இளங்கீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''இளங்கீரன்''' ஈழத்து [[இலங்கை சோனகர்|முஸ்லிம்]] எழுத்தாளர்களில் தனித்துவமானவர். ஐம்பதுகளில் ஈழத்துத் [[தமிழ்]] நாவலுக்குப் புதிய பரிணாமத்தைக் கொடுத்தவர். ஏறத்தாழ இருபதுக்கு மேல் நாவல்களை எழுதிச் சாதனை புரிந்தவர். சிறந்த மேடைப் பேச்சாளர். [[மரகதம் (சஞ்சிகை)|மரகதம்]] என்ற இலக்கிய சஞ்சிகையை 1961 இல் தொடங்கி சில காலம் நடத்தியவர். [[இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்|இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க]]த்தின் தோற்றத்தோடு அதில் இணைந்து செயற்பட்டவர்களில் ஒருவர்.
 
சுபைர் இளங்கீரன் 1927ம் ஆண்டு இலங்கையில் பிறந்தார். 20 வயது முதல் எழுத்துத்துறையில் ஈடுபாடு காட்டி வந்துள்ளார்.
 
[[மலேசியா]]வில் '''இனமணி''' பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்த இவர் இலங்கையில் ''தொழிலாளி'', ''ஜனவேகம்'' ஆகிய அரசியல் ஏடுகளின் பிரதம ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
 
== தொடர் கதை ==
வரி 7 ⟶ 11:
இலங்கை வானொலி தேசிய சேவையில் இவர் எழுதிய ஏராளமான நாடகங்கள் ஒலிபரப்பாகின. "மனித புராணம்", "வாழப்பிறந்தவர்கள்" போன்ற தொடர் நாடகங்களும் அவற்றில் அடங்கும்.
 
== மேடை நாடகம் ==
 
பாரதி நூற்றாண்டை ஒட்டி இவர் எழுதித் தயாரித்த ''மகாகவி பாரதி'' நாடகம் 1982 டிசம்பரிலும் 1983 மார்ச்சிலும் கொழும்பில் மேடையேற்றப்பட்டது.
 
== மதிப்பளிப்புக்கள் ==
 
* இலங்கை முஸ்லிம் சமய கலாசார இராஜாங்க அமைச்சு 1992 முற்பகுதியில் ''வாழ்வோரை வாழ்த்துவோம்'' எனும் வைபவத்தில் ''இலக்கிய வேந்தர்'' எனும் பட்டத்தையும் விருதையும் வழங்கி கௌரவித்தது.
 
* 1992 இல் இந்து சமய, கலாசார இராஜாங்க அமைச்சு நடத்திய சாகித்திய விழாவில் ''இலக்கியச்செம்மல்'' எனும் பட்டமும் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
 
==எழுதிய நாவல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இளங்கீரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது