கறுப்புக் கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Black Stone" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:48, 22 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்

கறுப்புக் கல் ஆனது சவுதி அரேபியா வில் மக்காவில் அமைந்துள்ள கஹ்பாவில் கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ளது.இஸ்லாமிய பாரம்பரியம் படி ஆதம், ஹவ்வால் (அலை) அவர்களின் காலத்திருந்தே இஸ்லாமியர்களால் போற்றப்பட்ட சின்னமாகும்.

யாத்திரிகர்கள் முத்தமிட வாய்ப்பு பெற முட்டித் தள்ளுகின்றனர். அவர்களால் கல்லை முத்தம் முடியவில்லை என்றால், அவர்கள் தங்கள் வலது கையில் ஒவ்வொருசுற்றிலும் கல் நோக்கி சுட்டிக்காட்ட முடியும்.

இந்த கல் இஸ்லாமிய ஆரம்ப காலம் தொட்டு வனங்கப்படுகிறது. இஸ்லாமிய முறைப்படி கறுப்புக் கல் ஆனது முஹம்மது நபி(ஸல்) அவர்களால் கி.பி 605 ம் ஆண்டு கஹ்பாவின் சுவருடன் பழுதடைய வண்ணம் இணைத்து அமைக்கப்பட்டுள்ளது. முதல் வெளிப்பாடாக கி.பி605 க்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் பல துண்டுகளாக உடைக்கப்பட்டு தற்போது கஹ்பாவின் ஓரத்தில் வெள்ளி சட்டத்தினால் சாந்திடப்பட்டுள்ளது.

இது இஸ்லாமிய முறைப்படி முஹம்மது நபி (ஸல்) அவர்களால் பின்பற்றியதாக இன்றும் முஸ்லிம் யாத்திரிகர்கள் ஹஜ் கடமையில் கஹ்பாவை சுற்றி தவாப் செய்யும் போது இக்கல்லை போட்டியிட்டு ஆர்வத்துடன் முத்தமிடுவார்கள்

உடல் விளக்கம்

 
கல்லின் நெருக்கமான காட்சி
 
கல்லின் துண்டுதுண்டான முன்பக்க எடுத்துக்காட்டு

கறுப்புக் கல் ஆனது ஒரு வெள்ளி சட்ட மூலம் ஒன்றால் இணைக்கப்பட்டுள்ளது. சிறு பாகங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளதால் இன்று 7 அல்லது 8 பாகங்கள் ஒன்றாக்கப்பட்டு காணக்கூடியதாக உள்ளது. கல்லின் அசல் வெளித்தோற்ற அளவு 20 சென்டிமீட்டர்( 7.9 அங்குலம்), 16 சென்டிமீட்டர் (6.3 அங்குலம்) ஆகும். இந்தக்கல் ஆனது பல தடவை புதுப்பித்து கட்டப்பட்டதால் இதன் அசல் அளவு தெளிவற்றது.

10 ம் நூற்றாண்டில் ஒரு அவதானிப்பாளர் கூறினார் இக்கல் ஆனது ஒரு முழம் (1.4 அடி (0.46m))நீளம் கொண்டது.18 ம் நூற்றாண்டில் 'அலி பே' என்ற அறிஞ்சரின் கூற்றுப்படி 42 அங்குலம் (110cm) உயரம் உடையது. முஹம்மது அலி பாஷர் என்ற அறிஞ்சரின் கூற்றுப்படி 2.5 அடி (0.76m) நீளமும், 1.5 அடி (0.46m) அகலமும் கொண்டது.

19ம் நூற்றாண்டு இறுதி, 20ம் நூற்றாண்டில் தொடக்கத்தில் 1814ம் ஆண்டு சுவிஸ்லாந்தில் இருந்து யாத்திரிகராக வந்த 'ஜோஹன் லட்விக் பர்கர்ட்' இனால் முதன் முதலாக மேற்கத்திய இயக்கத்தில் கறுப்புக்கல்லை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அவரின் 'அரேபியாவில் ஒரு பயணம்' என்ற புத்தகத்தில் பின்வருமாறு ஒரு விரிவான விளக்கத்தை கொடுத்துள்ளார்:

1853ல் கஹ்பாவிற்கு விஜயம் செய்த ரிச்சர்ட் பிரான்சிஸ் பர்டன் மேலும் குறிப்பிட்டது:

ரிட்டர் வொன் லஹோரின், எகிப்தில் ஆஸ்திரிய தூதர் 1817 ல் முஹம்மது அலி அவர்களினால் அகற்றப்பட்ட கல்லின் ஒரு பகுதி ஆய்வு செய்து அக்கல்லின் வெளிப்புறம் சாம்பல் நிறத்துக்கேற்ற வெள்ளி நிறமும் உள்ளே தூளாக்கப்பட்ட வெள்ளி பச்சை நிற பொருட்கள் பதிக்கப்பட்டும் கல்லின் முகப்பு பகுதியில் வெள்ளை அல்லது மஞ்சள் புள்ளிகளும் உள்ளன என அறிவித்தார்

கருப்பு கல்லை சூழ உள்ள சட்டம், கருப்பு கிஷ்வாஹ் அல்லது கஹ்பாவை சூழ உள்ள கருப்பு துணியானது பல நூற்றாண்டுகளாக பள்ளி வாசலின் பொறுப்பாளரான 'ஓட்டோமான் சுல்தான்' என்பவரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. அச்சட்டமானது யாத்திரிகர்களால்அவ்வப்போது மாற்றப்பட்டும் காலப்போக்கில் நிலையானதாகவும் அணிவிக்கப்படும். நீக்கப்படும் அச்சட்டமானது இஸ்தான்புல்லுக்கு கொண்டு செல்லப்படும். அவர்கள் இன்னும் அதனை புனித பீடத்தில் ஒரு பகுதியாக கருதி 'டொப்காபி' மாளிகையில் பராமரித்து வருகின்றனர்.

வரலாறு மற்றும் பாரம்பரியம்

 
A 1315 illustration from the Jami al-Tawarikh, inspired by the Sirah Rasul Allah story of Muhammad and the Meccan clan elders lifting the Black Stone into place.[1]

முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாம் பற்றி நற்செய்தியை அறிவிப்பதற்கு முன்னதாகவே கறுப்புக்கல் அமைக்கப்பட்டதுடன் பெரும் மதிப்புடையதாகவும் இருந்தது. முஹம்மது (ஸல்) அவர்களுடைய காலத்தில் அது ஏற்கனவே கஹ்பாவுடன் தொடர்புடையதாக இருந்தது. முன்னைய இஸ்லாமிய சந்ததி ஒரு வருடத்திற்கு ஒரு முறை அங்கு சென்று வழிப்பட்டு வந்தனர். மக்காவில் அமைந்து இருக்கும் கஹ்பா 360 வக்கிரங்களை வைத்து கடவுளாக வழிபடும் ஒரு தலமாக இருந்தது. மத்திய கிழக்கில் யூதர்களின் கலாச்சாரமாக கற்களை வழிபடுகின்ற வழக்கம் இருந்து வந்தது. புனித குர்ஆன் மற்றும் பைபிள் ம் பிரதிபலிக்கறது அதாவது ஒரு பொருளொன்றை குனிந்து மரியாதை செய்வது அல்லது முத்தமிடுவது ஒரு சிலை வாளிப்பாட்டாளர்களின் செயல் மற்றும் தீர்க்கத்சரிசிக்குரிய கண்டனமாக விவரிக்கபடுகிறது. மற்றும் சில எழுத்தாளர்களின் கருத்தானது கருப்புக்கல்லின் சட்டமானது பெண்களின் வெளிப்பிறப்பு உறுப்பு போன்றும் மற்றும் இக்கருத்து முன்னைய அரேபியா சடங்குகளுடன் ஒத்ததாக காணப்பட்டது.

ஒரு 'சிவப்புக்கல்' ஆனது தென் அரேபியாவில் கைமண் எனும் நகரிலும் மற்றும் கஹ்பாவில் அல்-அபலட் ( தென் மக்காவில் தபலா நகரம்) லும் தெய்வீகத்தன்மை உடையதாக காணப்பட்டது. அந்தக்காலத்தில் வணக்க வழிபாடு பெரும்பாலும் பயபக்தியான கற்கள், மலைகள்,சிறப்பான பாறை அமைப்புக்கள் அல்லது தனித்துவமான மரங்கள் தொடர்பு உடையதாகும். கஹ்பா அமைந்து இருக்கும் புனித உலகம் இடையூடு ஆளாகியிருப்பதையும் இடம் குறித்து காட்டுவதோடு பொருத்தப்பட்டுள்ள கறுப்புக்கல் ஆனது உலகத்தையும் சுவர்க்கத்தையும் இணைக்கும் ஒரு பொருளின் சின்னமாகவும் கருதப்படுகிறது.

முஹம்மது

தற்போதைய கருப்புக்கல் கஹ்பா சுவரிலே அமைக்கபெற்ற பெருமை முகம்மதுவை சேரும். இப்னு இஷாக் சிராஹ் ரசூல் அல்லாஹ் கூறிதாக ஒரு கதை உள்ளது.ஒரு பெரும் தீ விபத்தில் கஹ்பாவின் ஒரு பகுதி அளிக்கப்பட்டதாகவும் மீண்டும் கஹ்பாவை கட்டிஎளுப்பும் வேலையின் போது தற்காலிகமாக அக்கல் அவ்விடத்தை விட்டு அகற்றப்பட்டது.மீண்டும் அதனை அதே இடத்தில் பொறுத்த மரியாதைக்குரிய ஒரு நபர் மக்கா வாரிசுகள் தமக்குள் இல்லை என வாதிட்டனர்.

அவர்கள் அடுத்த மனிதர் வாயில் வழியாக வரும் வரை காத்திருந்து அவரிடமே முடிவு செய்ய சொல்ல காத்திருந்தனர். இந்நிகழ்வு முஹம்மதிற்கு நபித்துவம் கிடைக்க 5 ஆண்டுகள்ளுக்கு முன் 35ம் வயதில் நடைபெற்றது.அவர் மக்கா வாரிசுகளின் மூத்தவர்களிடம் துணி கொண்டு வர செய்து அத்துணியின் நடுவில் கல்லை வைக்க சொல்லி அத்துணி மூலையை குலத்தலைவர்கள் ஒவ்வொருவரும் பிடித்து தூக்கிச் சென்று சரியான இடத்தில் வைக்க முஹம்மது நபி அவர்கள் அக்கல்லை சரியான இடத்தில் பொருத்தினார் இந்நிகழ்வு அனைத்து மக்கா வாசிகளுக்கும் திருப்தியை அளித்தது.

இக்கல்லின் தெய்வீக தன்மை இழப்பு மற்றும் கணிசமான சேதங்களும் ஏற்பட்டது. 683ல் மக்காவில் உமையா சேய்க் காலத்தில் கவன் ஒன்றினால் நெருப்புக்கள் எறியப்பட்டு ஒரு பகுதி முறிக்கப்பட்டது.அதன் துண்டுகளை அப்த் அல்லாஹ் இப்னு ஜுபய்ர் என்பவரினால் மீண்டும் வெள்ளி தசை நார் கொண்டு இணைக்கப்பட்டது. ஜனவரி மாதம் 930ல் இக்கல்லானது 'கார்மாடின்ஸ்'இனால் திருடப்பட்டு ஹஜர்ருக்கு( நவீன பஹ்ரைன்) துக்கி செல்லப்பட்டது. 1857ல் ஓட்டோமான் வரலாற்று ஆசிரியர் கத்ப் அல்- டீன் கூற்றுப்படி 'கார்மாடின்ஸ்' தலைவர் 'அபு-தாகிர் அல்-கார்மாடி' தனது சொந்த பள்ளி வாசல் ஆன மஸ்ஜித் அல்-டிறார் ன் உச்சியில் அக்கல்லை நிறுவினார் ஏனென்றால் ஹஜ் செய்ய செல்லும் யாத்திரிகர்களை திசை திருப்புவதற்காக அவரின் திட்டம் தோல்வியுற்றது ஏனென்றால் யாத்திரிகர்கள் கருப்புக்கல் இருந்த இடத்தை வணங்கத் தொடங்கினர்.

வரலாற்றாசிரியர் அல்-ஜுவைனி ன் கருத்துப்படி 23 வருடங்களுக்கு பின்னர் 952ல் மீண்டும் கொண்டு வரப்பட்டது. ஒரு தொகை பணம் கொடுக்கும் படி கார்மாடின்ஸ் அவர்கள் அப்பாசியர்களை கட்டாயப்படுத்தினர். அது சாக்கினுள் பொதியிடப்பட்டு வெள்ளிக்கிழமை கூபா பள்ளிவாசல் மீது எறியப்பட்டது. ஒரு குறிப்பினிலே "கட்டளை மூலம் அதை நாம் எடுத்துச் சென்றோம் மீண்டும் கட்டளை மூலம் கொண்டுவந்தோம்." கடத்தல் மற்றும் அகற்றுதல் மேலும் சேதத்தை ஏற்படுத்தியதால் கல் ஏழு துண்டுகளாக உடைக்கப்பட்டது. அதை கடத்திச் சென்ற நபர் அபு-தாகிர் ஒரு கொடூரமான விதி சந்தித்தாக கூறப்படுகிறது. கட்ப் அல்- தீன் கூற்றின் படி "அபு தாஹிருக்கு ஒரு அயற்சி புண் நோய் ஏற்பட்டது, அவரது மாமிசம் புழுக்கள் விட்டு சாப்பிடப்பட்டு மிகவும் கொடூரமான மரணத்தை அடைந்தார்."

11ம் நூற்றாண்டிலே பாடிமிட் காலிப் அல்-ஹக்கீம் பி-அமர் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் உடைத்தெறிய முற்பட்டான் ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். ஆனால் சின்னதொரு சேதம் ஏற்பட்டது. 1674ல் ஜோஹன் லுட்விக் பர்கார்ட் கூற்றின்படி யாரோ கருப்புக்கல்லில் சாணத்தை ஒட்டியுள்ளனர் அதனால் "ஒவ்வொருவரிலும் யார் கறைபடிந்த தாடியுடன் முத்தமிடுகின்றனர்."

சடங்கு பங்களிப்பு

 
மக்காவிலுள்ள கஹ்பா,கறுப்புக் கல்லானது கஹ்பாவின் கிழக்கு மூலையில் உள்ளது.

ஹஜ் கடமையின் போது யாத்திரிகர்கள் ஏழு தடவை கஹ்பாவை இடஞ்சுழியாக சுற்றி வரும்போது கறுப்புக்கல் ஆனது முக்கிய பங்கு வகிக்கின்றது. யாத்திரிகர்கள் ஒவ்வொரு முறையும் சுற்றி வரும் போது கருப்ப்க்கல்லை முத்தமிட முயற்சிக்கின்றனர் ஆனால் இன்றைய நவீன காலத்தில் பெருங்கூட்டம் ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்வதால் அனைவரும் அக்கல்லை முத்தமிடுவது சாத்தியமற்றது ஆகவே ஒவ்வொரு சுற்றின் போதும் அந்த கல்லின் திசையை சுட்டிக்காட்டுவது ஏற்கத்தக்கது.

சிலர் கஹ்பாவை சுற்றி வலம்(தவாப்) வரும் போது வெறுமனே சுற்று எண்ணிக்கையை கணக்கிடுவதற்கான ஒரு சிறந்த அடையாள கள்ளக கருதினர். அதன் கருப்பு நிறமானது கடவுள் பற்றின்மை, மற்றும் அத்தியாவசிய ஆன்மீக நல்லொழுக்கச் சின்னமாகவும் மற்றும் தான் என்ற அகங்காரத்தை மனதிலிருந்து அளித்து(கல்ப்) கடவுளை நோக்கி முன்னேற உதவுவதாக கருதப்படுகிறது.

மதீனாவின் விடியலில் எழுதப்பட்டுள்ளது: ஒரு யாத்திரிகரின் முன்னேற்றம், முபாஷால் இக்பால் அவர்கள் மதீனாவிற்கான யாத்திரையின் போது கருப்புக்கல்லை வணங்கும் அனுபவத்தை பற்றி இவ்வாறு கூறுகிறார்:

கருத்து மற்றும் அடையாளங்கள்

இஸ்லாமிய பாரம்பரியத்தில் கருப்புக்கல் ஆனது ஜன்னாஹ்வில் இருந்து விழுந்ததாகவும் அதை ஆதம், ஏவாள்க்கு கட்டுவதற்காக வைக்கப்பட்டதுடன் இது பூமியில் அமைக்கப்பட்ட மஸ்ஜித்களில் முதன்மையானதாகும். முஸ்லிம்கள் அந்தக்கல்லை முதலில் தூய மற்றும் திகைப்பூட்டும் வெள்ளை கல்லாக கண்டனர். பின்னர் அந்தக் கல் கருப்பாக மாறிவிட்டது ஏனெனில் மக்கள் அதை தொடர்ந்து தொட ஆரம்பித்ததாலாகும். ஒரு தீர்க்கதரிசன மரபுப்படி (கருப்புக்கல் மற்றும் அல் -ருகன் அல் -யமனி) இரண்டையும் தொடுவதானது பாவங்களில் பரிகாரமாகும். ஆதம் (அலை) ன் பலிபீடத்தில் கல் ஆனது நூஹ் (அலை) அவர்களின் வெள்ளத்தில் தொலைந்து போனதாக மறந்து கூறப்பட்டது. அதன் பின்னர் ஜிப்ரீல்(அலை) மூலமாக மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதன் பின்னர் புதிய கஹ்பா, பள்ளிவாசல் கட்டுவதற்காக இப்ராஹிம்(அலை) அவர்கள் தனது மகான் இஸ்மாயில் (அலை) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

இரண்டாவது கலீபாவான Caliph உமர் இப்னு அல்-கத்தாப் (580–644) ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, 'நீ தீங்கோ, நன்மையோ அளிக்கமுடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' என்றார். எனினும் கன்ஸ்-அல்-உம்மால் அவரினால் அறிவிக்கப்பட்ட ஹதீஸ் தொகுப்பில் அலி(ரலி) அவர்கள் உமர்(ரலி) க்கு பதில் அளித்தார்கள் " இந்தக்கல் (ஹஜருல் அஸ்வத்) ல் நன்மை அல்லது தீங்கை அடைய முடியும் .... அல்லாஹ் அல் குர்ஆனில் கூறியுள்ளான் அதாவது மனிதர்களை ஆதம்(அலை)ன் சந்ததியிலிருந்து உருவாக்கியும் அவர்களுக்கு தமக்கு தாமே சாட்சி கேட்டார் 'நான் உங்களை உருவாக்கியவரா? இதற்காக அவர்கள் உறுதி செய்து கொண்டார். இவ்வாறே அல்லாஹ் இதை உறுதிப்படுத்தி எழுதினார்.மற்றும் இந்தக்கல்லுக்கு கண்கள் ஒரு ஜோடி,காது மற்றும் நாக்கு மற்றும் அது அல்லாஹ்வின் கட்டளையின் பெயரில் யார் எல்லாம் ஹஜ் செய்ய வருகிரர்களோ அவர்களிடம் உறுதிப்படுத்தி, சாட்சியாக இருக்க உத்தரவிட்டார்.

முஹம்மது லபிப் அல்-படனுனி 1911ல், முன்னைய இஸ்லாமிய நடைமுறையில் கற்களை வணங்குவது பற்றிய கருத்துகலானது எழவில்லை ஏனெனில் அத்தகைய கற்கள் "தங்கள் சொந்த நலனுக்காக புனிதமாக்கின்றனர் ஏனெனில் அவற்றின் உறவானது தெய்வீகமான மற்றும் மரியாதைக்குரியது. இந்தியாவின் இஸ்லாமிய அறிஞர் முஹம்மது ஹமீதுல்லாஹ் பின்வருமாறு கருப்புக்கல்லின் பொருளை சுருக்கமாக கூறினார்:

சமீபத்திய காலங்களில் பல மொழியியலாளர்கள் கருப்புக்கல் பற்றி பல கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். எனினும் ஒரு சிறுபான்மை மொழியில் உண்மை என உறுதி செய்த உருவக ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. " கல்லானது தீர்ப்பு நாள் அன்று (கியாமத் நாள்) பார்க்கக் கூடிய கண்கள், பேசக்கூடிய நா,மற்றும் உண்மையான பயபக்தியுடன் முத்தமிட்டவர்களுக்கு சாதகவாகவும் ஆனால் யாரொருவர் கஹ்பாவை சுற்றி வரும்போது வதந்தி, வீண்பேச்சி பேசினார்களோ அவர்களுக்கு பாதகமாகவும் சாட்சி கூறும்"

கார்ல் ஜங்ன் குறிப்பில் கனவுகள், பிரதிபலிப்புக்கள், நினைவுகள் திருமறை சார்ந்த சின்னமாக கற்கள் பல உள்ளன ஒரு வேலை ஆழமான அனுபவத்தில் சின்னம் என அர்த்தம் கொள்ளலாம். ஒரு மனிதனிடம் அழிவில்லாத மற்றும் மறக்க முடியாத கணங்கள் இருக்கலாம் அவை ஏதோ ஒரு நிலை பேறுடைய அனுபவமாகும். கஹ்பா இஸ்லாமிய உலகத்திலே ஒரு புனித தெய்வீக இல்லமாகவும் மற்றும் பயபக்தியுடைய முஸ்லிம்கள் மக்காவிலுள்ள கறுப்புக் கல்லை பார்க்க வாழ்வில் ஒரு தடவை ஏனும் யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.

அறிவியற் தோற்றம்

கறுப்புக்கல்லின் தன்மையானது கடும் விவாதத்திற்கு உரிய ஒரு விடயமாகும். இது எரிமலை பாறைகள் எனவும் இரத்தினக்கற்களில் ஒன்று எனவும் இயற்கையான கண்ணாடி துண்டு எனவும் அனேகமாக கல்லுள் புதைவுற்ற விண்கல் எனவும் பல வகைகளில் கூறப்படுகிறது. 1857ல் ஆஸ்திரிய ஹங்கேரிய கனிமங்கள் தொகுப்பிற்கு பொறுப்பானவரின் முதல் விரிவான அறிக்கையில் கறுப்புக்கல் ஆனது ஒரு விண்கல் என குறிப்பிட்டுள்ளார். 1974 ல் கருப்புக்கல்லை பற்றி 'ராபர்ட்ஸ் டைட்ஸ்' மற்றும் 'ஜோன் மேக்ஹோன்' ம் இது ஒரு இரத்தினக்கல் வகை எனவும்,அரேபியா புவியியலாளர் அறிக்கை படி இதன் உடல் பண்புகளின் அடிப்படையில் இதில் தெளிவாக கவனிக்கதத்தக்க இரத்தினக்கல்லின் பரவல்பினைப்பு காணப்படுகிறது.

21 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட கல்லானது கி.பி 951l மீட்கப்பட்ட பின் அதன் இயல்பு பற்றி குறிப்பிடத்தக்க துப்பு வழங்கப்பட்டது.வரலாற்று பதிவாளரின் கருத்துப்படி இக்கல் நீரில் மிதக்கக்கூடிய திறன் கொண்டது இக்கணக்கு துல்லியமாக இருந்தால் இக்கல்லானது இரத்தினக்கல், எரிமலை கருங்கல், விண்கல் ஆக இருக்க முடியாது எனினும் கண்ணாடி அல்லது படிக்கல்லாக இருக்க வாய்ப்புள்ளது.

கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த எல்சபத் தொம்சன் என்பவரின் கருத்து என்னவெனில் 1980ல் கருப்புக்கல் ஆனது வாபர் மணிக்கு சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன் விழுந்தததாகும் என்றும் விண்கல்லின் தாக்கத்தினால் துண்டு துண்டாக ஆக்கப்பட்ட கண்ணாடி துண்டு அல்லது imactite ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மக்காவின் அல்-காலி பாலைவனத்தில் 1100 கிலோமீட்டர் மக்காவின் கிழக்கில் வாபர் மணிக்கு கிறேட்டரினரின் சிலிக்கா கண்ணாடி தொகுதிகள் முன்னிலையில் வெப்பத்தின் தாக்கத்தினால் விண்கல்லில் இருந்து நிக்கல்-இரும்பு கலவை மணிகள் வந்ததாகவும் குறிப்பிடப்பட்டது. கண்ணாடி தொகுதிகள் நீரில் தேக்க விடப்பட்டு மஞ்சள் அல்லது வெள்ளை உள்துறை மற்றும் எரிவாயு நிரப்பபட்ட்ட ஹொல்லொவ் என்பவற்றால் பள பளப்பான கருபுக்கன்னடி உருவாக்கப்படுகிறது. என்றாலும் 1932 வரை விஞ்ஞானிகள் வாபர் பள்ளம் பற்றி அறிந்து இருக்கவில்லை இது ஒமானிலிருந்து ஒரு சாத்து வழி அருகே அமைந்து உள்ள பாலைவனத்தில் மக்கள் குடியிருக்கும் பகுதியாகும். இது நிச்சயமாக நன்கு அறியப்பட்ட பரந்த பகுதியில் இருந்தது; பழங்காலத்து கவிஞர் வாபர் அல்லது உபர் (கோபங்களின் தூண்கள்)கூறினார் ஒரு அற்புதமான நகரம் அந்த நகரின் தீய அரசர் இருப்பதால் வானிலிருந்து தீ வெஇத்து அந்நகரம் தீ வைத்து அழிக்கப்பட்டது. அப்பள்ளத்தின் வயது மதிப்பிடப்பட்டது துல்லியமாக இருந்தால் அது அரேபியாவில் மனித வாழ்விற்குரிய காலமாகும் மற்றும் அங்கு மோதலும் ஏற்பட்டிருக்கும். நவீன விஞ்ஞானிகள் (2004) வாபர் பகுதியை அறைந்து இவ்வாறு கூறினர் முதல் சிந்தனையை விட இந்த மோதல் நிகழ்வு மிகவும் சமீபத்தில் 200-300 ஆண்டுகளுக்குள் நடந்துள்ளது.

இது ஒரு போலி விண்கல் எனவும் இன்னும் ஒரு வார்த்தையில் பூமிக்குரிய கல் தவறுதலாக ஒரு விண்கல்லின் பண்புகளை கொண்டுள்ளது எனவும் பிரிட்டிஷை சேர்ந்த இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் பரிந்துரைத்தது.

குறிப்புகள்

  1. University of Southern California. "The Prophet of Islam—His Biography". பார்க்கப்பட்ட நாள் December 3, 2010.

சான்றாதாரங்கள்

  • Grunebaum, G. E. von (1970). Classical Islam: A History 600 A.D.–1258 A.D.. Aldine Publishing Company. ISBN 978-0-202-15016-1
  • Sheikh Safi-ur-Rahman al-Mubarkpuri (2002). Ar-Raheeq Al-Makhtum (The Sealed Nectar): Biography of the Prophet. Dar-us-Salam Publications. ISBN 1-59144-071-8.
  • Elliott, Jeri (1992). Your Door to Arabia. ISBN 0-473-01546-3.
  • Mohamed, Mamdouh N. (1996). Hajj to Umrah: From A to Z. Amana Publications. ISBN 0-915957-54-X.
  • Time-Life Books (1988). Time Frame AD 600–800: The March of Islam, ISBN 0-8094-6420-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கறுப்புக்_கல்&oldid=2054868" இலிருந்து மீள்விக்கப்பட்டது