கோயில்]] ஆகிய கோயில்கள் இருந்ததும், [[யமுனை]] நதியிலிருந்து கொண்டுவந்த நீர் விடப்பட்ட [[யமுனா ஏரி]] எனப்பட்ட கேணியொன்றிருந்ததும் அக்காலத்திலும், அதன்பின்னரும் எழுதப்பட்ட சில நூல்கள்மூலம் தெரியவருகின்றது.
 
நல்லூர் யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்ததற்கு ஆதாரமாக இன்று இருப்பவை, அக்காலத்திய அரண்மனையிருந்ததாகக் கருதப்படும், [[சங்கிலித்தோப்பு]] எனப்படும் நிலமும், அதிலுள்ள ஒரு நுழைவாயில் வளைவும், அதற்கு அண்மையிலுள்ள [[மந்திரிமனை (நல்லூர்)|மந்திரிமனை]] எனப்படும் ஒரு வீடுமாகும். இவற்றைவிட, பண்டாரக்குளம், பண்டாரவளவு, இராஜ வீதி, கோட்டை வாயில் முதலிய அரசத்தொடர்புகளைக் குறிக்கும் இடப்பெயர்களும் உண்டு. சங்கிலித்தோப்பு வளைவும், மந்திரிமனையும் ஒல்லாந்தர் காலக் கட்டிடங்களின் பகுதிகளென்பது அவற்றின் கட்டடக்கலைப் பாணியிலிருந்து தெரிகிறது.
 
== படக் காட்சியகம் ==
{{Gallery
|title= நல்லூர்
வரிசை 44:
|height=250
|lines=3
|File:Statue of Kingking SangiliyanCankili II.jpgJPG|சங்கிலியன் சிலை
|File:Nallur KandaswamyKandasamy templefront entrance.jpg|நல்லூர் கந்தசாமி கோவில் கோபுரம்
|File:The Kailasa Parampara Of the Nandinatha Sampradaya.jpg|முற்கால முனிவர்களின் படம்
}}
 
== நல்லூரிலுள்ள கோயில்கள் ==
* [[நல்லூர் கந்தசுவாமி கோவில்]]
* [[நல்லூர் கைலாசநாதர் கோயில்]]
வரி 56 ⟶ 55:
* [[கல்வியங்காடு முக்குறுணிப் பிள்ளையார் கோயில்|முக்குறுணிப் பிள்ளையார் கோயில்]]
 
== இங்கு பிறந்து புகழ் பூத்தவர்கள் ==
* [[அரசகேசரி]]
* [[நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்]]
வரி 66 ⟶ 65:
 
== வெளி இணைப்புகள் ==
 
 
[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/நல்லூர்_(யாழ்ப்பாணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது