குடவாசல் கோணேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 56:
==தல வரலாறு==
இவ்வூர் திருக்குடவாயில் என்றும் இங்குள்ள கோயில் குடவாயிற்கோட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. உயிர்கள் அனைத்தும் அழிந்துவிடக் கூடிய பிரளயம் வந்தபோது அனைத்து உயிர்களும் அழிந்துவிடகூடாதே என்று சர்வேஸ்வரன் அமிர்தகுடம் ஒன்றைச் செய்து அதில் உயிர்களையும் அமிர்தத்தையும் வைத்து குடத்தின் முகப்பில் சிவலிங்கமாக இருந்து பாதுகாத்து வந்தார். காலங்கள் கடந்தன. குடத்தின் வாயிலில் இருந்த சிவலிங்கத்தை புற்று மூடியது. அப்புற்று வளர்ந்து பேரிய மலை போல் ஆனது. புற்றால் மூடப்பட்டிருந்த குடத்தை கருடபகவான் மூக்கினால் கொத்தி பிளந்து சிவலிங்கத்தை வெளிபடுத்தினார். இதனால் இந்த இறைவனை வன்மீகாசலேசர், கருடாத்திரி என்று அழைக்கப்படுகிறார். அமிர்த துளி விழுந்த இடம் அமிர்த தலமாயிற்று. அமுத நீர் தேங்கிய இடம் அமிர்த தீர்த்தம் ஆயிற்று. உயிர்களை பலகாலம் காத்து வந்ததால் இறைவன் கோணேசர் ஆனார்.
தன் மூக்கால் கொத்தி ஈஸ்வரனை வெளிக்கொணர்ந்த கருடன், ஈஸ்வரன் அருளால் இந்த ஆலயத்தை கட்டி வழிபட்டார் என்பது புராணம். ஈஸ்வரனால் பாதுகாக்கப்பட்ட அந்த அமிர்த கலசம் தக்க காலம் வந்ததும் மூன்றாக உடைந்தது. முதல் பாகமாகிய அடிபாகம் விழுந்த இடம் கும்பகோணமாகவும் ஈசனை ஆதிகும்பேசர் எனவும் அழைக்கப்படலானது. நடுபாகம் விழுந்த இடம் கலயநல்லூர் இன்றைய சாக்கோட்டை ஆகும் இங்குள்ள ஈசன் அமுதகலசேஸ்வரர் ஆவார். குடத்தின் முகப்பு அதாவது வாயில் தங்கிய இடமே குடவாயில்(குடவாசல்) ஆயிற்று.
இங்குள்ள தலதீர்த்தத்தின் சிறப்பாக தலபுராணத்தில் கூறும்பொது அமிர்த தீர்தத்தை தொட்டவருக்கு முற்பிறவியில் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும். இத்தீர்த்தத்தை அருந்தியவர்கள் புன்ணியவான் ஆகிறார்கள். இதில் ஸ்தானம் செய்ய விரும்பி இது இருக்கும் திசையில் ஓரடி எடுத்து வைத்தாலே கங்கா ஸ்நானம் செய்த பலனும், சிவலோக வாழ்வும் பெற்றவர்கள் ஆகிறார்கள். சிவராத்திரியில் பக்தியுடன் இத்தீர்த்தத்தில் மூழ்கினால், பதினாயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் மூழ்கி ஈசனை தரிசிப்பவர் தேவர் ஆகிறார்கள். இதில் ஸ்நானம் செய்பவர் அனைவரும் அமிர்தமயமான சரீரம் உடையவர்கள் ஆகிறார்கள்.
இக்கோவிலுக்கு தொழுநோயால் அவதியுற்ற திருணபிந்து என்ற முனிவர் வழிபட, ஈசன் குடமூக்கில் இருந்து வெளிப்பட்டு முனிவருடைய தொழுநோயை தீர்த்ததால் குடவாயில் என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
 
==அமைவிடம்==
"https://ta.wikipedia.org/wiki/குடவாசல்_கோணேசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது