நாகர் (தமிழகம் மற்றும் இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
புதைகுழிகள் மூன்று அடுக்குகளாக ஒன்றின்மேல் ஒன்றாக அமைந்து இருந்தன. இவற்றுள் காணப்பட்ட மட்பாண்டம் ஒன்றின் உட்புறத்தில் தமிழ்-பிராமி எழுத்துக்களில் வரையப்பட்ட ஒருவருடைய பெயர் என்று கருதப்படும் ஏழு எழுத்துக்களைக் கொண்ட சொல் காணப்பட்டுள்ளது. மணிமேகலை, நற்றிணை, பதிற்றுப்பத்து, புறநானூறு முதலிய சங்கத் தமிழ் இலக்கியங்கள் விவரிக்கும் இறந்தோர் உடலைப் புதைக்கும் அல்லது இறந்தோர் எலும்புகளைப் புதைக்கும் முறை, ஆதிச்சநல்லூரில் ஒழுங்கு பிசகாமல் பின்பற்றப்பட்டுள்ளது. சரித்திர காலத்துக்கு முற்பட்ட இந்தியர் (திராவிடர்) குள்ளமான தோற்றம் உடையவர்கள் என்று இதுவரை நம்பப்பட்டதைப் பொய்யாக்கும் வகையில் இங்கு புதைக்கப்பட்டவர்கள் உயரமானவர்களாகவும் மொங்கோலிய உருவ அமைப்பின் அம்சங்களைக் கொண்டவர்களாகவும் இருந்தனர் என்று அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகவல்களை ஒருங்கு சேரப் பார்க்கையில் புதைக்கப்பட்ட மக்கள் ‘தமிழ் நாகர்’ என்று சுட்டுவனவாக உள்ளன.
 
“நாகர்களின் தசைக் கட்டமைப்பு, மஞ்சள் நிறம், சப்பை மூக்கு, சிறிய கண்கள், உயர்ந்த கன்ன எலும்புகள், அற்பதாடி முதலியவை, அவர்கள் முன்னொரு காலத்தே மொங்கோலிய இனக் குழுமத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர் என்பதைக் காட்டும்” என்று ‘இந்து வரலாறு’ (Hindu History) எனும் நூலின் ஆசிரியர் திரு.ஏ.கே.மஜும்தார் என்பார் கூறுகின்றமையும் இங்கு நோக்கத் தக்கது. “தாமிரவருணி” ஆற்றங்கரையில் உள்ள ஆதிச்சநல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட தாழிகள் போன்ற அதே வகைத் தாழிகள் பல ஆண்டுகளுக்கு முன் இலங்கையின் மேற்குப் பகுதியில் “பொம்பரிப்பு” என்று தவறாக உச்சரிக்கப்படும் ‘பொன்பரப்பி’ (தாமிரவருணி) என்ற ஊரிலும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இவை முறையான ஆய்வுக்குட்படுத்தப்பட்டால் புத்தர் பிறப்பதற்கு குறைந்தது 500 வருடங்களுக்கு முன்னரே இலங்கையில் தமிழ் நாகர்கள் வாழ்ந்த உண்மை நிரூபணமாகும். இவ்வாறான தாழிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன் கோவிலையடுத்த குவளக்கரைக் கிராமத்திலும், திருநெல்வேலிக்கு மேற்கே சேரநாடாகிய கேரள எல்லைக்குள் கொல்லம் நகரையடுத்த அட்டமுடி ஏரிக் கரையில் மாங்காடு எனுமிடத்திலும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. (ஆதாரம்: திரு.டி.எஸ்.சுப்பிரமணியன் The Hindu இதழில் 14. மார்ச் 2004 இலும், 3. ஏப்ரல் 2005 இலும் வரைந்த கட்டுரைகளும், The Telegraph இதழில் 20. சூன் 2005 இல் திரு.எம்.ஆர்.வெங்கடேசு வரைந்த கட்டுரையும்) நாக வழிபாட்டில் திளைத்த தமிழ்த் தொல்குடியினரான நாகர்கள், நயினாதீவு மற்றும் தீவுகளிலும், யாழ். குடாநாட்டிலும் ஒரு காலத்தில் சிறப்புற வாழ்ந்தனர். பிற்காலத்தில் இந்து சமயம், பௌத்தம், கிறீத்தவம், இஸ்லாம் என்ற பிறமதப் பாதிப்புகளால் தமது நாக வழிபாட்டு அடையாளத்தை இழந்தும், சாதியக் கொடுமைகளால் ஒடுக்கப்பட்டும் நாகர்கள் இன்று சிறப்பொழிந்து போயினர். எனினும், நாகர்களின் வழிவந்த மக்கள் நயினாதீவில் நம்மத்தியில் இன்றும் உளர். கி.பி. 1620 அளவில், நயினாதீவில் அமைந்திருந்த "நயினார் கோவில்" போர்த்துக்கீசரால் தாக்கி அழிக்கப்பட்ட வேளையில், இங்கு வாழ்ந்த நாகர்வழிவந்த மக்களில் பெரும்பாலோர் தமது நயினார் கோவிலைப் பாதுகாக்கும் முயற்சியில் உயிர் இழந்தார்கள். நயினையில் இன்று வாழும் தொல் தமிழராகிய வள்ளுவ சமுதாயத்தவர்கள் எஞ்சிய நாகர்களின் நேரடிப் பிற்சந்ததியார் ஆவர். இவர்களே நயினையின் முதற் குடிகள் ஆவர்.
 
==தமிழ் மற்றும் இலங்கை இலக்கியங்களில் நாகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நாகர்_(தமிழகம்_மற்றும்_இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது