சகாரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎அமைவிடம்: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளம்: கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎அமைவிடம்: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளம்: கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 109:
==அமைவிடம்==
 
சஹாரா பாலைவனத்திற்கு மேற்கில் அட்லாண்டிக் கடலும், வட திசையில் அத்திலசு மலையும் மத்தியத்தரைக்கடல் பகுதிகளும், கிழக்கில் செங்கடலும், தெற்கில் சூடான் பகுதிகளும் எல்லைகளாக அமைந்துள்ளன. சஹாரா பாலைவனம் அல்ஜீரியா, தசாது, எகிப்து, எரித்திரியா, லிபியா, மாலி, மௌரிடானியா, மொரோக்கோ, நைகர், சூடான், தூனிசியா, மேற்கு சஹாரா ஆகிய பன்னிரண்டு நாடுகள் வரை பரந்து விரிந்துள்ளது. இப்பாலைவனம் செங்கடலில் ஆரம்பித்து மெடிட்டேரியன்மத்தியத்தரைக் கடற்பகுதி மற்றும் அட்லான்டிக் பெருங்கடல் ஆகிய நீர்ப்பரப்புகளை இணைக்கின்றது. சஹாரா பாலைவனம் 9,065,000 சதுர கிலோமீட்டர் அளவு கொண்டது. ஆனால் இது காலத்திற்குக் காலம் மாறுபடுகின்றது.
 
சஹாரா ஆபிரிக்க கண்டத்தில் உள்ள மிகப் பெரிய பாலைவனமாகும். சஹாரா தெற்கு எல்லையாக சகேலில் எனும் சவன்னா புல்வெளி உள்ளது. சகேலிலிற்கு தெற்கே தெற்கு சூடான் நாடும் காங்கோ வடிநிலப் பகுதியும் உள்ளன. சஹாராவின் பெரும்பாலான பகுதி பாறைகற்களை கொண்டுள்ளது; மணற்குன்றுகளால் மூடப்பட்டிருக்கும் சிறிய பகுதி மட்டுமே மூடியுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சகாரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது