எலிசபெத் ஆர்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6,419 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
 
==வாழ்க்கை==
 
ஆர்டன் 1878 இல் கனடா, ஒண்டரியோ, வுட்பிரிக்ஜில் பிறந்தார். இவரது பெற்றோர் 1870களில் அமெரிக்கா, கார்னிவாலில் இருந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்தனர்..இவரின் தந்தi ஓர் இசுகட்டியர். தாயார் ஒரு கார்னியப் பெண். இவர்கள் தன் மகளது கல்வியை கர்னிவாலில் இருந்த அவரது பணக்கார அத்தை வாயிலாக ஏற்பாடு செய்தனர்.<ref>Sawyers, June Skinner (1966). ''Famous Firsts of Scottish-Americans''. Pelican Publishing, p. 11.</ref> ஆர்டன் தன் செவிலிப்பள்ளியில் இருந்து இடையிலேயே நின்றுவிட்டார்.<ref>Davidson, Hilary. ''Frommer's Guide to Toronto 2004''. p. 262. ISBN 0-7645-4060-2.</ref>
 
பிறகு இவர் தன் அண்ணனுடன் இணைந்து மன்ஃஆட்டனில் உள்ள மருந்தாக்கக் குழுமமான பிரிசுட்டல் மேயரின் ஈ.ஆர். இசுகுவிப்பில் புத்தகவைப்புப் பொறுப்பாளராக பணிபுரிந்தார். அங்கு ஆர்டன் பலமணி நேரம் ஆய்வகத்தில் தன் பொழுதைச் செலவழித்து தோல்காப்பு பற்றி விரிவாக அறிந்துள்ளார். பின்னர் இவர் எலீனார் அடேர் குழுமத்தில் சிறிது காலம் அழகுக்கலைப் பெண்ணாக இருந்துள்ளார்".
 
தன் முடிதிருத்தகத்திலும் சந்தை விரிவாக்க பரப்புரையிலும், ஆர்டன் பெண்களின் அழகுபுனைவு குறித்து அறிவியல்முறையில் பயிற்றுவித்துள்ளார். நறுமணவியல், அழகு புனைவு, கண், உதடு, முகம் சார்ந்த வனப்பூட்டல் குறித்த அறிவியல் கருத்துப் படிமங்களை உருவாக்கியுள்ளார் .
 
எலிசபெத் தான் முதன்முத்லில் ஆளுமைமிக்க இடைநிலை வகுப்புப் பெண்களுக்கான முறையான, சரியான, கட்டாயத் தேவையாக அழகூட்டல் கலையை நிறுவியவராவார். முன்பெல்லாம் இவை பரத்தையரிடமும் அடித்தட்டு பெண்களிடமும் மட்டுமே நிலவியது. இவர் அழகூட்டலை நடுஅகவையுள்ள எளிய பெண்களிடம் நறுமணப்பொருள்களால்அவர்களுக்கு இளமையோடு வனப்பையும் கூட்டினார். ஆனால் அரசியலில் மரபுமீறாத குடியரசுவாதியாகவே இருந்துள்ளார்.<ref>{{Cite web | last = Lewis| first = Jone Johnson | title = Elizabeth Arden Biography| accessdate = 2015-04-07| date = 2015| url = http://womenshistory.about.com/od/fashion20th/p/elizabeth_arden.htm}}</ref>
 
===வாழ்க்கைப்பணி===
 
[[Image:Elizabeth Arden Graham footstone.jpg|thumb|எலிசபெத் ஆர்டனின் நிறுவனக்கல்]]
 
[[Image:Elizabeth Arden grave.jpg|thumb|இசுலீப்பி ஃஆலோ கல்லறையில் உள்ள எலிசபெத் ஆர்டன் கல்லறை]]
 
ஆர்டன் 1909 இல் அழுக்கலை வல்லுனராகிய எலிசபெத் ஃஅப்பார்டுடன் கூட்டு சேர்ந்தார். இந்த கூட்டு முயற்சி முறிந்ததும் எலிசபெத் ஆர்டன் எனும் புதிய வணிகப் பெயரை உருவாக்கினார். இது முந்தைய கூட்டாளியான எலிசபெத் ஃஅப்பார்டு பெயரில் இருந்தும் ஆல்ஃபிரெடு தென்னிசனின் கவிதையான "எனோக் ஆர்டன் (Enoch Arden)" பெயரில் இருந்தும் உருவாக்கினார். இவர் தன் அண்ணனிடம் 6,000 டாலர் கடன்பெற்று தொடங்கினார். பின்னர் இவர் தனது முதல் முடிதிருத்தகத்தை 5 ஆம் வளாகத்தில் கடையிடம் எடுத்து தொடங்கினார்.
 
ஆர்டன் 1912 இல் பிரான்சு சென்று அழகுக்கலையையும் முக வனப்பூட்டலையும் பிடித்துவிடலையும் அங்குள்ள அழகு வனப்பகங்களில் இருந்து கற்றுக்கொண்டுள்ளார். இவர் அங்கிருந்து அவ்ரே புனைந்த நறுமணப்பொருள்களையும் வண்ணப்பொடிகளையும் திரட்டிவந்து 1915 இல் உலக அளவில் தன் வணிகப்பணியை விரிவாக்கி பல இடங்களில் அழகு வனப்பகங்களைத் தொடங்கியுள்ளார். இவர் 1934 இல் மெய்ன் சான்சு வீட்டக வனப்பு நிறுவனத்தை மெய்ன் நகர உரோமேவில் திறந்துள்ளார்.இது 1970 வரை இயங்கியுள்ளது.<ref>{{cite news |last=McMillan |first=Susan |url=http://www.centralmaine.com/2014/06/12/former-elizabeth-arden-estate-on-long-pond-for-sale/|title=Former Elizabeth Arden estate on Long Pond for sale |newspaper=[[Kennebec Journal]] |location=[[Augusta, Maine]] |date=June 13, 2014 |accessdate=June 13, 2014}}</ref>
 
இவரின் நறுமணவியல் தொழில்துறைப் பங்களிப்புக்காக பிரெஞ்சு அரசு இவருக்கு Légion d'Honneur –ஐ 1962 இல் அளித்துப் பாராட்டியது.
 
இவர் 1966 இல் மன்ஃஆட்டனில் உள்ள இலினாக்சு கில் மருத்துவமனையில் இறந்தார். இவர் நியூயார்க்கில் உள்ள இசுலீப்பி ஃஆலோ கல்லறையில் எலிசபெத் என். கிரகாம் என்ற பெயரில் அடக்கம் செய்யப்பட்டார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2029657" இலிருந்து மீள்விக்கப்பட்டது