பூதத்தாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
இந்து சமயத்தாரால், குறிப்பாக வைணவப்பிரிவினரால், நம்பிக்கையுடன் போற்றப்படும் இவ்வரலாறு சுவை மிகுந்தது. இறைவன், இவர்களால் உலகை உய்விக்க கருதி, திருக்கோவலூரில், ஒரு வீட்டின் இடைகழியில் மழை பெய்யும் ஒரு நாள் இரவில் ஒருங்கிணைத்தான். எவ்வாறெனில், தனித்தனியாக தலயாத்திரை மேற்கொண்ட மூன்று ஆழ்வார்களும் திருக்கோவலூரில் ஒரே சமயத்தில் நுழைய பெருமழை உண்டானது. மழைக்கு ஒதுங்கும் பொருட்டு ஒரு குடிசையை நெருங்க அவ்விடம் '''ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம்''' எனும் அளவில் இருக்க இம்மூவரும் அங்கு சிறிது நின்றுகொண்டிருக்க நான்காமவராக இருந்து இருளில் நெருக்கத்தை உண்டுபண்ணினான் இறைவன்.
 
நெருக்கத்தின் காரணத்தை அறிய வேறு விளக்கின்மையால், பொய்கையார் பூமியாகிற தகழியில்(அகல் விளக்கு) கடல்நீரை நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார். பூதத்தார் அன்பாகிய தகழியில்(அகல் விளக்கு) ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு சிந்தையாகிய திரியில் ஞானவிளக்கை ஏற்றினார். இவ்விரண்டின் ஒளியால் இருள் அகல, நெருக்கத்திற்குக் காரணமான இறைப்பொருளைக் கண்டார். பின் மூவரும் அப்பொருளின் சொரூபத்தை அறிந்து அனுபவித்து ஆனந்தம் எய்தினர்.இவ்வரலாற்றின் உட்பொருள் யாதெனில் பொய்கையாரின் செயல் புற இருள் நீக்கியது, பூதத்தார் செயல் அக இருளை நீக்கியது. அக இருள், புற இருள் இவ்விரண்டும் நீங்கினால் பரமனைக் காணலாம். ஆக முதல் இரண்டு ஆழ்வார்கள் செயல்கள் அக, புற இருள் நீக்க பேயாழ்வார் இறைவனின் வடிவழகை அன்பெனும் வெளிச்சத்தில் கண்டார் என்பதாம்.
 
==மூன்று திருவந்தாதிகள்==
"https://ta.wikipedia.org/wiki/பூதத்தாழ்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது