திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றையாக்கம்
சி இற்றையாக்கம்
வரிசை 105:
நவம்பர் 29, ஞாயிறு: உகாண்டா நகரின் எண்டேபே விமான நிலையத்தில் திருத்தந்தை பிரான்சிசுக்குப் பிரியாவிடை வழங்கப்படுகிறது. திருத்தந்தை, [[மத்திய ஆப்பிரிக்க குடியரசு|மத்திய ஆப்பிரிக்க குடியரசின்]] தலைநகரான பாங்குயி நகர் விமான நிலையத்தில் வந்து சேர்கிறார். நாட்டுத் தலைவர்களை சந்திக்கிறார். நற்செய்திசார் சபையினரை சந்திக்கிறார். கத்தோலிக்க குருக்கள், துறவியர், மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இளையோரை சந்தித்து உரையாற்றுகிறார். ஒப்புரவு அருட்சாதனத்தில் பங்கேற்கிறார்.
 
நவம்பர் 30: திங்கள்: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் முசுலீம் தலைவர்களை சந்தித்து உரையாடுகிறார். திருப்பலி நிறைவேற்றுகிறார். திருப்பயணத்தை நிறைவுசெய்து உரோமை நகருக்குத் திரும்புகிறார். (திருத்தந்தையின் ஆப்பிரிக்கப் பயணம் குறித்த மேலதிகத் தகவல்கள் கீழே)
|}
==திருத்தந்தை பிரான்சிசின் இலங்கைப் பயணம் (சனவரி 13-15, 2015) பற்றி சில தகவல்கள்==
வரிசை 300:
 
”நாம் வாழ்கின்ற உலகம் எல்லா மனிதருக்கும் உரித்தான ஒரு பொது இல்லம், வீடு ஆகும். உலகில் வாழ்கின்ற அனைத்து மனிதருமே ஒருவர் ஒருவருக்கு உடன்பிறப்புகள் என்ற உணர்வு வளர வேண்டும். மனித உயிர் மாண்புமிக்கது என்ற உறுதிப்பாடு நிலைபெறவேண்டும். எல்லா உயிர்களுமே போற்றப்பட வேண்டும். இத்தகைய அடிப்படைகள் ஏற்கப்படும்போது, ஆண் அல்லது பெண் என்ற வேறுபாட்டிற்கு அங்கு இடமில்லை. ஏழைகளானாலும், குழந்தைகள் ஆனாலும், முதியோர் ஆனாலும், வலுவற்றோர் ஆனாலும், கருவில் உருவாகும் உயிரானும், வேலைவாய்ப்பின்றித் தவிப்போரானாலும், கைவிடப்பட்டோர் ஆனாலும், ஒன்றுக்கும் உதவாதோர் என்று ஒதுக்கப்படுவோர் ஆனாலும் அனைவருக்குமே பொதுவான இல்லமாக, வீடாக நமது உலகம் உள்ளது என்பதே உண்மை.”<ref>[http://www.aljazeera.com/news/2015/09/full-text-pope-francis-speech-united-nations-150925174945079.html திருத்தந்தை பிரான்சிசு ஐ.நா. அமைப்பின் பொது அவைக்கு ஆற்றிய உரை - செப்டம்பர் 25, 2015]</ref>
==திருத்தந்தையின் ஆப்பிரிக்கப் பயணம் (கென்யா, உகாண்டா, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு) பற்றிய சில தகவல்கள்==
திருத்தந்தை 2015 நவம்பர் 25-30 நாட்களில் முதன்முறையாக ஆப்பிரிக்கக் கண்டத்திற்குத் திருப்பயணமாகச் சென்றார். அப்பயணத்தின்போது அவரை சந்திக்கவும் அவருடைய ஆசியைப் பெறவும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் பிறரும் பல்லாயிரக் கணக்காகக் கூடிவந்தனர். அவர் ஆற்றிய உரைகள் வழியாகவும், அவர் சந்தித்த மக்கள் வழியாகவும், அவருடைய செயல்கள் வழியாகவும் அவர் வழங்கிய செய்தி பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.
*ஆப்பிரிக்க கண்டத்தில் வசதி படைத்தவர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே மாபெரும் இடைவெளி நிலவுகிறது என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார். இந்த அநீதியை ஒழிப்பதற்கு ஆப்பிரிக்க நாடுகளின் அரசியல் தலைவர்கள் தவறிவிட்டார்கள் என்று அவர் கூறினார்.
*கென்யா நாட்டின் நைரோபி நகரில் செல்வம் செழிக்கும் பகுதிகளும் உண்டு, வறுமை வாட்டி வதைக்கின்ற சேரிகளும் உண்டு. அத்தகைய சேரி ஒன்றில் (”கங்கேமி”) வாழ்கின்ற மக்களைச் சந்திக்க பிரான்சிசு போனார். அங்கு நிலவிய வறுமையையும், சுகாதாரக் கேடான சூழ்நிலைகளையும் கண்டு அவர் பெரிதும் மனம் நொந்தார். பெரிய நகரங்களின் வளமையைக் கண்டு போற்றுபவர்கள் அந்த நகரங்களுக்கு வெளியே அமைந்துள்ள சேரிகளின் சீர்கேட்டைக் கண்டுகொள்வதில்லை. ஆனால் திருத்தந்தை பிரான்சிசு, சேரிகளில் நிலவுகின்ற வறுமையையும் சீர்கேட்டையும் உலகறியச் செய்தார்.
*திருத்தந்தை பிரான்சிசு, போர்நிகழ்கின்ற பகுதிகளுக்குச் சென்று, அப்போரில் ஈடுபட்டிருப்போரை சந்தித்து, சமாதான முயற்சிகளில் அவர்கள் ஈடுபடவேண்டும் என்று கேட்டார். சமயங்கள் தமக்குள்ளே “சகிப்புத்தன்மை” மட்டும் கொண்டிருந்தால் போதாது, மாறாக ஒவ்வொரு சமயமும் பிற சமயங்களோடு இணைந்து மக்களின் பொதுநன்மைக்காக “ஒத்துழைப்பு” நல்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
*வறுமை நிலவும் நாடுகளையும், போர் நிலவுகின்ற பகுதிகளையும், சமயத்தின் பெயரால் சண்டை சச்சரவு நிலவும் இடங்களையும் சென்று சந்தித்த உடனேயே நிலமை சரியாகிவிடும் என்று திருத்தந்தை நினைக்கவில்லை. ஆனால், இன்றைய உலகின் நிலவுகின்ற அநீதி, போர், ஆகியவற்றை அழிப்பதற்கான முயற்சியில் அனைத்து மக்களும் ஈடுபட முடியும், ஈடுபடவும் வேண்டும் என்ற செய்தியைத் திருத்தந்தை பிரான்சிசு மிக அழுத்தமாக எடுத்துரைத்தார்.
*அவர் சென்ற இடங்களுக்கு எந்த ஒரு தலைவரும் மனமுவந்து சென்றிருக்க மாட்டார். ஆனால் தங்களைத் தேடி ஒரு சமயத் தலைவர் வந்தார் என்ற எண்ணமே மக்களுக்கு ஆறுதல் தருவதாக அமைந்தது.
*திருத்தந்தை பிரான்சிசு வலியுறுத்திய இன்னொரு கருத்து, ஆப்பிரிக்க கண்டத்தில் மாபெரும் செல்வம் உள்ளது என்பதாகும். இயற்கை வளங்களும் தாது வளங்களும் நிலத்தடி வளங்களும் மிகப்பெரும் அளவில் ஆப்பிரிக்காவில் உள்ளன, ஆனால் அங்கு வாழ்கின்ற மக்களின் நட்பு, விருந்தோம்பும் பண்பு, குடும்ப உணர்வு போன்றவை மிகவும் போற்றற்குரியவை என்று திருத்தந்தை கூறினார். ஆப்பிரிக்காவின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஆப்பிரிக்கத் தலைவர்களுக்கும் மக்களுக்கும் பெரும் பொறுப்பு உண்டு என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.
*ஆப்பிரிக்காவில் மலிந்துகிடக்கின்ற ஊழல், அரசியல் தலைவர்கள் நாட்டின் செல்வத்தைச் சூறையாடுகின்ற இழிநிலை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சுற்றுச் சூழல் சீர்கேடு, இன அடிப்படையிலும் குல அடிப்படையிலும் சமய அடிப்படையிலும் நிகழ்கின்ற போர்கள், அதனால் மக்கள் உயிரிழப்பதோடு அகதிகளாகப் பலர் துன்புறுகின்ற நிலை - இவை போன்ற எண்ணிறந்த அநீதிகளுக்குத் தீர்வுகாண ஆப்பிரிக்கர்களும் பிறரும் முன்வர வேண்டும் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
*மக்களது செல்வத்தைச் சூறையாடி சொகுசாக வாழ்கின்ற அரசியல் தலைவர்களையும் திருத்தந்தை கடிந்துகொண்டார். கென்யா நாட்டில் அவர் சென்று சேர்ந்ததும், அவரை அரசு இல்லத்திற்குக் கொண்டுவர அரசு தரப்பில் சொகுசு வண்டிகளுக்கு ஏற்பாடாகியிருந்தது. ஆனால் திருத்தந்தையோ மிக சாதாரணமான ஒரு சிறு உந்து தமக்குப் போதும் என்று கூறிவிட்டார். இது நாட்டு மக்களிடையே ஒரு விவாதத்தையே கிளப்பிவிட்டிருக்கிறது. மக்கள் வறுமையால் வாடிக்கொண்டிருக்க, அரசியல் தலைவர்கள் சொகுசு வாழ்க்கை நடத்துவது முறையல்ல என்றும், நாட்டின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது நிற்கவேண்டும் என்றும் மக்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர்.
*திருத்தந்தை பிரான்சிசு மக்களுக்குப் பொன்னும் வெள்ளியும் கொண்டு செல்லவில்லை. ஆனால் அவர் மக்களுடைய இதயத்தைத் தொட்டுப் பேசினார் என்றும், மக்கள் தம் நிலையை மாற்றமுடியும் என்ற உறுதிப்பாட்டை அளித்தார் என்றும் நாளேடுகள் கருத்துத் தெரிவிக்கின்றன.<ref>[http://www.dw.com/en/opinion-no-miracles-just-signs-as-pope-francis-ends-africa-visit/a-18884231 திருத்தந்தை பிரான்சிசின் ஆப்பிரிக்கப் பயணத்தின் தாக்கம்]</ref>
*ஆப்பிரிக்க நாடுகளிலும் பிற நாடுகளிலும் மக்கள் சமய நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டும் என்று திருத்தந்தை உருக்கமாகக் கேட்டுக் கொண்டார். குறிப்பாக, அவர் சந்திக்கச் சென்ற மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு என்னும் நாட்டில் கிறிஸ்தவர்களும் முசுலிம்களும் கடுமையாக மோதிக்கொண்டு வந்துள்ளனர். திருத்தந்தை பிரான்சிசு அந்த போர்ப்பகுதிகளுக்குச் சென்று அகதிகள் முகாம்களைச் சந்தித்து அங்கிருந்தோரிடம் உரையாடினார். அவர்களுடைய இழிநிலையை நேரடியாகக் கண்டுணர்ந்தார். “கிறிஸ்தவர்களும் முசுலிம்களும் போர்ச்செயல்களிலும் வன்முறையிலும், பழிவாங்கள் செயல்களிலும் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு, ஒருவருக்கொருவர் சகோதரர்கள் என்னும் உணர்வோடு செயல்பட வேண்டும்” என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார். <ref>[http://www.bbc.com/news/world-africa-34960971 ”கிறிஸ்தவர்களும் முசுலிம்களும் சகோதரர்கள்” - திருத்தந்தை பிரான்சிசு - பிபிசி செய்தி]</ref>
==வெளி இணைப்புகள்==
*[http://www.vatican.va/holy_father/francesco/index.htm?openMenu=15 திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள் - வத்திக்கான் அலுவல்முறை இணையத்தளம்]