விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தரக்கட்டுப்பாடு: *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 251:
:::: இப்படித்தான் என்ற குறைந்தபட்ச தர நியமத்திற்கான கொள்கையை உருவாக்க வேண்டும். கல்வியாளர்கள் மட்டும்தான் பங்களிக்க முடியும் என்ற நிலை இராது, ஏனெனில் இது ஒரு கூட்டுமுயற்சியே. கட்டுரை உருவாக்குபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக, தரநியமம் குறித்த தகவல்களையே வழங்குகிறது. யார்வேண்டுமானாலும் தரத்தை உயர்த்தலாம். புதியதாக வரும் விக்கிப்பீடியர்களுக்கு நான் காட்டும் கட்டுரைகள் சில, [[பட்டாம்பூச்சி]], [[இந்தோனேசியா]] உள்ளிட்டவை. விழிப்புணர்வுப் பரப்புரைகள் மட்டுமின்றி, கட்டுரை தர மேம்பாட்டு வாரம்/ மாதம் என ஒதுக்கி அனைத்து விக்கிப்பீடியர்களின் நேரத்தையும் உழைப்பையும் பயன்படுத்தி தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை மேம்படுத்த வேண்டும். பயிற்சி பட்டறைகளில் கட்டுரைகளின் தரம் குறித்த பயிற்சியையும் வழங்க வேண்டும். --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 08:07, 16 திசம்பர் 2015 (UTC)
 
அண்மையில் [[:en:Wikipedia:Meetup/Bangalore/Bangalore59|பெங்களூரில் நடந்த விக்கிமீடியர் சந்திப்பில்]] விக்கிப்பீடியா திட்டங்களின் நிலை (தரம் அன்று) குறித்து முறையாக அறிய வேண்டும் என்று பேசினோம். ஒருவேளை, இந்தப் பின்னணியில் [[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேசு]] இங்கு இந்த உரையாடலைத் தொடங்கி இருக்கிறோம்இருக்கலாம். தமிழ் விக்கிப்பீடியா தொடக்கம் முதலே இவ்வாறான உரையாடல்களை நிகழ்த்தியிருக்கிறோம் என்பது இங்குள்ள தொகுப்புகளைக் கொண்டு அறியலாம்.
 
என்னுடைய பரிந்துரை:
 
தரமானது, தரமற்றது இன்ற இரட்டை நிலைப்பாட்டில் இருந்து பல்வேறு தரங்களில் கட்டுரைகள் உள்ளன, இருக்கலாம் என்பதை இனங்கண்டு ஏற்க வேண்டும். இதற்கு [[:en:Wikipedia:Version 1.0 Editorial Team/Assessment]] போன்ற முறையை நாம் உருவாக்க வேண்டும். இப்போது நம்மிடையே சிறப்புக் கட்டுரைத் தரம், முதற் பக்கக் கட்டுரைத் தரம் ஆகியவை வரையறுக்கப்பட்டுள்ளன. குறுங்கட்டுரை வரையறை அனைவரும் அறிந்ததே. புதிதாக, அடிப்படைக் கட்டுரை, நல்ல கட்டுரை ஆகிய இரண்டு புதிய தரங்களை வரையறுக்கலாம். இவ்வாறு வரையறுத்த பின், பயனர்கள் தங்களுக்கு ஈடுபாடுள்ள கட்டுரைகளைத் தரமுயர்த்த பதக்கங்கள் தந்து ஊக்குவிக்கலாம். ஒவ்வொரு மாதமும் பல்வேறு பயனர்கள் ஈடுபாடு கொள்ளக்கூடிய, எளிதில் பங்களிக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை இனங்கண்டு, அத்துறை சார் கட்டுரைகளை குறைந்தது அடிப்படைக் கட்டுரை தரம் அளவுக்காவது முன்னேற்ற முயல வேண்டும். தினேசு பரிந்துரைக்கும் பல்வேறு தரக்கூறுகள் ஓர் அடிப்படைக் கட்டுரைக்கான வரையறைக்குப் பொருந்தும். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 05:57, 17 திசம்பர் 2015 (UTC)
 
 
 
== இவற்றையும் பார்க்க ==