தமிழ்நாடு விடுதலைப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
மிசா காலக்கட்டத்தில் அரசியல் கைதியாக கைது செய்யப்பட்ட தமிழரசன் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த [[கு. கலியபெருமாள்|புலவர் கலியபெருமாள்]] போன்றோருடன் இணைந்து சிறையில் இருந்து தப்பிக்க முயன்று அனைவரும் பிடிப்பட்டனர். <ref>மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன், புலவர் கலியபெருமாள், பக்.104</ref> மிசாவுக்குப் பின் விடுதலை அடைந்தார்.
தேசிய இனவிடுதலைக் குறித்து இ.க.க.(மா.லெ) யுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தமிழரசனும் அவரது தோழர்களும் தனியாக பிரிந்து தமிழ்த் தேசியத்துக்காக புது இயக்கம் கண்டனர். தமிழகத்துக்குக் [[காவிரி ஆறு|காவிரியில்]] தண்ணீர் தர மறுக்கும் [[கர்நாடகம்|கர்நாடகத்தின்]] அணைகளைத் தகர்க்கவும் வேறு சில திட்டங்களுக்காகவும் தேவைப்பட்ட பணத்திற்கு அவர் படித்த பொன்பரப்பி ஊரில் உள்ளவங்கியில் கொள்ளையிட தமிழரசன் உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் கொண்ட குழுவினர் திட்டமிட்டனர். இச்செய்தி தமிழக உளவுப்பிரிவினருக்கு கசிந்தது. குறிப்பிட்ட நாளில் தமிழரசனும் அவரது தோழர்களும் வங்கிக்குள் புகுந்து பணத்தைக் கைப்பற்றி வங்கியைவிட்டு வெளியே வந்தனர். இதை எதிர்பார்த்த காவல் துறையினர் சாதாதண உடையில் பொதுமக்களுடன் கலந்து தமிழரசன் குழுவினரைச் சுற்றிவளைத்து அடித்தனர். கையில் ஏ.கே.47 துப்பாக்கி வைத்திருந்த நிலையில் தமிழரசனும் அவரின் தோழர்களும் பொது மக்கள் தான் தங்களை அடிக்கிறார்கள் என நினைத்ததால் தங்களை அடித்தவர்களைச் சுட அதைப் பயன்படுத்தாமல் இறந்தனர்.<ref>மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன், புலவர் கலியபெருமாள், பக்.131</ref>
 
== மற்ற அயுதக்குழுக்களுடனான தொடர்பு ==
=== புலிகளுடன் ===
தமிழ்நாடு விடுதலைப்படை இயக்கத்தினர் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர். புலிகள் தங்கள் இயக்கத்துக்கு ஆபத்துக்கால சரணாலயமாக தமிழ்நாட்டையே கொண்டிருந்தனர். புலிகள் இயக்கத்தவர்கள் ஆபத்துக்காலங்களில் தமிழ்நாட்டில் தஞ்சம் புக தமிழ்நாடு விடுதலைப்படை போன்ற ஆயுதக்குழுக்களே உதவி செய்தன. ஆனால் இராசீவு காந்தி படுகொலைக்கு பின்னர் புலிகள் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.
 
=== வீரப்பனாருடன் ===
தமிழ்நாடு விடுதலைப்படைக்கு நெருக்கமாக இருந்த மற்றொரு ஆயுதக்குழு [[வீரப்பன்]] படையினர் ஆகும். தவிப இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான மாறன் தமிழ்நாடு கர்நாடக காவல்துறையால் தேடப்பட்ட போது மாறன் வீரப்பன் பாதுகாப்பில் ஒளிந்திருந்ததாகவும் கருதப்படுகிறது. வீரப்பனும் தவிபவும் கர்நாடக அரசை பொது எதிரியாக கருதினர். கர்நாடக தமிழக நீர் பங்கீட்டு சிக்கல்களில் கர்நாடக அரசு காவிரி ஆற்றுநீரை தமிழகத்துக்கு தராததும் கர்நாடக மாநிலத்திலுள்ள தமிழர்கள் தாக்கப்பட்டதும் தவிபவும் வீரப்பனும் கர்நாடக அரசை பகைப்பதற்கு பொதுக்காரணங்களாக இருந்தன. வீரப்பனின் தம்பி அர்சுனன் கர்நாடக அரசால் கொல்லப்பட்டதும் மற்றொரு காரணமாய் வீரப்பன் குழுவினருக்கு இருந்தது.
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_விடுதலைப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது