இஸ்ரேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Typo error in year fixed (123 changed to 1923)
வரிசை 109:
சியோனிய இயக்கம் தொடங்கிய பின்னர் இரண்டாவது அலியா அமைக்க வழி வகுத்தது. சுமார் 40,000 யூதர்கள் 1904–1914 ஆண்டுகளில் வந்துசேர்ந்தனர். 1917ல் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் ஆர்தர் பால்ஃவோர் அவர்கள் பால்ஃவோர் பேரறிவிப்பு எனப்படும் அறிவிப்பில் யூதர்களுக்கென தாயகமாக ஒரு தனி பாலசுத்தீனம் அமைப்பதில் இசைவான நோக்குடையவர்களாக இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். 1920ல் பாலசுத்தீனம் உலகநாடுகள் குழுமத்தில் பிரித்தானியர் ஆட்சி செலுத்தும் ஒரு நிலமாக மாறியது.
 
முதலாம் போருக்குப் பின்னர், மூன்றாவது அலையாக 1919-1231923 ஆம் ஆண்டுகளிலும், நான்காவது அலையாக 1924–1929 ஆம் ஆண்டுகளிலும், யூதர்களின் குடியேற்றம் நிகழ்ந்தது. இவை அலியா-3 என்றும் அலியா-4 என்றும் அழைக்கப்படுவன. 1929ல் நிகழ்ந்த அரேபிய கலவரங்களில் 133 யூதர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 67 பேர் எபிரோனைச் சேர்ந்தவர்கள்.
 
1933 வாக்கில் எழத்தொடங்கிய [[நாசிசம்|நாசிசத்தால்]] ஐந்தாவது அலையாக யூதர்கள் குடியேறினர். இந்த அலியா-5 க்குப் பிறகு, 1922ல் அப்பகுதியில் இருந்த மக்கள் தொகையில் 11% யூதர்களாக இருந்தநிலை மாறி, 1940ல் யூதர்கள் மக்கள் தொகையில் 30% ஆக உயர்ந்தார்கள். நிலப்பகுதியில், 28% சியோனிச நிறுவனங்கள் வாங்கியிருந்தன. இது தவிர யூதர்கள் தனிப்பட்ட முறையிலும் நிலங்களை வாங்கியிருந்தனர். இசுரேலின் தென் பாதி வறண்ட பாலை நிலமாகவும், மக்கட்தொகை நெருக்கமற்றதாகவும் இருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் ஐரோப்பாவில் மிகப்பெரிய அளவில் நிகழ்ந்த இனப்படுகொலையில் ஏராளமான யூதர்கள் கொல்லப்பட்ட பின்னர், ஒப்புதலின்றி (சட்டமுரணாக) ஏராளமான வெளி நாட்டு யூதர்கள் வந்து இறங்கினர். இரண்டாம் உலகப் போரின் இறுதியில் பாலசுத்தீனத்தில் சுமார் 600,000 யூதர்கள் இருந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/இஸ்ரேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது