மரகதப்புறா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 15:
}}
 
'''மரகதப் புறா''' (''emerald dove'', ''Chalcophaps indica''), வெப்ப மண்டலத் [[ஆசியா|தெற்காசியாவில்]] [[பாகிஸ்தான்|பாகிஸ்தானிலிருந்து]] [[இலங்கை]] வரையிலும், கிழக்கே [[இந்தோனேஷியா|இந்தோனேசியா]], வடக்கு, கிழக்கு [[ஆஸ்திரேலியா]] வரையிலும் பரவலாகக் காணப்படும் மனைவாழ் [[புறா]]வாகும். இப்புறவுஇப்புறா, பச்சைப் புறா எனவும், பச்சை இறகுப் புறா எனவும் அழைக்கப்பெறுகிறது. இப்புறாவின் பல இனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் மூன்று ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன. அவையாவன, லாங்கிராஸ்டிரிஸ் (''longirostris'' ) [[மேற்கு ஆஸ்திரேலியா]]வின் கிம்பர்லியிலிருந்து [[கேப் யார்க் தீபகற்பம்]] வரையிலும், கிரைசோகுலோரா (''chrysochlora'' ) [[கேப் யார்க் தீபகற்பம்|கேப் யார்க் தீபகற்பத்திலிருந்து]] தெற்கு [[நியூ சவுத் வேல்ஸ்]] வரையிலும் மற்றும் [[நோர்போக் தீவு|நார்ஃபோக் தீவிலிருந்து]] [[லார்டு ஓவ் தீவு|லார்டு ஹோவ் தீவு]] வரையிலும், நடலிசு (கிறிஸ்துமஸ் தீவு மரகதப்புறா) [[கிறிஸ்துமஸ் தீவு|கிறிஸ்துமஸ் தீவிலும்]] காணப்படுகின்றன.
 
இவ்வினம் மழைக்காடுகளிலும் அதை ஒத்த அடர்ந்த ஈரமான [[காடு]]கள், தோட்டங்கள், [[பூங்கா]]க்கள், [[சதுப்பு நிலம்|சதுப்பு நிலக்காடுகள்]], கடலோரக் குற்றுயரத் தாவரக் காடுகளிலும் காணப்படுகின்றன. இப்பறவை ஐந்தடி வரை உயரம் உள்ள [[மரம்|மரங்களில்]] சில சுள்ளிகளை வைத்துக் கூடுக் கட்டி, இரண்டு பழுப்பு வெள்ளை நிற [[முட்டை]]களை இடுகிறது. இனச்சேர்க்கை ஆஸ்திரேலியாவில் வசந்த காலத்திலும், தென் கிழக்கு ஆஸ்திரேலியாவில் இளவேனில் காலத்திலும், வடக்கு ஆஸ்திரேலியாவில் வறட்சிக் காலத்தின் பிற்பகுதியிலும் நடைபெறுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மரகதப்புறா" இலிருந்து மீள்விக்கப்பட்டது