பேச்சு:உளிதவரு கண்டந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 182:
கடாரத்தை ஆட்சி செய்த மன்னர்கள் நீங்கள் சொல்லும் காலப் பகுதியில் சாவகத்தை ஆளவில்லை. முற்றிலும் சரியே ! கடாரம் தனித்தும், சாவகம் தனித்துமே ஆளப்பட்டது. அது மட்டுமின்றி இந்த இரு நாட்டு மொழிகளும் வெவ்வேறானவை என நன்னூல் காலத்தில் தமிழர்கள் அறிந்திருந்தனர். இந்த இரு நாட்டுக்குள்ளும் பல மொழிகள் இருப்பதும் உண்மையே, ஆனால் இன்றைய காலத்திலேயே தனிமொழிக்கும், கிளைமொழிக்கும், வட்டார வழக்குகளுக்கும் உள்ள வேறுபாடுகளை பிரித்தறிவதில் பல இடர்பாடுகள் உள்ளன. அக் காலக் கட்டத்தில் அந்த நாட்டுக்கு எல்லாம் போய் தமிழர்கள் மொழி ஆராய்ச்சி செய்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கின்றேன். இந்த இரு நாடுகளின் பெருநகரத்து மக்கள் வணிக காரணங்களுக்காக தமிழ்நாட்டுக்கு வந்து சென்ற, தமிழ்நாட்டு வணிகர்கள் அந்த நாடுகளின் பெருநகரங்களுக்கு போய் வந்த தொடர்புகளின் அடிப்படையில் தான் இந்த இரு நாட்டில் பயன்படுத்தப்பட்ட மொழிகளையும் (Official Language) தனிமொழிகளாக கருதியிருக்கின்றனர்.
 
மேற்கூறிய நன்னூல் பாடலுக்கான மயிலைநாதர் தரும் விளக்கத்தினை ஊன்றிப் படிக்கவும், அக் காலக் கட்டத்தில் மக்கள் அதிகம் அறிந்த நாடுகள் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்தியக் கிழக்கு, தெற்காசியா, தென்கிழக்காசியா, கிழக்காசியா மட்டுமே. இதையே உலகம் எனக் கருதி வந்தனர். அப்படியிருக்க '''நன்னூலார் 17 நாடுகளை மட்டும் குறிக்க வேண்டிய தேவை என்ன?''' யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக் கணியன் பூங்குன்றனார் பாடியது போல, உலக மொழிகள் எலாம் என பவணனிதிபவணந்தி முனிவர் பாடியிருக்கலாமே? பவணந்தி முனிவர் தமிழகத்திற்கு வந்து சென்றவந்த மற்றும் இந்தியர்கள் அறிந்த நாட்டு மொழிகளின் சொற்களை நிச்சயம் ஆராய்ச்சி செய்திருக்கின்றார். தமிழ் மொழியின் ஒலிநயத்துக்கு மாற்றவல்ல மொழிகளை மட்டுமே அவர் தேர்ந்தெடுத்திருக்கின்றார்.
 
தாங்கள் சொல்வது போல ஒரு பெருநிலத்தைக் குறிப்பிட்டு அதன் மொழிகள் எல்லாவற்றையும் அதற்குள் அடக்கியும் அவர் கூறியிருக்கலாம். கடாரம் என்றால் தென்கிழக்காசியா எனவும், சாவகம் என்றால் இந்தோனேசியாவின் தீவுகள் அனைத்தும், சீனம் என்றால் கிழக்காசிய நாடுகள் எனவும் நாம் பொருள் கொள்ளவும் வாய்ப்புண்டு.
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:உளிதவரு_கண்டந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உளிதவரு கண்டந்தை" page.