பேச்சு:உளிதவரு கண்டந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 160:
வணக்கம், தங்களின் கேள்வியே குழப்பமானதாக இருக்கின்றது, இருந்தாலும் எனக்குத் தெரிந்தவைகளைக் கூறுகின்றேன். இதை ஏற்பதும் ஏற்காததும் தங்கள் விருப்பம். மேற்கூறியவற்றில் சில உரைதிருத்தங்களைச் செய்திருக்கின்றேன். சரி, தங்களின் கேள்விக்குப் போவோம். செந்தமிழ் சேர் நிலம் 12 எனத் தொல்காப்பியர் கூறியதும், 17 நிலங்கள் எனப் பவணந்தியார் கூறியதும் வெவ்வேறானவை. இதை முதலில் சேர்த்து நோக்குவதைத் தவிர்க்கவும். செந்தமிழ் சேர் 12 நிலங்கள் என்பவை, செந்தமிழ் மொழி பேசப்படும் நாட்டினைச் சேர்ந்த 12 நிலங்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும். இந்த 12 நிலங்களில் சோனகம், சாவகம் எல்லாம் வராது. இந்த 12 நிலங்கள் தமிழகத்தின் 12 வட்டாரங்களைக் குறிப்பன. '''“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தம்குறிப் பினவே திசைச்சொற் கிளவி”''' எனத் தொல்காப்பியர் கூறியதிலிருந்து தொல்காப்பியர் காலமான கிமு 3 ஆம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் 12 வட்டாரங்கள் இருந்ததை நம்மால் அறிய முடிகின்றது. இந்த 12 வட்டாரங்கள் எவை என்பதை நச்சினார்க்கினயர் உரை, சேனாவரையர் உரை மூலமாக நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது. அது மட்டுமின்றி இவர்கள் 12 வட்டாரங்களில் காணப்படும் சொற்களையும் எடுத்துக் காட்டியும் உள்ளனர். இந்த 12 நிலங்கள் என்று தானே சொல்லியிருக்கின்றார்? 12 மொழிகள் என எப்படி எடுத்துக் கொள்வது என்ற கேள்வியே சற்றே சிறுபிள்ளைத் தனமானது, பள்ளி மாணவர்களுக்கே இதற்கான விடை தெரியும். இருந்தாலும், சொல்கின்றேன் கேளுங்கள். இந்த உரைகளில் 12 நிலங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு நிலத்தின் வட்டார மொழிக்கு ஒரு சொல்லை எடுத்துக் காட்டாகக் காட்டி எழுதியுள்ளனர். இதன் மூலம் '''ஒரு வட்டாரத்துக்கு ஒரு வட்டார மொழி என்பதை அவர்கள் தெளிவுபடுத்துகின்றனர்'''. ஒன்றிற்கும் மேற்பட்ட கிளைமொழி ஒரு வட்டாரத்தில் இருந்திருந்தால் நிச்சயம் அவர்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட சொற்களை எடுத்துக் கூறி, அந்த வட்டார மொழியினைப் பற்றியும் விவரித்திருப்பார்கள். நமக்குக் கிடைத்திருக்கின்ற தொல்பொருள் மற்றும் இலக்கியச் சான்றுகளின் படி, தொல்காப்பியம் எழுதப்பட்டது கிமு 3-ஆம் நூற்றாண்டு. அக் காலக் கட்டத்தில் கிடைக்கின்ற அசோகர் கல்வெட்டுக்களை வைத்து நோக்கும் போது தமிழகத்தில் ஐந்து அரசாட்சிகளே இருந்திருக்கின்றனர் ( சேர, சோழ, பாண்டிய, அதியமான், தாமிரபரணி ). ஆனால், அதே காலக் கட்டத்தில் எழுந்த தொல்காப்பியமோ, 12 நிலங்களாகத் தமிழகத்தைப் பிரித்திருக்கின்றது. இந்த 12 நிலங்கள் என்பவை புவியியல் மற்றும் அரசியல் பகுப்புக்கள் கிடையாது. ஏனெனில் புவியியல் பகுப்பாகத் தொல்காப்பியம் ஐந்து திணைகளைக் கூறுகின்றது. அரசியல் பகுப்பாக அசோகர் கல்வெட்டு ஐந்து தமிழ் அரசாட்சியைக் கூறுகின்றது. தொல்காப்பியம் தரும் இந்த 12 நிலங்கள் என்பவை 12 வட்டார மொழிகளைப் பேசி வந்த 12 வட்டாரங்களையே குறிக்கின்றது. அது மட்டுமின்றி வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் எனத் தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் பாடிய பரம்பரனார் கூறியதிலிருந்து தமிழகத்தின் எல்லையானது வடக்கே வேங்கட மலைத் தொடரும், தெற்கே குமரி முனையும், இரண்டு பக்கமும் கடல் என்பதை நாமறியலாம். அத்தோடு இந்த 12 நிலங்களின் பெயர்களை உரையாசிரியர்கள் வழங்கியும் உள்ளனர். இந்த நாடுகள் எவை எவை என்பதைத் '''தொ.பெ. மீனாட்சி சுந்தரம் அவர்கள் தெளிவாகவே தமது ஆராய்ச்சி நூலில் எடுத்துக் காட்டியுள்ளார்'''. 12 நிலங்களில் பேசப்பட்டு வந்தது 12 கிளைமொழிகள் தான் என்பதை வீரசோழியத்தின் உரையாசிரியர் பெருந்தேவனாரும் மற்றும் நன்னூலின் உரையாசிரியர் மயிலைநாதரும் தெளிவுபடுத்துகின்றனர். --[[பயனர்:அருணன்|அருணன்]] ([[பயனர் பேச்சு:அருணன்|பேச்சு]]) 06:39, 5 செப்டம்பர் 2015 (UTC)
 
'''பதினேழு நிலங்கள் பற்றியோபற்றி'''
 
நன்னூல் கூறும் 17 நிலங்களைப் பற்றிப் பார்ப்போம். நன்னூல் இயற்றப்பட்டது கிபி 12-ம் நூற்றாண்டு ஆகும். நன்னூலை இயற்றியது பவணந்தி முனிவர் கன்னட மரபைச் சேர்ந்த ஒரு சமணத் துறவி. அவரை ஆதரித்தவர் தென் கருநாடகத்தை ஆட்சி செய்து வந்த கங்கையரசன் ஆவார்கள். கங்கையரசர்களும் கன்னடர்களே. நன்னூலுக்கு உரை எழுதியது மயிலைநாதர் ஆவார். இவரது காலம் கிபி 13-ஆம் நூற்றாண்டு ஆகும். இவர் தமிழ் மரபினர் என்ற போதும், இவரை ஆதரித்த மன்னன் சீயகங்கன் என்ற கன்னட கங்கையரசனே ஆவான். சரி, 17 நிலங்களைப் பற்றி நோக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:உளிதவரு_கண்டந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உளிதவரு கண்டந்தை" page.