சீமைக்காரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Firestop mortar mixing.jpg|thumb|260 px|சீமைக்காரை]]
'''சீமைக்காரை''' (''cement'', '''சிமெந்து''') என்பது, முக்கியமான ஒரு [[கட்டிடப் பொருள்]] ஆகும். இது ஒரு சிறந்த இணைபொருள் (binder). [[தூள்]] வடிவில் உள்ள இது நீருடன் கலக்கும்போது, இறுகிக் கடினமாவதுடன், ஏனைய பொருட்களையும் இணைக்கும் தன்மையைப் பெறுகிறது. பழங்காலத்திலேயே உரோமர் [[எரிமலைச் சாம்பல்]], [[செங்கல்]] துண்டுகள், சுடப்பட்ட [[சுண்ணாம்பு]] ஆகியவற்றைச் சேர்த்து ஒருவகைச் சீமைக்காரையைச் செய்து பயன்படுத்தினர்.
 
தற்காலத்தில் சீமைக்காரையின் மிக முக்கியமான பயன்பாடு, [[பைஞ்சுதை]] மற்றும் [[சீமைக்காரைச் சாந்து]] தயாரிப்பு ஆகும். இயற்கையாகக் கிடைக்கின்ற அல்லது செயற்கையாகத் தயாரிக்கப்படும் சேர்பொருட்களைச் சீமைக்காரையுடன் கலந்து செய்யப்படும் இப்பொருட்கள் பொதுவான சூழல் நிலைமைகளில் நீடித்து உழைக்கக்கூடிய கட்டடப்பொருளாகும். சீமைக்காரை நீரியற் சீமைக்காரை (Hydraulic cement), நீரியலில் சீமைக்காரை (non-hydraulic cement) என இருவகைப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/சீமைக்காரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது