சாண்டில்யன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎புதினங்கள்: ஆதாரங்களை இணைத்தல் சிறப்பு
சி ஆதாரம் இணைத்தல்
வரிசை 22:
 
==இளமைப்பருவம்==
பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள [[திருக்கோவிலூர்|திருக்கோவிலூரில்]] நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. <ref name=dinamani>[http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/article1204056.ece?service%3Dprint&ei=SS88moav&lc=en-IN&s=1&m=49&host=www.google.co.in&ts=1467434160&sig=AKOVD64RlNcBA38oBP1Csl4C5W8I59sRog சரித்திர நாவலில் வரலாறு படைத்த சாண்டில்யன் - தினகரன்- அக்டோபர் 31 - 2010]</ref>[[சென்னை]]யில் உள்ள [[பச்சையப்பன் கல்லூரி|பச்சையப்பா]] மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். [[திருச்சி]] செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது [[ராஜாஜி|சி. ராஜகோபாலாச்சாரியின்]] தாக்கத்தால் [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய சுதந்திர போரட்டத்தில்]] இணைந்து [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.
 
==தொழில் வாழ்க்கை==
கல்லூரிப் படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை [[தியாகராய நகர்|தி.நகரில்]] குடியேறினார். அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் [[கல்கி கிருஷ்ணமூர்த்தி]] மற்றும் [[திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு. வி. க]] நடத்திய வார இதழ் ''நவசக்தியில்'' பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். <ref name=dinamani/> அவர்கள் அளித்த ஊக்கத்தால் [[சிறுகதை]]கள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை ''சாந்தசீலன்'' ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, ''கண்ணம்மாவின் காதலி'', ''அதிர்ஷ்டம்'' என்ற இரு சிறுகதைகளை [[ஆனந்த விகடன்|ஆனந்த விகடனில்]] வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. ''[[சுதேசமித்திரன்]]'' வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ''[[ஹிந்துஸ்தான் டைம்ஸ்|ஹிந்துஸ்தான் டைம்சில்]]'' உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.
 
==திரைப்படத்துறையில் ==
"https://ta.wikipedia.org/wiki/சாண்டில்யன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது