இலங்கைத் தமிழர் இனப்படுகொலைகள், 1977: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
}}
'''1977 தமிழர் இனப்படுகொலைகள்''' அல்லது '''1977 தமிழருக்கு எதிரான கலவரம்''' (''1977 anti-Tamil pogrom in Sri Lanka'')<ref name="tn1">{{cite web | url=http://tamilnation.co/indictment/indict013.htm | title=ORGANISED POGROM AGAINST TAMILS - 1977 | publisher=TamilNation | accessdate=8 மே 2015}}</ref><ref name="tn2">{{cite web | url=http://tamilnation.co/forum/sachisrikantha/070824edmund_samarakkody.htm#Behind_the_Anti-Tamil_Terror:_The_National_Question_in_Sri_Lanka | title=Behind the Anti-Tamil Terror: The National Question in Sri Lanka | publisher=Workers Vanguard(NY) | accessdate=8 மே 2015}}</ref><ref name="vy">{{cite book | last = | first = | authorlink = Karthikenyan, Radha Vinodh Raju | title = The Rajiv Gandhi Assassination | publisher = Vijitha Yapa Publications | series = | volume = | edition = | location = Colombo| year = 2004 | page = 165 | doi = | isbn = 978-81-909737-0-0 | mr = | zbl = }}</ref> என்பது [[இலங்கை]]யில் 1977 ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட [[இனப்படுகொலை]]கள் ஆகும். [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|1977 நாடாளுமன்றத் தேர்தலில்]] இலங்கைத் தமிழ்த் தேசியவாதக் கட்சியான [[தமிழர் விடுதலைக் கூட்டணி]] தம்ழிப் பகுதிகளில் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து பெரு வெற்றி பெற்றதை அடுத்து, தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக இந்த வன்முறைகள் இடம்பெற்றன. [[அனுராதபுரம்]], [[கொழும்பு]] உட்பட பல பகுதிகளிலும் தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதில் 300 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டதாக அரச விசாரணை தெரிவித்தது. ஆனாலும் இத்தொகை பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுகின்றன.<ref name=Kearney1985>{{cite journal|author = Kearney, R.N.|year = 1985|title = Ethnic Conflict and the Tamil Separatist Movement in Sri Lanka|journal = Asian Survey|volume = 25|issue = 9|pages = 898–917|doi = 10.1525/as.1985.25.9.01p0303g|jstor=2644418}}</ref> ஆயிரக்கணக்கானோர் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அன்றைய ஆட்சியில் இருந்த [[ஜே. ஆர். ஜெயவர்தனா]] தலைமையிலான [[இலங்கை அரசு|இலங்கை அரசின்]] ஆதரவோடு இந்தக் கலவரங்கள் நிகழ்த்தப்பட்டன.
 
== பின்னணி ==
இலங்கை விடுதலை அடைந்த பின்னர், குறிப்பாக 1956 ஆம் ஆண்டில் [[சிங்களம் மட்டும் சட்டம்]] கொண்டு வரப்பட்டதை அடுத்து, [[இலங்கைத் தமிழர்]] பெரும்பான்மையாக வசிக்கும் [[வட மாகாணம், இலங்கை|வட]], [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு]] மாகாணங்களில் தமிழர்கள் அதிக அதிகாரங்கள் கேட்டு போராட்டங்களை நடத்தினர். [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]] சமஷ்டி ஆட்சி முறையைக் கோரியது. சிங்கள, தமிழ்த் தலைவர்களுக்கிடையே சில உடன்பாடுகள் எட்டப்பட்டிருந்தாலும், அவை எப்போதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் பொறுமையிழந்த தமிழ்த் தலைவர்கள் தனிநாடு கேட்க ஆரம்பித்தார்கள். 1974 ஆம் ஆண்டில் முக்கியமான தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து [[தமிழர் விடுதலைக் கூட்டணி|தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி]] என்ற கூட்டமைப்பை உருவாக்கினர். 1976 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தின் [[வட்டுக்கோட்டை]] நகரில் கூடிய தமிழ்த் தலைவர்கள் "[[தமிழ் ஈழம்]]" தனிநாட்டுக் கோரிக்கையை ஒருமனதாகக் கோரினர்.
 
1977 சூலை 21 இல் நடைபெற்ற [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|நாடாளுமன்றத் தேர்தலில்]] வடக்கு மாகாணத்தில் அனைத்துத் தேர்தல் தொகுதிகளிலும் [[தமிழர் விடுதலைக் கூட்டணி]] உறுப்பினர்கள் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்தது.<ref>[http://www.lankanewspapers.com/news/election/general_election1977.jsp 1977 General Election Results]</ref>
 
இதேவேளையில், [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணப்]] பகுதியில் இலங்கைக் காவல்துறையினருக்கு எதிராக ஆங்காங்கே சில தாக்குதல்கள் சில ஆயுதக் குழுக்களினால் நடத்தப்பட்டு வந்தன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழர்_இனப்படுகொலைகள்,_1977" இலிருந்து மீள்விக்கப்பட்டது