உஹத் யுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
==வரலாற்றுப் பின்னணி==
 
[[ஹிஜ்ரி]] இரண்டாவது ஆண்டில் இறைமறுப்பாளர்களும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தில் ([[பத்ரு யுத்தம்]]) மிக மோசமான தோல்வியைத் தழுவிய இறைமறுப்பாளர்கள், முகம்மது நபியோடு மதினாவி்ல் வாழ்ந்திருந்தவர்களை பழி தீர்த்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பத்ருப்போரின் மூலம் [[செங்கடல்|செங்கடலை]] அண்மிய தமது வர்த்தக மார்க்கத்தின் இழப்பீடுகளினால் வருந்திய அவர்கள், வியாபாரத்தை பெருக்கிக் கொள்வதற்கு நஜ்த் வழியாக ஈராக்கிற்கு வர்த்தகக் குழுவினரை அனுப்பி வைக்கத் திட்டமிட்டனர். இந்த வர்த்தகத்தில் ஒரு இலட்சம் திர்ஹங்கள் பெறுமதியான வர்த்தகப் பொருள்களை ஏற்றிச்செல்ல அதிகமான ஒட்டகங்களையும், அவற்றோடு செல்ல ஏராளமான கூலியாட்களையும் ஏற்பாடு செய்து அனுப்பினர். இந்த வர்த்தகக்குழு தொடர்பான சகல செய்திகளையும் மதீனாவில் வாழ்ந்த சில யூதர்கள் அறிந்திருந்தனர். இந்த யூதர்களின் உரையாடலைச் செவிமடுத்த மதினாவாசியான ஸைது என்பவரின் நடவடிக்கைகளையும், தலைமைத்துவத் தகைமைகளையும் அவதானித்த நபியவர்கள், அந்த வர்த்தகக்குழுவினரை மடக்க அவரது தலைமையிலேயே நூறு குதிரை வீரர்களைக் கொண்ட படையை அனுப்பி வைத்தார்கள். தண்ணீருக்காக சுராதா என்னுமிடத்தில் தங்கியிருந்த வர்த்தகக்குழுவினரை ஸைது வெற்றிகரமாகத் தாக்கியதனால், சமாளிக்க முடியாத வர்த்தகக்குழுவினர் நாலா பக்கமும் சிதறி ஓடிவிட்டனர். வர்த்தகப் பொருள்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு அவர்களது ஒட்டகங்களோடு மதீனாவுக்குத் திரும்பினார் ஸைது. இதனாலும் சினமுற்ற மக்கா இறைமறுப்பாளர்கள் பெருஞ் சினம் கொண்டு எப்போது நபியவர்களையும், அவர்களோடு சேர்ந்தவர்களையும் தாக்கியழிக்கலாம் என்று காத்திருந்தார்கள்.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/உஹத்_யுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது