மகாலிங்கேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''மரகதவல்லி''' உடனுறை '''மகா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:43, 1 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

மரகதவல்லி உடனுறை மகாலிங்கேசுவரர் ஆலயம் திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம் தவசிமடை (624 304) கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு பரத்வாசர் எனும் பத்து அடி உயரமுடைய முனிவர் வாழ்ந்து சமாதி அடைந்த இடம் என நம்பப்படுகிறது. அவருடைய சமாதி அங்குள்ளது. அவர் ஆன்மீக'ஒடுக்கம்' அடைந்த இடமாதலால் இவ்விடம் 'ஒடுக்கம்' என்ற பெயரிலேயே அழைக்கப்பெறுகிறது. இராமர் தம் வனவாசத்தின் போது அனுமனோடு தன் உணவைப் பங்கிட வாழை இலையின் நடுவே 'கோடு' போட்டது இத்தலமே என்று கதை மக்களிடம் உலவுகிறது. சிறுமலையின் அடிவாரத்தில் அமைந்த இக்கோயில் பன்னெடுங்காலமாக மரங்கள் அடர்ந்து, பல அரிய மூலிகைகளின் உறைவிடமாக இருந்தது. கடந்த பத்தாண்டுகளில் இக்கோயில் 'மகம்' இராசிக்காரர்களின் விருப்பக் கோயிலாக நம்பப்பெறுகிறது. பிரதோசம் உட்பட சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் பெறுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இவ்வாலயத்திற்கு வருகை புரிகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாலிங்கேசுவரர்_கோயில்&oldid=1944059" இலிருந்து மீள்விக்கப்பட்டது